புதிய லேண்ட் க்ரூஸரின் அறிமுகத்தை மீண்டும் உறுதிப்படுத்திய டொயோட்டா!! ஜூன் 9ல் உலகளாவிய அறிமுகம்...

புதிய 2021 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரின் உலகளாவிய அறிமுகம் மீண்டும் புதிய டீசர் படம் ஒன்றின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய லேண்ட் க்ரூஸரின் அறிமுகத்தை மீண்டும் உறுதிப்படுத்திய டொயோட்டா!! ஜூன் 9ல் உலகளாவிய அறிமுகம்...

ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டாவின் புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸர் கார் வெளிநாடுகளில் கடந்த சில மாதங்களாக தீவிரமாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வந்தது.

புதிய லேண்ட் க்ரூஸரின் அறிமுகத்தை மீண்டும் உறுதிப்படுத்திய டொயோட்டா!! ஜூன் 9ல் உலகளாவிய அறிமுகம்...

அந்த சமயத்தில் இணையத்தில் வெளியாகும் ஸ்பை படங்களின் மூலமாக இந்த புதிய தலைமுறை டொயோட்டா காரை பற்றிய முக்கிய சில விபரங்கள் ஏற்கனவே நமக்கு தெரியவந்துவிட்டன. அதனை தொடந்து புதிய லேண்ட் க்ரூஸரின் அறிமுகம் ஜூன் 9ஆம் தேதியில் என்று டொயோட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

புதிய லேண்ட் க்ரூஸரின் அறிமுகத்தை மீண்டும் உறுதிப்படுத்திய டொயோட்டா!! ஜூன் 9ல் உலகளாவிய அறிமுகம்...

இந்த நிலையில் தான் தற்போது 2021 லேண்ட் க்ரூஸரின் உலகளாவிய அறிமுகத்தை மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் புதிய டீசர் படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் காரின் பின்பக்க எல்இடி டெயில்லைட் ஒன்றை மட்டுமே பார்க்க முடிகிறது.

புதிய லேண்ட் க்ரூஸரின் அறிமுகத்தை மீண்டும் உறுதிப்படுத்திய டொயோட்டா!! ஜூன் 9ல் உலகளாவிய அறிமுகம்...

இன்னும் சொல்ல போனால், காரின் அறிமுக தேதி இந்த படத்தில் குறிப்பிடப்படவில்லை. எல்சி300, உலக ப்ரீமியர், லேண்ட் க்ரூஸர் என்ற ஹேஸ்டேக்குகளே பதிவிடப்பட்டுள்ளன. புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸரின் வெளிப்புறத்தில் மாற்றங்கள் பெரும்பாலும் முன்பக்கத்தில் தான் கொண்டுவரப்படும்.

புதிய லேண்ட் க்ரூஸரின் அறிமுகத்தை மீண்டும் உறுதிப்படுத்திய டொயோட்டா!! ஜூன் 9ல் உலகளாவிய அறிமுகம்...

அதாவது காரின் முன்பக்க க்ரில், பம்பர், க்ரோம் பார்டர் உடன் ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவற்றின் வடிவம் திருத்தியமைக்கப்பட உள்ளது. அதேநேரம் முன்பக்கத்திற்கு ஏற்ப காரின் பின்பக்கத்திலும் பம்பர் மற்றும் பின் கதவின் தோற்றத்தில் வித்தியாசத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

புதிய லேண்ட் க்ரூஸரின் அறிமுகத்தை மீண்டும் உறுதிப்படுத்திய டொயோட்டா!! ஜூன் 9ல் உலகளாவிய அறிமுகம்...

2021 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 காரின் உட்புறத்தில் பெரியளவிலான திரை உடன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், இரட்டை-பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஏசி கண்ட்ரோலிற்கு அழுத்து பொத்தான்கள் மற்றும் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

புதிய லேண்ட் க்ரூஸரின் அறிமுகத்தை மீண்டும் உறுதிப்படுத்திய டொயோட்டா!! ஜூன் 9ல் உலகளாவிய அறிமுகம்...

கூடுதல் ஆஃப்-ரோடு திறன்களை பெற்றுவரும் புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸரில் 3.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.3 லிட்டர் டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகளை வழங்க டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய லேண்ட் க்ரூஸரின் அறிமுகத்தை மீண்டும் உறுதிப்படுத்திய டொயோட்டா!! ஜூன் 9ல் உலகளாவிய அறிமுகம்...

இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 409 பிஎச்பி மற்றும் 650 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் 302 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2021 Toyota Landcruiser Teased. Read Full Details In Tamil.
Story first published: Tuesday, June 8, 2021, 8:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X