இந்தியாவில் யாரிஸின் இடத்தை நிரப்ப வரும் டொயோட்டா பெல்டா!! கவனத்தை பெறுமா?

டொயோட்டா நிறுவனம் யாரிஸ் செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் ஏற்கனவே நிறுத்துவிட்டது. இருப்பினும் ஸ்டாக்கில் உள்ள சில யாரிஸ் கார்கள் சில டீலர்ஷிப் ஷோரூம்களில் விற்பனையில் உள்ளன.

இந்தியாவில் யாரிஸின் இடத்தை நிரப்ப வரும் டொயோட்டா பெல்டா!! கவனத்தை பெறுமா?

இருப்பினும் இவற்றின் விற்பனை நீண்ட நாட்களுக்கு இருக்காது. இந்த நிலையில் யாரிஸின் இடத்தை நிரப்பும் விதத்தில் டொயோட்டா அடுத்ததாக பெல்டா என்ற செடான் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் யாரிஸின் இடத்தை நிரப்ப வரும் டொயோட்டா பெல்டா!! கவனத்தை பெறுமா?

மாருதி சியாஸ் செடான் காரின் ரீபேட்ஜ்டு வெர்சனான பெல்டா இந்திய ஷோரூம்களை வரும் ஆகஸ்ட் மாதத்தில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி கார்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மற்ற டொயோட்டா கார்களை போன்று இந்த பெல்டாவும் நல்ல வரவேற்பை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் யாரிஸின் இடத்தை நிரப்ப வரும் டொயோட்டா பெல்டா!! கவனத்தை பெறுமா?

யாரிஸின் விற்பனை பெரிய அளவில் இல்லாததினால் தான் அதன் தயாரிப்பை டொயோட்டா நிறுத்தியது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வென்யூ மற்றும் மாருதி சியாஸ் என அதன் பிரிவில் உள்ள மற்ற செடான் கார்கள் எதற்கும் யாரிஸ் போட்டியாக இருந்ததில்லை. கடந்த 2021 மார்ச் மாதத்தில் வெறும் 871 யாரிஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.

இந்தியாவில் யாரிஸின் இடத்தை நிரப்ப வரும் டொயோட்டா பெல்டா!! கவனத்தை பெறுமா?

விற்பனை சரியாக இல்லாதது மட்டுமின்றி, ஹூண்டாய் க்ரெட்டாவின் தொடர் ஆதிக்கத்தை முறியடிக்கும் நோக்கத்தில் மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளுக்கு தொழிற்சாலையில் இடத்தை கொடுக்கவும் யாரிஸின் தயாரிப்பு நிறுத்தி கொள்ளப்பட்டது.

இந்தியாவில் யாரிஸின் இடத்தை நிரப்ப வரும் டொயோட்டா பெல்டா!! கவனத்தை பெறுமா?

பெல்டா என்பது ஆஸ்திரேலிய ஆங்கில சொல்லகராதியில் உண்மையான பட்டாசு என்று அர்த்தமாகும். இந்த பெயரை ஏற்கனவே உலகளவில் ஜப்பானிய டொயோட்டா நிறுவனம் பதிவு செய்து வைத்துள்ளது.

இந்தியாவில் யாரிஸின் இடத்தை நிரப்ப வரும் டொயோட்டா பெல்டா!! கவனத்தை பெறுமா?

இதனால் இந்த பெயர் சியாஸின் மறுவடிவமைப்பு வெர்சனிற்கு சூட்டவதில் டொயோட்டாவிற்கு பெரிய அளவில் வேலையும் இருந்திருக்காது. என்ஜின் & ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளில் சியாஸிற்கும், அதன் டொயோட்டா வெர்சனுக்கும் இடையே எந்த வேறுபாடும் இருக்காது.

இந்தியாவில் யாரிஸின் இடத்தை நிரப்ப வரும் டொயோட்டா பெல்டா!! கவனத்தை பெறுமா?

சியாஸில் வழங்கப்படும் அதே 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் தான் பெல்டாவிலும் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 105 எச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்தியாவில் யாரிஸின் இடத்தை நிரப்ப வரும் டொயோட்டா பெல்டா!! கவனத்தை பெறுமா?

அதேபோல் இந்த பெட்ரோல் என்ஜின் உடன் வழக்கமான மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டமும், 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் பெல்டாவிலும் தொடரப்படலாம். பெல்டாவில் வேரியண்ட்களின் வரிசையும், அவற்றிற்கான எக்ஸ்ஷோரூம் விலைகளும் சற்று வித்தியாச முறையில் கணக்கிடப்பட்டு நிர்ணயிக்கப்படலாம்.

இந்தியாவில் யாரிஸின் இடத்தை நிரப்ப வரும் டொயோட்டா பெல்டா!! கவனத்தை பெறுமா?

ஏனெனில் மாருதி டீலர்ஷிப் ஷோரூம்களை போல் டொயோட்டாவின் இந்திய ஷோரூம்களுக்கு அதிகளவில் கூட்டம் வருவதில்லை. இதனால் காரில் பயண அனுபவத்தை கூடுதல் மென்மையானதாக கொண்டுவரவே டொயோட்டா விரும்பும்.

இந்தியாவில் யாரிஸின் இடத்தை நிரப்ப வரும் டொயோட்டா பெல்டா!! கவனத்தை பெறுமா?

இதனால் க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் என மாருதி கார்களின் ரீபேட்ஜ்டு வெர்சன்களை போல் பெல்டாவிற்கும் தைரியமாக அதிகப்படியான உத்தரவாதங்களை டொயோட்டா வழங்கும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Yaris Production Stopped In India: Maruti Suzuki Ciaz Based Belta Sedan To Replace
Story first published: Friday, May 21, 2021, 21:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X