டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி எர்டிகா... அறிமுகம் எப்போது?

டொயோட்டா பிராண்டில் மாருதி எர்டிகா கார் ரீபேட்ஜ் செய்யப்பட்டு வர இருக்கிறது. இந்த புதிய மாடல் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற விபரமும் வெளியாகி இருக்கிறது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி எர்டிகா... எப்போது அறிமுகம்?

நாட்டின் முன்னணி கார் நிறுவனங்களான மாருதி சுஸுகியும், டொயோட்டாவும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவது தெரிந்ததே. புதிய கார்களுக்கான முதலீடுகளை குறைத்து லாபத்தை பெருக்கும் வகையில் இந்த கூட்டணி உத்திகளை வகுத்து திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி எர்டிகா... எப்போது அறிமுகம்?

அந்த வகையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களை டொயோட்டா தனது பிராண்டில் பெயர் மாற்றம் செய்து வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே, மாருதி பலேனோ கார் க்ளான்ஸா என்ற பெயரிலும், விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி அர்பன் க்ரூஸர் என்ற பெயரிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி எர்டிகா... எப்போது அறிமுகம்?

இதைத்தொடர்ந்து, அடுத்து மாருதி சியாஸ் மற்றும் எர்டிகா கார்களை ரீபேட்ஜ் செய்து தனது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது டொயோடடா கார் நிறுவனம். இந்த நிலையில், மாருதி எர்டிகா கார் எப்போது டொயோட்டா பிராண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி எர்டிகா... எப்போது அறிமுகம்?

அதாவது, வரும் ஆகஸ்ட் மாதம் மாருதி எர்டிகா கார் டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக காடிவாடி தள செய்தி தெரிவிக்கிறது. மேலும், எர்டிகா காரை ரீபேட்ஜ் செய்யும் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் தெரிகிறது.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி எர்டிகா... எப்போது அறிமுகம்?

எனவே, வரும் பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்குவோருக்கு டொயோட்டா பிராண்டில் இந்த மாருதி எர்டிகா காரும் தேர்வுக்கு இணைந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. மாருதி எர்டிகா காரில் இருந்து க்ரில் உள்ளிட்ட சில சிறிய வேறுபாடுகள் மட்டுமே செய்யப்பட்டு இருக்கும்.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி எர்டிகா... எப்போது அறிமுகம்?

மற்றபடி, எஞ்சின், தொழில்நுட்ப வசதிகள் அனைத்திலும் எந்த வேறுபாடுகளும் இருக்காது. மாருதி எர்டிகா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் பயன்படுத்தப்படுகிறது. இதே எஞ்சின்தான் டொயோட்டா பிராண்டிலும் பயன்படுத்தப்படும்.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி எர்டிகா... எப்போது அறிமுகம்?

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி எர்டிகா... எப்போது அறிமுகம்?

டொயோட்டா பிராண்டில் டாப் வேரியண்ட்டுகளில் மட்டுமே வழங்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, மாருதி எர்டிகா காரின் ஆரம்ப விலையைவிட டொயோட்டா பிராண்டில் வரும் எர்டிகா ஆரம்ப விலை என்பது அதிகமாகவே இருக்கும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
According to a media report, Toyota is planning to launch a rebadged version of the Ertiga by August this year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X