அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் ஷோரூம்களுக்கு வந்தன!! கவனத்தை பெறுமா?

ஹூண்டாய் க்ரெட்டா இ வேரியண்ட் மேனுவலாக செயல்படக்கூடிய பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகளுடன் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. இது தொடர்பான படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் ஷோரூம்களுக்கு வந்தன!! கவனத்தை பெறுமா?

கியாவை போன்று மற்றொரு தென்கொரிய நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸும் அதன் சி-பிரிவு எஸ்யூவி மாடலான க்ரெட்டாவிற்கு வருட துவக்கத்திற்கான அப்டேட்டை வழங்கியுள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் ஷோரூம்களுக்கு வந்தன!! கவனத்தை பெறுமா?

செல்டோஸை போல அதன் போட்டி மாடலான ஹூண்டாய் க்ரெட்டாவும் அப்டேட்களாக கூடுதல் தொழிற்நுட்ப வசதிகளை தான் பெற்றுள்ளது. அதேநேரம் இந்த எஸ்யூவி காரில் வழங்கப்பட்டு வந்த சில அம்சங்கள் நீக்கப்பட்டும் உள்ளன.

அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் ஷோரூம்களுக்கு வந்தன!! கவனத்தை பெறுமா?

குறிப்பாக வழங்கப்பட்டு வந்த அம்சங்களை க்ரெட்டாவின் விலை குறைவான வேரியண்ட்டான இ ட்ரிம் தான் இழக்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்த ட்ரிம்-இல் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் வழங்கப்பட்டு வந்த பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் ஓட்டுனர் தேவைக்கு ஏற்றாற்போல் மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளன.

அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் ஷோரூம்களுக்கு வந்தன!! கவனத்தை பெறுமா?

இந்த மாற்றத்தை பெற்ற க்ரெட்டா கார்கள் தான் தற்போது இந்திய டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைந்துள்ளன. இது தொடர்பான ஸ்பை படங்கள் ரஷ்லேன் செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் ஷோரூம்களுக்கு வந்தன!! கவனத்தை பெறுமா?

பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகளின் செயல்பாடு மாற்றப்பட்டுள்ள அதேநேரத்தில் அவற்றில் வழங்கப்பட்டு வந்த டர்ன் இண்டிகேட்டர்களும் காரின் முன்பக்க ஃபெண்டர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் ஷோரூம்களுக்கு வந்தன!! கவனத்தை பெறுமா?

இவற்றுடன் க்ரெட்டாவின் மலிவான இ ட்ரிம்-இல் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியில் வழங்கப்பட்டு வந்த விளக்குகள் மற்றும் பயணிகளின் இருக்கைகளுக்கு பின்பக்கத்தில் வழங்கப்பட்ட பொருட்களை வைப்பதற்கான பாக்கெட்களும் நீக்கப்பட்டுள்ளன.

அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் ஷோரூம்களுக்கு வந்தன!! கவனத்தை பெறுமா?

அதேபோல் இனி க்ரெட்டாவின் மத்திய இஎக்ஸ் மற்றும் எஸ் வேரியண்ட்களும் வயர் இல்லா ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆட்டோ கார்ப்ளே வசதிகளுடன் கிடைக்கும். இந்த இணைப்பு முன்பும் இந்த வேரியண்ட்களில் வழங்கப்பட்டு வந்தன.

அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் ஷோரூம்களுக்கு வந்தன!! கவனத்தை பெறுமா?

ஆனால் அப்போது வயர் மூலம் இணைக்க வேண்டியதாக இருந்தது. இதற்கு ஏற்றாற்போல் டாப் எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஒ) வேரியண்ட்களில் இணைப்பு வசதிகள் ஓவர்-தி-ஏர் (ஒடிஏ) மேம்படுத்தப்பட்டுள்ளன.

அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் ஷோரூம்களுக்கு வந்தன!! கவனத்தை பெறுமா?

இந்த வசதியின் மூலமாக ஜன்னல் கண்ணாடிகளின் இயக்கம், இணையம், மொபைல் போனின் அழைப்புகள் உள்ளிட்டவற்றை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தின் உதவியுடன் குரலின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் ஷோரூம்களுக்கு வந்தன!! கவனத்தை பெறுமா?

டாப் வேரியண்ட்களில் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் செயல்பாடுகள் மற்றும் டேஸ்போர்டில் மென்மையான பெயிண்ட்டை ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது. இவை தவிர்த்து க்ரெட்டாவின் என்ஜின் உள்பட இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

Most Read Articles

English summary
Hyundai Creta E Variant With Manual ORVM Arrives At Dealer.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X