இந்தியாவில் களமிறங்கும் ட்ரைட்டன் மின்சார வாகன நிறுவனம்... டெஸ்லாவுக்கு கடும் போட்டி!

டெஸ்லா நிறுவனத்திற்கு கடும் சவாலை அளிக்கும் விதத்தில், சிறந்த தயாரிப்புகளுடன் களமிறங்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது ட்ரைட்டன் நிறுவனம். மேலும், தனது நிறுவனத்தை இந்தியாவில் முறைப்படி பதிவு செய்துள்ளது.

 இந்தியாவில் நிறுவனத்தை பதிவு செய்தது ட்ரைட்டன்... டெஸ்லாவுக்கு கார்களுக்கு கடும் போட்டி!

அமெரிக்காவின் நியூஜெர்ஸியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ட்ரைட்டன் நிறுவனம் எலெக்ட்ரிக் கார், எஸ்யூவி, டிரக் உள்ளிட்ட வாகனங்களை உருவாக்கி வருகிறது. அண்மையில் தனது முதல் மாடலாக N4 என்ற சொகுசு ரக மின்சார மாடலையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு ரூ.35 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 இந்தியாவில் நிறுவனத்தை பதிவு செய்தது ட்ரைட்டன்... டெஸ்லாவுக்கு கார்களுக்கு கடும் போட்டி!

இந்த நிலையில், தற்போது இந்திய வர்த்தக செயல்பாடுகளுக்காக தனது இந்தியப் பிரிவு நிறுவனத்தை முறைப்படி பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. டெஸ்லா நிறுவனம் அண்மையில் தனது இந்திய பிரிவை பதிவு செய்த நிலையில், ட்ரைட்டன் நிறுவனமும் தனது வர்த்தகத்தை துவங்குவதற்காக நிறுவனத்தை பதிவு செய்து ஆரம்ப கட்ட வர்த்தக நடவடிக்கைகளை துவங்கி இருக்கிறது.

 இந்தியாவில் நிறுவனத்தை பதிவு செய்தது ட்ரைட்டன்... டெஸ்லாவுக்கு கார்களுக்கு கடும் போட்டி!

ட்ரைட்டன் நிறுவனத்தின் நிறுவனர் ஹிமான்சு பி பட்டேல் கூறுகையில், "இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மிகப்பெரிய சந்தை உள்ளது. மாசு இல்லாத உலகை உருவாக்கும் விதத்தில், சிறந்த மின்சார வாகனங்களை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

 இந்தியாவில் நிறுவனத்தை பதிவு செய்தது ட்ரைட்டன்... டெஸ்லாவுக்கு கார்களுக்கு கடும் போட்டி!

இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டையும், உற்பத்தியையும் அதிகரிக்க அரசாங்கம் பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, இந்தியாவில் மின்சார வாகனங்களை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

 இந்தியாவில் நிறுவனத்தை பதிவு செய்தது ட்ரைட்டன்... டெஸ்லாவுக்கு கார்களுக்கு கடும் போட்டி!

மின்சார கார் மட்டுமின்றி, டிரக்குகள் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு தேவைப்படும் கவச மின்சார வாகனங்களையும் தயாரிக்க உள்ளோம். இந்தியா மட்டுமின்றி, வங்கதேசம், இலங்கை, நேபாளம், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

 இந்தியாவில் நிறுவனத்தை பதிவு செய்தது ட்ரைட்டன்... டெஸ்லாவுக்கு கார்களுக்கு கடும் போட்டி!

இந்தியாவை மிகப்பெரிய உற்பத்தி கேந்திரமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் எங்களது மின்சார வாகன ஆலைகளில் 21,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

 இந்தியாவில் நிறுவனத்தை பதிவு செய்தது ட்ரைட்டன்... டெஸ்லாவுக்கு கார்களுக்கு கடும் போட்டி!

ட்ரைட்டன் நிறுவனத்தின் முதல் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய என்4 என்ற மின்சார செடான் கார் லிமிடேட் எடிசனாக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த மாடலில் 75kWh பேட்டரி மற்றும் 100kWh பேட்டரி என இரண்டு விதமான தேர்வுகள் வழங்கப்படும். இதில், முதல் பேட்டரி மாடல் 523 கிமீ தூரம் வரையிலும், இரண்டாவது பேட்டரி மாடலானது 696 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

Most Read Articles
English summary
Triton Electric has registered a new subsidiary in India and expected to start operations very soon.
Story first published: Saturday, March 13, 2021, 15:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X