இந்தியாவில், மல்டி பிராண்டு கார் சர்வீஸ் மையங்களை திறந்தது டொயோட்டா!

அனைத்து நிறுவனங்களின் கார்களையும் சர்வீஸ் செய்து தரும் மல்டி பிராண்டு கார் சர்வீஸ் சேவையை இந்தியாவில் துவங்கி இருக்கிறது டொயோட்டா கார் நிறுவனம். முதல்கட்டமாக 5 கார் சர்வீஸ் சென்டர்களை பெங்களூர் நகரில் திறந்துள்ளது.

இந்தியாவில், மல்டி பிராண்டு கார் சர்வீஸ் மையங்களை திறந்தது டொயோட்டா!

டொயோட்டா T-Serv என்ற பெயரில் இந்த புதிய மல்டி பிராண்டு கார் சர்வீஸ் செயல்படும். வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சேவையை வழங்கவும், கார் உரிமையாளர்கள் பழுது நீக்கும் சேவையில் எதிர்பார்க்கும் விஷயங்களை மனதில் வைத்தும் இந்த பிரிவு செயல்படும்.

இந்தியாவில், மல்டி பிராண்டு கார் சர்வீஸ் மையங்களை திறந்தது டொயோட்டா!

இதற்காக, பெங்களூரில் 5 அங்கீகரிக்கப்பட்ட கார் சர்வீஸ் சென்டர்களை டொயோட்டா டி-சர்வ் பிரிவு நியமித்துள்ளது. இந்த ஒர்க்ஷாப்புகளில் பணிபுரியும் மெக்கானிக், சூப்பர்வைசர் உள்ளிட்டோர் டொயோட்டா நிறுவனத்திடம் இருந்து சிறப்பு பயிற்சியும் பெற்றுள்ளனர்.

இந்தியாவில், மல்டி பிராண்டு கார் சர்வீஸ் மையங்களை திறந்தது டொயோட்டா!

டொயோட்டா டி-சர்வ் கீழ் செயல்படும் மல்டி பிராண்டு கார் சர்வீஸ் மையங்களில் கார் நிறுவனங்களின் ஒரிஜினல் உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படும். இதற்காக, பாஷ் உள்ளிட்ட உதிரிபாகங்கள் சப்ளையர்களுடன் டொயோட்டா டி-சர்வ் பிரிவு ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கார் சர்வீஸ் செய்து கொள்ளும் வாய்ப்பை வழங்கும்.

இந்தியாவில், மல்டி பிராண்டு கார் சர்வீஸ் மையங்களை திறந்தது டொயோட்டா!

இந்த சர்வீஸ் மையங்களில் கார்களுக்கு தேவைப்படும் வழக்கமான பராமரிப்புப் பணிகள், பொதுவான பழுது நீக்கும் பணிகள் உள்ளிட்ட சேவைகளை பெற முடியும். டொயோட்டா டி-சர்வ் மல்டி பிராண்டு கார் சர்வீஸ் பிரிவிற்காக பிரத்யேக ஸ்மார்ட்ஃபோன் செயலியையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில், மல்டி பிராண்டு கார் சர்வீஸ் மையங்களை திறந்தது டொயோட்டா!

T-Serv Customer App என்ற பெயரில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக கார் சர்வீஸ் மையத்தின் பணிகளை அந்த ஒர்க்ஷாக் மேலாளர் மற்றும் உரிமையாளர் எளிதாக கண்காணிக்க முடியும். வாடிக்கையாளர்களுடனும் தொடர்பில் இருக்க இந்த செயலி உதவும்.

இந்தியாவில், மல்டி பிராண்டு கார் சர்வீஸ் மையங்களை திறந்தது டொயோட்டா!

கார் பாடி ஒர்க், பெயிண்ட் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் இந்த மையங்களில் செய்து தரப்படும். தவிரவும், டொயோட்டா டி-சர்வ் பிராண்டு மூலமாக கார்களுக்கான ஆக்சஸெரீகள் மற்றும் கார் பராமரிப்புக்கு தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.

இந்தியாவில், மல்டி பிராண்டு கார் சர்வீஸ் மையங்களை திறந்தது டொயோட்டா!

இந்த புதிய டொயோட்டா டி-சர்வ் கார் சர்வீஸ் சென்டர்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்பதுடன், தரமான உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுவதும், சரியான கட்டணத்தில் கார்களை சர்வீஸ் செய்வதற்குமான வாய்ப்பை பெற்றுத் தரும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota has announced the introduction of a pilot project, called T-Serv in Bangalore. The company has partnered with multi-brand service outlets for the new project, hoping to offer quality car servicing.
Story first published: Friday, February 19, 2021, 14:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X