டொயோட்டா ஹைலக்ஸ் பிரிமீயம் பிக்கப் டிரக் விரைவில் அறிமுகமாகிறது!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் வாகனம் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டொயோட்டா ஹைலக்ஸ் பிரிமீயம் பிக்கப் டிரக் விரைவில் அறிமுகமாகிறது!

இந்தியாவில் ஆஃப்ரோடு வாகனங்களுக்கு பெரிய அளவிலான வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்த சந்தையில் ஏராளமான எஸ்யூவி தேர்வுகள் உள்ள நிலையில், இசுஸு நிறுவனத்தின் வி க்ராஸ் பிக்கப் டிரக் அதிக வரவேற்பை பெற்றது. ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற அதிக அம்சங்களுடன் தனித்துவமான தேர்வாக இருப்பதால் அதிக கவனத்தை ஈர்த்தது.

டொயோட்டா ஹைலக்ஸ் பிரிமீயம் பிக்கப் டிரக் விரைவில் அறிமுகமாகிறது!

இதனை பார்த்து டொயோட்டா நிறுவனம் தனது ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கை இந்தியாவில் களமிறக்குவதற்கு தீவிரம் காட்டி வருகிறது. இந்த புதிய பிக்கப் டிரக் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக ஆட்டோகார் இந்தியா செய்தி தெரிவிக்கிறது. அதாவது, வரும் பண்டிகை காலத்தையொட்டி வரும் என தெரிகிறது.

டொயோட்டா ஹைலக்ஸ் பிரிமீயம் பிக்கப் டிரக் விரைவில் அறிமுகமாகிறது!

இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் உள்ளிட்ட இந்தியாவின் மிகவும் பிரபலமான மாடல்கள் உருவாக்கப்பட்ட அதே கட்டமைப்புக் கொள்கையில்தான் இந்த புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா ஹைலக்ஸ் பிரிமீயம் பிக்கப் டிரக் விரைவில் அறிமுகமாகிறது!

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் 5,285 மிமீ நீளம் கொண்டதாகவும், 3,085 மிமீ வீல்பேஸ் நீளத்தை பெற்றுள்ளது. இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனரை விட பரிமாணத்தில் பெரிய மாடலாக இருக்கும்.

டொயோட்டா ஹைலக்ஸ் பிரிமீயம் பிக்கப் டிரக் விரைவில் அறிமுகமாகிறது!

புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் வரலாம்.

டொயோட்டா ஹைலக்ஸ் பிரிமீயம் பிக்கப் டிரக் விரைவில் அறிமுகமாகிறது!

பின்புறத்தில் லீஃப் ஸ்பிரிங் வகை சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டு இருப்பது இதன் முக்கிய அம்சமாக இருக்கும். இதனால், மிக மோசமான, கரடுமுரடான நிலபரப்புகளையும் அனாயசமாக கையாளும்.

டொயோட்டா ஹைலக்ஸ் பிரிமீயம் பிக்கப் டிரக் விரைவில் அறிமுகமாகிறது!

புதிய ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கின் விலையை மிக சவாலாக நிர்ணயிக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அறிமுகம் செய்யப்பட்டால் இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கிற்கு நேரடியாக போட்டி போடும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
According to report, Toyota is planning to launch Hilux pick up truck in India very soon.
Story first published: Thursday, June 3, 2021, 16:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X