டொயோட்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரின் டீசர் வெளியீடு!

டொயோட்டா நிறுவனம் ஒருவழியாக தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை வெளியிட இருக்கிறது. இதன் வருகையையும், ஆவலையும் அதிகரிக்கும் விதத்தில் டொயோட்டா நிறுவனம் டீசர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது. இந்த கார் குறித்த பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரின் டீசர்!

எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், பாரம்பரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி பல புதிய நிறுவனங்களும் இந்த சந்தையில் களமிறங்கி வருகின்றன. பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க துவக்க நிலையை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

ஆனால், உலகின் மிகப்பெரிய கார் நிறுவனமாகவும், ஹைப்ரிட் கார் தயாரிப்பில் முன்னோடியாகவும் உள்ள டொயோட்டா இதுவரை எலெக்ட்ரிக் கார் மாடலை கொண்டு வரவில்லை. இந்த சூழலில், தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை வரும் 17ந் தேதி உலக அளவில் வெளியிட உள்ளது.

இந்த அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு ஒரு வாரம் உள்ள நிலையில், தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலின் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. டொயோட்டா எக்ஸ் புரோலோக் என்ற பெயரில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் அழைக்கப்படுகிறது.

டொயோட்டா கார் நிறுவனத்தின் e-TNGA என்ற மின்சார வாகனங்களுக்கான புதிய கட்டமைப்புக் கொள்கையில் இந்த கார் மாடலை உருவாக்கி இருக்கிறது. இந்த கட்டமைப்புக் கொள்கையின் கீழ் சுபரூ, லெக்சஸ் உள்ளிட்ட பிராண்டுகளின் மின்சார வாகனங்களும் உருவாக்கப்பட உள்ளன.

மேலும், இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் ஃப்ரண்ட் வீல் டிரைவ், ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட எலெக்ட்ரிக் கார்களையும், எஸ்யூவி உள்பட பல்வேறு வகையிலான கார்களை உருவாக்குவதற்கும் இந்த கட்டமைப்புக் கொள்கையை பயன்படுத்த முடியும்.

புதிய எக்ஸ் புரோலோக் எலெக்ட்ரிக் கார் மாடலானது க்ராஸ்ஓவர் மிட்சைஸ் க்ராஸ்ஓவர் மாடலாக இருக்கும் என்று தெரிகிறது. டீசர் படத்தில் எல்இடி லைட் முன்புறத்திற்கு வசீகரத்தை கொடுக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota has teased of it's first electric car X Prologue ahead of global reveal next week.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X