10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... எல்லாமே நல்லா இருக்கே!

இந்திய சந்தையில் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... எல்லாமே நல்லா இருக்கே!

நடப்பு 2021ம் ஆண்டு முடிவுக்கு வரவுள்ளது. அடுத்த 2022ம் ஆண்டு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக நாம் ஆவலுடன் காத்து கொண்டுள்ளோம். 2022ம் ஆண்டில் ஏராளமான கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. பல்வேறு செக்மெண்ட்களில், பல்வேறு விலைகளில் இந்த கார்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில், அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மற்றும் 10 லட்ச ரூபாய் விலைக்குள் விற்பனைக்கு வரவுள்ள (2022ம் ஆண்டில்) கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... எல்லாமே நல்லா இருக்கே!

புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா

எதிர்பார்க்கப்படும் ஆரம்ப விலை - 7 லட்ச ரூபாய்

இந்திய சந்தையில் புதிய தலைமுறை (இரண்டாவது தலைமுறை) விட்டாரா பிரெஸ்ஸா காரை அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. தற்போது விற்பனையில் உள்ள மாடலுடன் ஒப்பிடுகையில் புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டிருக்கும்.

10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... எல்லாமே நல்லா இருக்கே!

அதே நேரத்தில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தொடர்ந்து வழங்கப்பட்டிருக்கும். ஆனால் அதிக மைலேஜ் வழங்கும் வகையில் இந்த இன்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். அதேபோல் டொயோட்டா நிறுவனமும் இந்த காரை தனது பிராண்டின் கீழ் புதிய தலைமுறை அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... எல்லாமே நல்லா இருக்கே!

ஸ்கோடா ஸ்லாவியா

எதிர்பார்க்கப்படும் ஆரம்ப விலை - 10 லட்ச ரூபாய்

ஸ்கோடா ஸ்லாவியா ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. இதற்கு அடுத்தபடியாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. விற்பனையில் இருந்து விலக்கப்படும் ஸ்கோடா ரேபிட் காருக்கு மாற்றாக ஸ்லாவியா கார் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... எல்லாமே நல்லா இருக்கே!

ஸ்கோடா ஸ்லாவியா காரில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படலாம். இதில், 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் 1.5 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.

10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... எல்லாமே நல்லா இருக்கே!

ஃபோக்ஸ்வேகன் விரிட்சூஸ்

எதிர்பார்க்கப்படும் ஆரம்ப விலை - 9.50 லட்ச ரூபாய்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வெண்டோ செடான் காருக்கு பதிலாக புதிய செடான் காரை அறிமுகம் செய்யவுள்ளது. அனேகமாக இந்த கார் விரிட்சூஸ் என்ற பெயரில் அழைக்கப்படலாம். ஸ்கோடா ஸ்லாவியா காரின் அதே பிளாட்பார்ம் மற்றும் இன்ஜின் தேர்வுகள் இந்த காரிலும் வழங்கப்படலாம். ஆனால் ஸ்கோடா ஸ்லாவியா உடன் ஒப்பிடுகையில் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன் முற்றிலுமாக மாறுபட்டிருக்கும்.

10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... எல்லாமே நல்லா இருக்கே!

மஹிந்திரா இகேயூவி100

எதிர்பார்க்கப்படும் ஆரம்ப விலை - 9 லட்ச ரூபாய்

மஹிந்திரா நிறுவனம் இகேயூவி100 எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டு வருகிறது. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த ஆண்டே விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எனினும் 2022ம் ஆண்டு இது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இந்திய சந்தையிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இது இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... எல்லாமே நல்லா இருக்கே!

சிட்ரோன் சி3

எதிர்பார்க்கப்படும் ஆரம்ப விலை - 7 லட்ச ரூபாய்

சி3 காருடன் இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் சிட்ரோன் நிறுவனம் நுழையவுள்ளது. சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை மனதில் வைத்து இந்த கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அனேகமாக இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் இன்ஜினாக இருக்கலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

Most Read Articles

English summary
Upcoming cars under rs 10 lakh volkswagen virtus to mahindra ekuv100
Story first published: Saturday, December 18, 2021, 20:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X