Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 10 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சூப்பர்... மத்திய அமைச்சர் நாளை அறிமுகம் செய்யும் இந்த டிராக்டர் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்... ஏன் தெரியுமா?
இந்தியாவின் முதல் சிஎன்ஜி டிராக்டரை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நாளை அறிமுகம் செய்யவுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் முதல் முறையாக டீசலில் இருந்து சிஎன்ஜி-க்கு மாற்றப்பட்ட டிராக்டரை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரும், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை தொடர்ந்து ஊக்குவித்து வருபவருமான நிதின் கட்காரி பிப்ரவரி 12ம் தேதி (நாளை) முறைப்படி அறிமுகம் செய்து வைக்கிறார்.

ராவ்மட் டெக்னோ சொல்யூசன்ஸ் (Rawmatt Techno Solutions) மற்றும் டோமசெட்டோ அச்சிலே இந்தியா (Tomasetto Achille India) ஆகியவை கூட்டாக இணைந்து டீசல் டிராக்டரை, சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வகையில் மாற்றியுள்ளன. சிஎன்ஜி எரிபொருள் பயன்படுத்தப்படுவதால், இந்த டிராக்டரை இயக்குவதற்கான செலவு குறையும். எனவே விவசாயிகளின் வருமானம் உயரும்.

அத்துடன் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கும் இந்த டிராக்டர் உதவி செய்யும். இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த டிராக்டரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் நிதின் கட்காரி மட்டுமின்றி, மத்திய அமைச்சர்களான தர்மேந்திர பிரதான், நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''விவசாயிகளால் எரிபொருள் செலவில் ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய்க்கும் மேல் சேமிக்க முடியும் என்பதுதான் மிக முக்கியமான நன்மை. இதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள முடியும்'' என கூறப்பட்டுள்ளது.

டிராக்டரை சிஎன்ஜிக்கு மாற்றுவதால் விவசாயிகளுக்கு இன்னும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். முதலில், சிஎன்ஜிக்கு மாற்றப்படும் டிராக்டர்கள், டீசல் இன்ஜினுக்கு இணையாகவோ அல்லது அதற்கும் அதிகமாகவோ சக்தியை வெளிப்படுத்தும் என்பது சோதனைகளில் தெரியவந்துள்ளது. இரண்டாவது, டீசல் இன்ஜினுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி டிராக்டர்களில் ஒட்டுமொத்த உமிழ்வு 70 சதவீதம் குறைவாக இருக்கும்.

மூன்றாவது, டீசலுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி எரிபொருளின் விலை மிகவும் குறைவு என்பதால், எரிபொருள் செலவை விவசாயிகள் நன்கு கட்டுப்படுத்தி பணத்தை சேமிக்க முடியும். சிஎன்ஜியானது மிகவும் சுத்தமான மாற்று எரிபொருட்களில் ஒன்றாக உள்ளது. எனவே பெட்ரோல், டீசலுக்கு பதிலாக சிஎன்ஜி எரிபொருளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் மத்திய அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை போல், சிஎன்ஜி வாகனங்களும் தற்போது வேகமாக பிரபலமாகி வருகின்றன. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை வேகமாக உயர்ந்து வருவதால், சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் மீது மக்களின் கவனம் திரும்பி வருகிறது. எனவே சிஎன்ஜி-யில் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்வதில் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மிகவும் ஆர்வமாக உள்ளன.

ஆனால் சிஎன்ஜி எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது ஒரு குறையாக இருக்கிறது. சிஎன்ஜி வாகனங்களுக்கு மக்கள் மாறுவதை தடுக்கும் அம்சங்களில் ஒன்றாக இதனை பார்க்கலாம். எனினும் வரும் காலங்களில் இந்த பிரச்னைக்கு அரசு சார்பில் தீர்வு காணப்படும் என்று நம்பலாம்.