உலக நாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்த போகும் 'மேட் இன் இந்தியா' எலெக்ட்ரிக் கார்! காரணம் தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

நம்ப முடியாத சிறப்பம்சங்களுடன் வரவுள்ள 'மேட் இன் இந்தியா' எலெக்ட்ரிக் கார் ஒன்று, உலக நாடுகளையும் கலக்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலக நாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்த போகும் 'மேட் இன் இந்தியா' எலெக்ட்ரிக் கார்! காரணம் தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ட்ரைடன் இவி (Triton EV). இந்தியாவில் தொழிற்சாலையை அமைப்பது தொடர்பான தனது திட்டங்களை ட்ரைடன் இவி நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த சூழலில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், மாடல் ஹெச் (Model H) எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ட்ரைடன் இவி நிறுவனம் தற்போது காட்சிப்படுத்தியுள்ளது.

உலக நாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்த போகும் 'மேட் இன் இந்தியா' எலெக்ட்ரிக் கார்! காரணம் தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இதுதான் ட்ரைடன் இவி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் காராக இருக்க போகிறது. முதல் பார்வையிலேயே வசீகரிக்கும் வகையில் மாடல் ஹெச் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்களின் கார்களுக்கே உரிய பாணி மாடல் ஹெச் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் தென்படுகிறது.

உலக நாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்த போகும் 'மேட் இன் இந்தியா' எலெக்ட்ரிக் கார்! காரணம் தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

மாடல் ஹெச் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் நீளம் 5,690 மிமீ ஆகும். அதே சமயம் இந்த காரின் உயரம் 2,057 மிமீ ஆகவும், அகலம் 1,880 மிமீ ஆகவும் உள்ளது. இந்த பிரம்மாண்ட காரின் வீல் பேஸ் நீளம் 3,302 மிமீ ஆகும். மாடல் ஹெச் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் பெரியவர்கள் 8 பேர் சௌகரியமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்த போகும் 'மேட் இன் இந்தியா' எலெக்ட்ரிக் கார்! காரணம் தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

எனவே இந்தியாவில் அதிகபட்ச இடவசதியை வழங்கும் எலெக்ட்ரிக் காராக இது இருக்கலாம். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மூலம் சுமார் 7 டன் எடையை 'டோ' செய்து கொண்டு செல்ல முடியும். மாடல் ஹெச் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் செயல்திறன் தலைசிறந்து விளங்கும் என ட்ரைடன் இவி நிறுவனம் உறுதியளித்துள்ளது.

உலக நாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்த போகும் 'மேட் இன் இந்தியா' எலெக்ட்ரிக் கார்! காரணம் தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

மாடல் ஹெச் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 200kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படும். இது ஹைப்பர் சார்ஜ் ஆப்ஷனையும் பெற்றிருக்கும். ஹைப்பர் சார்ஜர் பயன்படுத்தினால் மாடல் ஹெச் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை வெறும் 2 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பி விட்டால் சுமார் 1,200 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும்.

உலக நாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்த போகும் 'மேட் இன் இந்தியா' எலெக்ட்ரிக் கார்! காரணம் தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

சரியாகதான் படித்துள்ளீர்கள். ஒரு முறை சார்ஜ் செய்தாலே 1,200 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கும். ட்ரைடன் இவி நிறுவனம் தெரிவித்துள்ள இந்த ரேஞ்ச் (ஒரு முறை சார்ஜ் செய்தால் பயணிக்கும் தொலைவு) உண்மை என்றால், உலக அளவில் அதிக ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக மாடல் ஹெச் எலெக்ட்ரிக் எஸ்யூவி இருக்கும்.

உலக நாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்த போகும் 'மேட் இன் இந்தியா' எலெக்ட்ரிக் கார்! காரணம் தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

ட்ரைடன் இவி நிறுவனத்தின் மாடல் ஹெச் எலெக்ட்ரிக் எஸ்யூவி மொத்தம் 7 வண்ண தேர்வுகளில் கிடைக்கும். ஐதராபாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட மாடல் ஹெச் எலெக்ட்ரிக் எஸ்யூவி மெட்டாலிக் ப்ளூ நிறத்தில் இருந்தது. ட்ரைடன் இவி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன தொழிற்சாலை, தெலங்கானா மாநிலத்தில் அமைக்கப்படுகிறது.

உலக நாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்த போகும் 'மேட் இன் இந்தியா' எலெக்ட்ரிக் கார்! காரணம் தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்பட போவதில்லை. இந்தியா மட்டுமல்லாது, வங்க தேசம், இலங்கை மற்றும் நேபாளம் போன்ற நாடுகளுக்கும் இங்கிருந்து எலெக்ட்ரிக் கார்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. மேலும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இங்கிருந்து கார்களை ஏற்றுமதி செய்வதற்கு ட்ரைடன் இவி திட்டமிட்டுள்ளது.

உலக நாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்த போகும் 'மேட் இன் இந்தியா' எலெக்ட்ரிக் கார்! காரணம் தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இது இந்தியாவிற்கு பெருமை தரக்கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை. உலகின் பல்வேறு நாடுகளில் 'மேட் இன் இந்தியா' கார்கள் விற்பனை செய்யப்படுவது நிச்சயமாக நமக்கு பெருமை தரக்கூடிய விஷயம்தான். ஃபோர்டு உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நிலையில், அதே அமெரிக்காவை சேர்ந்த ட்ரைடன் இவி போன்ற நிறுவனங்கள் இங்கு வருகை தருகின்றன.

உலக நாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்த போகும் 'மேட் இன் இந்தியா' எலெக்ட்ரிக் கார்! காரணம் தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இது சற்றே ஆறுதலான விஷயமும் கூட. இதன் மூலம் இங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதுடன், இந்தியா முதலீடுகளையும் ஈர்க்கும். அதுவும் இந்தியா தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வரும் நிலையில், ட்ரைடன் இவி போன்ற எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் வருகை புரிவது சிறப்பான விஷயம்.

உலக நாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்த போகும் 'மேட் இன் இந்தியா' எலெக்ட்ரிக் கார்! காரணம் தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இந்தியாவை தனது மிக முக்கியமான சந்தையாக ட்ரைடன் இவி நிறுவனம் கருதுகிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் இந்தியாவின் திட்டத்திற்கு, ட்ரைடன் இவி நிறுவனமும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Triton ev showcases model h electric suv heres everything you need to know
Story first published: Wednesday, October 13, 2021, 22:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X