டெஸ்லா பிராண்டில் இருந்து இரு கார்களா!! 2022இல் எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் கார்களின் அறிமுகங்கள்!

இந்திய ஆட்டோமொபைல் துறை மெதுவாக மின்மயமாக்கப்பட்ட வாகனங்களுக்கு மாறிவருவது சந்தையின் தற்போதைய நிலையை பார்க்கும்போதே உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த மாற்றம் மிகவும் மெதுவாகவே நடைபெற்று வருகிறது.

டெஸ்லா பிராண்டில் இருந்து இரு கார்களா!! 2022இல் எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் கார்களின் அறிமுகங்கள்!

இருப்பினும் இதற்கு இன்னும் சில வருடங்களே ஆகும். ஏனெனில் அடுத்த சில வருடங்களில் புதிய எலக்ட்ரிக் கார் பிராண்ட்கள் இந்தியாவில் நுழைய திட்டமிட்டுள்ளன. இதில் முக்கியமானது டெஸ்லா. அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் உலகளவில் முன்னணியில் இருப்பதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

டெஸ்லா பிராண்டில் இருந்து இரு கார்களா!! 2022இல் எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் கார்களின் அறிமுகங்கள்!

அதேநேரம் தற்சமயம் இந்திய சந்தையில் செயல்பாட்டில் இருக்கும் நிறுவனங்களும் தங்களது எலக்ட்ரிக் கார்களை களமிறக்க தயாராகி வருகின்றன. அவற்றில் எதிர்பார்ப்பில் இருக்கும் சிலவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டெஸ்லா பிராண்டில் இருந்து இரு கார்களா!! 2022இல் எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் கார்களின் அறிமுகங்கள்!

டாடா அல்ட்ராஸ் இவி

நெக்ஸான் இவி-யின் மூலம் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எப்போதோ துவங்கிவிட்டது. சமீபத்தில் கூட டிகோர் இவி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, பெரும்பாலான மக்கள் வாங்கக்கூடிய மற்றொரு எலக்ட்ரிக் காராக அல்ட்ராஸ் இவி-ஐ கொண்டுவர தயாராகி வருகிறது.

டெஸ்லா பிராண்டில் இருந்து இரு கார்களா!! 2022இல் எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் கார்களின் அறிமுகங்கள்!

இதன் அறிமுகத்தை அடுத்த ஆண்டில் எதிர்பார்க்கிறோம். வழக்கம்போல் பிராண்டின் ஜிப்ட்ரான் ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த எலக்ட்ரிக் காரில் நெக்ஸான் இவி-ஐ காட்டிலும் அளவில் பெரிய பேட்டரி வழங்கப்பட உள்ளதாக தற்போது வரையில் நமக்கு கிடைத்துள்ள செய்திகள் கூறுகின்றன.

டெஸ்லா பிராண்டில் இருந்து இரு கார்களா!! 2022இல் எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் கார்களின் அறிமுகங்கள்!

டெஸ்லா மாடல் 3

பல வெளிநாட்டு சந்தைகளில் டெஸ்லா பிராண்டில் இருந்து அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் காராக மாடல் 3 விளங்குகிறது. இதனால் தான் இந்த டெஸ்லா எலக்ட்ரிக் காருக்கு நமது இந்திய சந்தையில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இப்போதில் இருந்து உருவாக ஆரம்பித்துவிட்டது.

டெஸ்லா பிராண்டில் இருந்து இரு கார்களா!! 2022இல் எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் கார்களின் அறிமுகங்கள்!

ஏற்கனவே இந்திய சாலைகளில் சோதனைகளை துவங்கிவிட்ட மாடல் 3 தான் டெஸ்லா நிறுவனம் தற்போதைக்கு விற்பனை செய்யும் மலிவான காராகும். இந்திய சாலைகளுக்கு ஏற்ற க்ரவுண்ட் க்ளியரென்ஸை பற்றியே டெஸ்லாவிற்கு கவலையாக உள்ளது. சர்வதேச சந்தைகளில் ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் ப்ளஸ், லாங் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் பெர்ஃபார்மன்ஸ் என்ற 3 வேரியண்ட்களில் டெஸ்லா மாடல் 3 விற்பனை செய்யப்படுகிறது.

டெஸ்லா பிராண்டில் இருந்து இரு கார்களா!! 2022இல் எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் கார்களின் அறிமுகங்கள்!

மஹிந்திரா இ-கேயூவி100

மஹிந்திரா பிராண்டில் இருந்து இந்திய சந்தைக்கான எலக்ட்ரிக் கார் மிக நீண்ட வருடமாகவே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில் கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் கூட இ-கேயூவி100 மற்றும் இ-எக்ஸ்யூவி300 என்ற இரு எலக்ட்ரிக் கார்களை மஹிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது.

டெஸ்லா பிராண்டில் இருந்து இரு கார்களா!! 2022இல் எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் கார்களின் அறிமுகங்கள்!

இதில் முதலாவதாக அளவில் சிறிய இ-கேயூவி100 மாடலே விற்பனைக்கு வரவுள்ளது. இதன் அறிமுகத்தை அடுத்த 2022ஆம் ஆண்டில் எதிர்பார்க்கிறோம். கிட்டத்தட்ட 150கிமீ ரேஞ்ச்சில் கொண்டுவரப்படும் இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரின் விலை ரூ.9 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம்.

டெஸ்லா பிராண்டில் இருந்து இரு கார்களா!! 2022இல் எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் கார்களின் அறிமுகங்கள்!

டெஸ்லா மாடல் ஒய்

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மாடல் ஒய் என்ற தனது மற்றொரு எலக்ட்ரிக் காரையும் சோதனைகளில் உட்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் மாடல் 3 பிரபலமானதாக விளங்கினாலும், அதனை காட்டிலும் மாடல் ஒய் இவி தான் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் முக்கியமாக இந்த டெஸ்லா காரில் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் சற்று அதிகமாக வழங்கப்படுகிறது.

டெஸ்லா பிராண்டில் இருந்து இரு கார்களா!! 2022இல் எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் கார்களின் அறிமுகங்கள்!

அதுமட்டுமின்றி செயல்முறைக்கு ஏற்ப 5-இருக்கை மற்றும் 7-இருக்கை தேர்வுகளிலும் இந்த எலக்ட்ரிக் கார் தயாரிக்கப்படுகிறது. மாடல் 3-ஐ போல் அதே மூன்று வேரியண்ட்களில் மாடல் ஒய் விற்பனை செய்யப்பட்டாலும், இவற்றில் எந்தெந்த வேரியண்ட்கள் இந்திய சந்தையில் களமிறக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டெஸ்லா பிராண்டில் இருந்து இரு கார்களா!! 2022இல் எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் கார்களின் அறிமுகங்கள்!

ஹூண்டாயின் விலை குறைவான இவி

இந்திய வாடிக்கையாளர்களுக்கான புதிய மலிவான எலக்ட்ரிக் வாகனத்தின் தயாரிப்பில் ஈடுப்பட்டு வருவதாக ஏற்கனவே ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. எஸ்யூவி கார்களுக்கு, அதிலும் குறிப்பாக ஹூண்டாய் எஸ்யூவி கார்களுக்கு நம் நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இந்த புதிய மலிவான எலக்ட்ரிக் காரை க்ராஸ்ஓவர் வடிவில் எதிர்பார்க்கிறோம்.

டெஸ்லா பிராண்டில் இருந்து இரு கார்களா!! 2022இல் எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் கார்களின் அறிமுகங்கள்!

அதேபோல் விலையை குறைவாக நிர்ணயிக்க, அளவில் சிறிய பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரே இந்த ஹூண்டாய் காரில் பொருத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த ஹூண்டாய் எலக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டில் அறிமுகமாகுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. இருப்பினும் வாடிக்கையாளர்களை ஆச்சிரியப்படுத்தும் விதமாக ஹூண்டாய் எதாவது செய்யலாம்.

Most Read Articles
English summary
7 Upcoming EVs In India In 2022 – Tesla Model 3 To Tata Altroz EV.7 Upcoming EVs In India In 2022 – Tesla Model 3 To Tata Altroz EV
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X