3,4 வருடங்களில், இந்திய சாலைகளில் ஓடவுள்ள MG எலக்ட்ரிக் கார்கள்!! 100kmph வேகத்தில் இயங்குமாம்!

புதிய MG எலக்ட்ரிக் காம்பெக்ட் எஸ்யூவி & ஹேட்ச்பேக் கார்களின் இந்திய வருகை குறித்த லேட்டஸ்ட் செய்திகள் வெளியாகியுள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

3,4 வருடங்களில், இந்திய சாலைகளில் ஓடவுள்ள MG எலக்ட்ரிக் கார்கள்!! 100kmph வேகத்தில் இயங்குமாம்!

பிரிட்டிஷ் கார் பிராண்டான Morris Garages (MG) இந்திய சந்தையில் அடுத்ததாக அறிமுகப்படுத்த வரிசையாக புதிய வாகனங்களை தயார்படுத்தி வருகிறது. இதனால் MG பிராண்டில் இருந்து புதிய கார்கள் வரும் வருடங்களில் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரவுள்ளன.

3,4 வருடங்களில், இந்திய சாலைகளில் ஓடவுள்ள MG எலக்ட்ரிக் கார்கள்!! 100kmph வேகத்தில் இயங்குமாம்!

இதில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்ட MG Astor-இன் அறிமுகம் மிக பெரியதாக இருக்கும். தீவிரமாக சோதனைகளில் உட்படுத்தப்பட்டுவரும் Astor-இன் இந்திய அறிமுக தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் இந்த புதிய MG எஸ்யூவி காரை பற்றிய விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன.

3,4 வருடங்களில், இந்திய சாலைகளில் ஓடவுள்ள MG எலக்ட்ரிக் கார்கள்!! 100kmph வேகத்தில் இயங்குமாம்!

இதனை தொடர்ந்து சப் காம்பெக்ட் எஸ்யூவி கார் ஒன்றும், காம்பெக்ட் எம்பிவி மற்றும் ஹேட்ச்பேக் கார்களும் இந்த பிரிட்டிஷ் கார் பிராண்டில் இருந்து இந்திய சந்தைக்கு வெளிவரவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் தனது எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையையும் விரிவுப்படுத்த MG திட்டமிட்டுள்ளது.

3,4 வருடங்களில், இந்திய சாலைகளில் ஓடவுள்ள MG எலக்ட்ரிக் கார்கள்!! 100kmph வேகத்தில் இயங்குமாம்!

இதன்படி, காம்பெக்ட் எஸ்யூவி மற்றும் ஹேட்ச்பேக் உடல் அமைப்பில் இரு புதிய எலக்ட்ரிக் மாடல்கள் MG நிறுவனத்தில் இருந்து வெளிவரவுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள செய்திகள் கூறுகின்றன. Baojun E200 ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் இவை இரண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கு இன்னும் 3,4 வருடங்கள் ஆகலாம்.

3,4 வருடங்களில், இந்திய சாலைகளில் ஓடவுள்ள MG எலக்ட்ரிக் கார்கள்!! 100kmph வேகத்தில் இயங்குமாம்!

இந்த எதிர்கால MG EV-களின் விலைகள் ரூ.10 லட்சத்திற்கும் கீழ் நிர்ணயிக்கப்படவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. அப்படியென்றால், இந்தியாவின் எதிர்கால எலக்ட்ரிக் போக்குவரத்திற்கு இந்த MG எலக்ட்ரிக் கார்கள் மிக முக்கிய படிக்கட்டுகளாக விளங்கலாம், யார் கண்டது.

3,4 வருடங்களில், இந்திய சாலைகளில் ஓடவுள்ள MG எலக்ட்ரிக் கார்கள்!! 100kmph வேகத்தில் இயங்குமாம்!

மேற்கூறப்பட்ட Baojun E200 கட்டமைப்பானது, சீன சந்தையில் வணிகம் செய்துவரும் Shanghai Automotive Industry Corporation (SAIC) நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இந்த ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்படும் எலக்ட்ரிக் கார்களில், 39 பிஎச்பி வரையில் வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டாரை பொருத்த முடிகிறது.

3,4 வருடங்களில், இந்திய சாலைகளில் ஓடவுள்ள MG எலக்ட்ரிக் கார்கள்!! 100kmph வேகத்தில் இயங்குமாம்!

இதன் மூலம் 210- 270கிமீ வரையிலான ரேஞ்ச்-ஐ கொண்ட EV-களை உருவாக்கலாம். இந்த வகையில் MG பிராண்டில் இருந்து வெளிவரவுள்ள இருவர் மட்டுமே அமரக்கூடிய காம்பெக்ட் எலக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாக மணிக்கு 100கிமீ வேகம் வரையில் செல்லலாம் என்கிறது தயாரிப்பு நிறுவனம்.

3,4 வருடங்களில், இந்திய சாலைகளில் ஓடவுள்ள MG எலக்ட்ரிக் கார்கள்!! 100kmph வேகத்தில் இயங்குமாம்!

எலக்ட்ரிக் மோட்டாரை இரு பாகங்களாக பெற்றுவரவுள்ள இந்த இரு-இருக்கை எலக்ட்ரிக் காரில் டிரான்ஸ்மிஷன் சத்தமும், என்ஜின் அதிர்வும் சில தொழிற்நுட்பங்களினால் உட்புற கேபினிற்கு வராதாம். அத்துடன் Baojun E200 Platform-இல் வடிவமைக்கப்படும் எலக்ட்ரிக் கார்களின் தோற்றமும் அருமையாக இருக்கிறது.

3,4 வருடங்களில், இந்திய சாலைகளில் ஓடவுள்ள MG எலக்ட்ரிக் கார்கள்!! 100kmph வேகத்தில் இயங்குமாம்!

அத்துடன் காரை பயன்படுத்துபவர்களின் விபரங்களை வழங்கும் பார்க்கிங் நாவிகேஷன் வசதியினை இந்த எலக்ட்ரிக் கார்களில் எதிர்பார்க்கிறோம். மொபைல் போனை சார்ஜ் செய்யும் வசதி போன்றவை எல்லாம் இப்போது உள்ள கார்களிலேயே வழங்கப்பட்டு வருகின்றன. ஆதலால் MG-இன் இந்த புதிய எலக்ட்ரிக் கார்களில் வழங்கப்பட்டால் அதில் எந்த ஆச்சிரியமும் இல்லை.

3,4 வருடங்களில், இந்திய சாலைகளில் ஓடவுள்ள MG எலக்ட்ரிக் கார்கள்!! 100kmph வேகத்தில் இயங்குமாம்!

டேஸ்போர்டில் கார்டுகளை வைக்க அலமாரி, இருக்கைகளில் மறைப்பாக பொருட்களை வைப்பதற்கான பகுதி என 11 விதமான பொருட்களை வைப்பதற்கான காலியிடங்கள் இந்த EV-களின் உட்புறத்தில் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் ஒரு மாடலில் மட்டும் பின் இருக்கை வசதியும் இருக்கும்.

3,4 வருடங்களில், இந்திய சாலைகளில் ஓடவுள்ள MG எலக்ட்ரிக் கார்கள்!! 100kmph வேகத்தில் இயங்குமாம்!

அதில் பின் இருக்கைகளை முன்னோக்கி மடக்கி கொண்டால் இன்னும் கூடுதல் காலியடங்கள் கிடைக்கும். மோட்டார் & டிரான்ஸ்மிஷன் சத்தங்களை தொழிற்நுட்பங்கள் உள்ளே வராமல் தடுக்க, ஏசி-யும் இரைச்சலை குறைக்கும் அமுக்கி உடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், எதிர்கால MG எலக்ட்ரிக் கார்களின் கேபின் மிகவும் அமைதியானதாக இருக்கும்.

3,4 வருடங்களில், இந்திய சாலைகளில் ஓடவுள்ள MG எலக்ட்ரிக் கார்கள்!! 100kmph வேகத்தில் இயங்குமாம்!

தற்போது விற்பனையில் உள்ள MG ZS EV போன்று பிரம்மாண்டமாக இந்த புதிய MG எலக்ட்ரிக் கார்களை எதிர்பார்க்க வேண்டாம். அதனை காட்டிலும் அளவில் சிறியதாக இருப்பது மட்டுமின்றி, குறைந்த செயல்திறனில் இயங்குவதற்கு ஏற்ப சிறிய அளவிலான பேட்டரிகளை பெற்றுவரவுள்ளன.

Most Read Articles

Source: Autocar India

English summary
New MG Electric Compact SUV, Hatchback India Launch Details Out.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X