பெரிய ஃபேம்லியா இருந்தா இதான் பெஸ்ட்... 2022ல் விற்பனைக்கு வரவுள்ள எம்பிவி கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

இந்திய சந்தையில் 2022ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள எம்பிவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெரிய ஃபேம்லியா இருந்தா இதான் பெஸ்ட்... 2022ல் விற்பனைக்கு வரவுள்ள எம்பிவி கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

இந்தியாவில் மாருதி சுஸுகி எர்டிகா போன்ற எம்பிவி கார்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. ஆனால் 2022ம் ஆண்டு இந்த செக்மெண்ட்டில் போட்டி கடுமையாக உள்ளது. ஏனெனில் 2022ம் ஆண்டில் நிறைய எம்பிவி கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. அந்த கார்கள் என்னென்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பெரிய ஃபேம்லியா இருந்தா இதான் பெஸ்ட்... 2022ல் விற்பனைக்கு வரவுள்ள எம்பிவி கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

கியா கேரன்ஸ் (Kia Carens)

இந்திய சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எம்பிவி காராக கியா கேரன்ஸ் உள்ளது. கியா கேரன்ஸ் எம்பிவி கார் வெகு சமீபத்தில்தான் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அனேகமாக வரும் மார்ச் மாதத்திற்கு உள்ளாக கியா கேரன்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய ஃபேம்லியா இருந்தா இதான் பெஸ்ட்... 2022ல் விற்பனைக்கு வரவுள்ள எம்பிவி கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

கியா கேரன்ஸ் எம்பிவி கார் பிரத்யேகமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவுள்ளது. கியா கேரன்ஸ் எம்பிவி காரில், 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 ஹெச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.

பெரிய ஃபேம்லியா இருந்தா இதான் பெஸ்ட்... 2022ல் விற்பனைக்கு வரவுள்ள எம்பிவி கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

இதுதவிர 140 ஹெச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய டர்போ வேரியண்ட்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜினுடன் டிசிடி தேர்வு வழங்கப்படும். 2022ம் ஆண்டின் தொடக்கத்திலேயே விற்பனைக்கு வரவுள்ளதால் கியா கேரன்ஸ் எம்பிவி கார் மீதான ஆவல் அதிகமாக இருக்கிறது.

பெரிய ஃபேம்லியா இருந்தா இதான் பெஸ்ட்... 2022ல் விற்பனைக்கு வரவுள்ள எம்பிவி கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

ஹூண்டாய் ஸ்டார்கஸார் (Hyundai Stargazer)

ஹூண்டாய் நிறுவனமும் புதிய எம்பிவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது தற்போதைய நிலையில் 'KS' என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த கார் ஸ்டார்கஸார் என்ற பெயரில் விற்பனைக்கு வரலாம். ஹூண்டாய் நிறுவனத்தின் எம்பிவி கார் ஒன்று முழுமையாக உருமறைக்கப்பட்ட நிலையில் இந்தோனேசியாவில் சோதனை செய்யப்பட்ட ஸ்பை படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

பெரிய ஃபேம்லியா இருந்தா இதான் பெஸ்ட்... 2022ல் விற்பனைக்கு வரவுள்ள எம்பிவி கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

இந்த கார் முதலில் இந்தோனேஷியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் எனவும், அதை தொடர்ந்து இந்திய சந்தைக்கு கொண்டு வரப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டில் இந்த கார் இந்திய சந்தைக்கு வந்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த எம்பிவி கார் 6 மற்றும் 7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கலாம்.

பெரிய ஃபேம்லியா இருந்தா இதான் பெஸ்ட்... 2022ல் விற்பனைக்கு வரவுள்ள எம்பிவி கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

டொயோட்டா ரூமியான் (Toyota Rumion)

டொயோட்டா நிறுவனம் ரூமியான் காரை வெகு சமீபத்தில்தான் தென் ஆப்ரிக்க சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது மாருதி சுஸுகி எர்டிகா காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் அடிப்படையில் டொயோட்டா நிறுவனம் மாருதி சுஸுகி கார்களை தனது பிராண்டில் விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பெரிய ஃபேம்லியா இருந்தா இதான் பெஸ்ட்... 2022ல் விற்பனைக்கு வரவுள்ள எம்பிவி கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

மாருதி சுஸுகி எர்டிகா காரின் மெக்கானிக்கல் அம்சங்களை மாற்றாமல் டொயோட்டா நிறுவனம் அப்படியே ரூமியான் காரில் வழங்கியுள்ளது. அதேபோல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ள ரூமியான் காரின் இன்டீரியரும் மாருதி சுஸுகி எர்டிகாவை போலவேதான் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மாருதி சுஸுகி எர்டிகாவை விட டொயோட்டா ரூமியானின் விலை சற்று அதிகமாக இருக்கலாம்.

பெரிய ஃபேம்லியா இருந்தா இதான் பெஸ்ட்... 2022ல் விற்பனைக்கு வரவுள்ள எம்பிவி கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

மாருதி சுஸுகி எக்ஸ்எல்7 (Maruti Suzuki XL7)

மாருதி சுஸுகி நிறுவனத்தின் எக்ஸ்எல்6 கார், எர்டிகாவை விட மேலான மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 சற்று பிரீமியமான தயாரிப்பு. இந்த சூழலில் எக்ஸ்எல்7 என்ற பெயரில் 7 சீட்டர் வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பெரிய ஃபேம்லியா இருந்தா இதான் பெஸ்ட்... 2022ல் விற்பனைக்கு வரவுள்ள எம்பிவி கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

எம்ஜி ஜி10 (MG G10)

எம்ஜி ஜி10 சொகுசு எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்பு, கியா கார்னிவல் உடன் இது போட்டியிடும். எம்ஜி ஜி10 காரின் சர்வதேச மாடலில் 2.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த இன்ஜின்களுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்கள் இணைக்கப்பட்டுள்ளன. 2020ம் ஆண்டின் மத்தியில் எம்ஜி ஜி10 இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே ஜி10 காருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கலாம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
Upcoming mpv cars kia carens hyundai stargazer toyota rumion maruti suzuki xl7 mg g10
Story first published: Wednesday, December 22, 2021, 13:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X