Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மத்திய அரசின் 2021 யூனியன் பட்ஜெட் சாதகமானதா (அ) பாதகமானதா? கார் பிராண்ட்களின் இயக்குனர்களது கருத்து இதோ...
2021 யூனியன் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (பிப்ரவரி 1) வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய வாகன வாங்குதலை ஊக்குவிக்கும் பழைய வாகன அழிப்பு கொள்கை முக்கியமானதாக அங்கம் வகித்தது.
2021 பட்ஜெட்டிற்கு வாகன தயாரிப்பு நிறுவனங்களின் முதன்மை அதிகாரிகளின் நிலைப்பாடு என்ன என்பதை இந்த செய்தியில் இனி பார்க்கலாம்.

ஆஷிஷ் குப்தா, இயக்குனர், ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார்கள் பிரிவு
மாண்புமிகு நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட 2021 பட்ஜெட், பொருளாதாரத்தை பெருமளவில் புதுப்பிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு மேம்பாடு மற்றும் கிராமப்புற பொருளாதாரம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

வாகனத் துறையைப் பொறுத்தவரை, சில வாகன பாகங்கள் மீதான சுங்க வரி அதிகரிப்பு தயாரிப்பு செலவை பாதிக்கும், இருப்பினும் இது எந்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் இன்னும் மதிப்பிடவில்லை. பழைய வாகன அழிப்பு கொள்கையில், வாகனத்தின் நிலையை அறியும் சோதனையில் கடுமையாக செயல்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்க முடியும்.

விக்ரம் கிர்லோஸ்கர், துணை தலைவர், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்
தற்போதைய சூழலில் சுகாதாரம் மற்றும் நலனில் அதிக கவனம் செலுத்துவதோடு, கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையினால் விரைவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய, பொருளாதார வளர்ச்சியை வழங்குவதற்கான சவாலை எதிர்கொண்டுள்ள மாண்புமிகு நிதி அமைச்சர், நடைமுறை ரீதியான திருத்தப்பட்ட இலக்குகள் மற்றும் நிதி ஒருங்கிணைப்புக்கான சறுக்கு பாதையை அமைத்துள்ளதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் விவேகத்துடன் நிதியை பெறுவதற்கு மத்தியில் நிற்கிறார்.

மூலதனச் செலவு மற்றும் உள்கட்டமைப்பு உருவாக்கம் உள்ளிட்டவை வரி விதிப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பால் கிடைப்பவையாக இல்லாமல் கடன் வாங்குதல் மற்றும் சொத்தை பணமாக்குதல் மூலம் பெறப்படுவதாக இருக்க வேண்டும்.

வங்கிகளை தனியார்மயமாக்கல், காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் உயர் உச்சவரம்பு, உள்கட்டமைப்பிற்கான பூஜ்ஜிய-கூப்பன் பத்திரங்கள், சொத்து புனரமைப்பு மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்களின் மூலம் வங்கி செயல்படாத சொத்துக்களை சமாளித்தல் ஆகியவை அனைத்தும் வளர்ச்சியைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளன.

கொரோனா பரவலுக்கு முந்தைய நிலைகளுக்கு அப்பாற்பட்ட வளர்ச்சி விகிதத்தை எட்டுவதற்கு மற்றும் குறைந்தபட்ச அரசு & அதிகபட்ச நிர்வாகம் என்ற கொள்கைக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிக்காட்டும் தைரியமான அறிக்கையாக இந்த வரவுசெலவுத் திட்டம் அமைந்துள்ளது.

குர்பிரதாப் போபராய், நிர்வாக இயக்குனர், ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடேட்
மாண்புமிகு நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான திறனை உருவாக்குவதலை முன்னிலைப்படுத்துவதாக உள்ளது.

சாலைத் துறையில் அதிகரிக்கப்பட்ட செலவினங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தன்னார்வ பழைய வாகன அழிப்பு கொள்கையை அறிமுகப்படுத்துதல் ஆகியவை பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனத் துறையை உருவாக்குவது மட்டுமல்லாமல், இந்த துறையில் மாற்று வாகன தேவையையும் அதிகரிக்கும்.

கிராமப்புற பொருளாதாரம் மற்றும் பண்ணைத் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஆதரவு நகர்ப்புறமற்ற சந்தைகளில் வணிகங்களை உருவாக்குவதற்கு பெரியளவில் ஊக்கமளிக்கும். மேலும் கிராமப்புற பகுதிகளில் வாகன தேவைக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

வரவிருக்கும் நிதியாண்டில் கூட பயணிகள் வாகனச் சந்தை 2018 ஆம் ஆண்டை எட்ட வாய்ப்பில்லை என்பதையும், ஜிஎஸ்டி மற்றும் செஸ் ஆகியவற்றின் மிகவும்-அவசியமான பகுத்தறிவு வாகனத் தொழிலுக்கு உதவுவதுபோல் தெரியவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

விங்கேஷ் குலாடி, தலைவர், ஆட்டோமொபைல் விநியோகஸ்தர் சங்கம் கூட்டமைப்பு- FADA
மாண்புமிகு நிதியமைச்சர் பழைய வாகனங்களை வெளியேற்ற முன்வந்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பழைய வாகன அழிப்பு கொள்கையை அறிவித்திருப்பதை FADA மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டுள்ளது. 1990ஐ அடிப்படை ஆண்டாக எடுத்துக் கொண்டால், ஏறக்குறைய 37 லட்ச கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் 52 லட்ச பயணிகள் வாகனங்கள் தன்னார்வ பழைய வாகன அழிப்பிற்கு தகுதியானவை.

ஒரு மதிப்பீடாக, அதில் 10% கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் 5% பயணிகள் வாகனங்கள் இன்னும் சாலையில் ஓடிக்கொண்டிருக்கலாம். இத்தகைய சலுகைகளை அணுகுவதற்கான சிறந்த முடிவுகளை நாம் இன்னும் காண வேண்டும், இதனால் சில்லறை விற்பனை அதிகரிக்கும்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாமில் முன்மொழியப்பட்ட 6,575 கி.மீ நெடுஞ்சாலை பணிகள் மற்றும் பாரத் மாலா திட்டத்திற்கான மற்றொரு 19,500 கி.மீ வேலை, வணிக வாகனங்கள் குறிப்பாக எம் & எச்.சி.வி பிரிவை புத்துயிர் பெற வைப்பதற்கு நிச்சயமாக உதவும்.