ஆர்ஏவி4 காரை இந்தியா கொண்டுவர தீவிரம் காட்டும் டொயோட்டா!! டெல்லியில் சோதனை ஓட்டம்!

இந்த 2021ஆம் ஆண்டு முடிவதற்குள்ளாக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் டொயோட்டா ஆர்ஏவி4, டெல்லி-என்சிஆர் சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆர்ஏவி4 காரை இந்தியா கொண்டுவர தீவிரம் காட்டும் டொயோட்டா!! டெல்லியில் சோதனை ஓட்டம்!

இந்திய சந்தைக்கான ஆர்ஏவி4 காரின் தயாரிப்பு பணிகளில் டொயோட்டா நிறுவனம் ஈடுப்பட்டு வருவதாக கடந்த வருடத்தில் கூறியிருந்தோம். அதனை தொடர்ந்து இந்த டொயோட்டா கார் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது.

ஆர்ஏவி4 காரை இந்தியா கொண்டுவர தீவிரம் காட்டும் டொயோட்டா!! டெல்லியில் சோதனை ஓட்டம்!

இதனால் ஆர்ஏவி4 காரின் இந்திய அறிமுகம் இந்த 2021-க்குள் இருக்கலாம். காடிவாடி செய்திதளம் மூலம் கிடைத்துள்ள சமீபத்திய ஸ்பை படங்களில் ஹைப்ரீட் முத்திரை உடன் டொயோட்டா ஆர்ஏவி4 காரை பார்க்க முடிகிறது.

ஆர்ஏவி4 காரை இந்தியா கொண்டுவர தீவிரம் காட்டும் டொயோட்டா!! டெல்லியில் சோதனை ஓட்டம்!

இதனால் இது ஆர்ஏவி4 காரின் ஹைப்ரீட் வெர்சனாக இருக்கலாம். அதேபோல் காரின் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ள 8.0 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் இந்த ஸ்பை படங்கள் வெளிக்காட்டுகின்றன.

ஆர்ஏவி4 காரை இந்தியா கொண்டுவர தீவிரம் காட்டும் டொயோட்டா!! டெல்லியில் சோதனை ஓட்டம்!

காரில் கதவு கைப்பிடிகளில் மற்றும் ஜன்னல்களின் கண்ணாடி மேற்புறத்தில் க்ரோம் வழங்கப்பட, டிஸ்க் ப்ரேக்குகளை கொண்ட அலாய் சக்கரங்கள் 5-ஸ்போக் டிசைனில் காட்சியளிக்கின்றன. பக்கவாட்டு பிளாஸ்டிக் கிளாடிங்கிற்கு மேற்புறத்தில் சக்கர வளைவுகளும் பிளாஸ்டிக்கில் வழங்கப்பட்டுள்ளன.

ஆர்ஏவி4 காரை இந்தியா கொண்டுவர தீவிரம் காட்டும் டொயோட்டா!! டெல்லியில் சோதனை ஓட்டம்!

டொயோட்டா ஆர்ஏவி4 காரானது ஒட்டு மொத்தமாக பார்த்தோமேயானால், பெட்டகம் வடிவத்தை கொண்டது. வாகனத்தை சுற்றிலும் ஹெட்லைட்கள், டெயில்லைட்கள் மற்றும் டிஆர்எல்கள் உள்ளிட்டவை எல்இடி தரத்தில் வழங்கப்பட்டுள்ளன.

ஆர்ஏவி4 காரை இந்தியா கொண்டுவர தீவிரம் காட்டும் டொயோட்டா!! டெல்லியில் சோதனை ஓட்டம்!

காரின் வெளிப்புறத்தில் வழங்கப்பட்டுள்ள மற்ற அம்சங்களாக எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களுடன் பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள், மேற்கூரை தண்டவாளங்கள் மற்றும் மேற்கூரையின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்ட ஸ்போர்டியான ஸ்பாய்லர் உள்ளிட்டவை உள்ளன.

ஆர்ஏவி4 காரை இந்தியா கொண்டுவர தீவிரம் காட்டும் டொயோட்டா!! டெல்லியில் சோதனை ஓட்டம்!

சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள ஆர்ஏவி4 காரில் பாதசாரிகளை அடையாளப்படுத்தும் தொழிற்நுட்பத்துடன் (மற்றும் ஆட்டோமேட்டிக் அவசரகால ப்ரேக்க்கிங்) விபத்தை தவிர்க்கும் அமைப்பு, டைனாமிக் க்ரூஸ் கண்ட்ரோல், இயங்கும் பாதையை தொடர உதவும் வசதி, தானியங்கி ஹை பீம் மற்றும் சாலைகளின் ஓரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சைகை சிக்னல்களை கண்டறியும் வசதி உள்ளிட்டவை அடங்கிய டொயோட்டாவின் பாதுகாப்பு உணர்வு 2.0 என்ற தொகுப்பு வழங்கப்படுகிறது.

ஆர்ஏவி4 காரை இந்தியா கொண்டுவர தீவிரம் காட்டும் டொயோட்டா!! டெல்லியில் சோதனை ஓட்டம்!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு டொயோட்டா ஆர்ஏவி4 ஹைப்ரீட் காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் சிவிடி கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்படுகிறது. மேலும் இந்த என்ஜின் உடன் முன்சக்கர ட்ரைவ் வேரியண்ட்டில் ஒரு எலக்ட்ரிக் மோட்டாரும், அனைத்துசக்கர ட்ரைவ் வேரியண்ட்டில் இரு எலக்ட்ரிக் மோட்டார்களும் உதவிக்காக இணைக்கப்படுகின்றன.

ஆர்ஏவி4 காரை இந்தியா கொண்டுவர தீவிரம் காட்டும் டொயோட்டா!! டெல்லியில் சோதனை ஓட்டம்!

இதில் முன்சக்கர வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 215 பிஎச்பி பவரையும், அனைத்துசக்கர ட்ரைவ் வேரியண்ட்டில் சற்று கூடுதலாக 221 பிஎச்பி பவரையும் பெற முடியும். ஆனால் நமது இந்திய சந்தையை பொறுத்தவரையில் அனைத்து சக்கர ட்ரைவ் வேரியண்ட்டை எதிர்பார்க்க முடியாது.

ஆர்ஏவி4 காரை இந்தியா கொண்டுவர தீவிரம் காட்டும் டொயோட்டா!! டெல்லியில் சோதனை ஓட்டம்!

இந்தியாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிபியூ (முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்படுவது) முறையிலேயே டொயோட்டா ஆர்ஏவி4 கார் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் வரிகளை எல்லாம் சேர்த்து பார்த்தால், இந்த டொயோட்டா காரின் விலை ரூ.60 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota RAV4 Spied Testing In Delhi-NCR, Launch Expected This Year. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X