இவர்களுக்கு தாராளமா கடன் கொடுங்க... உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி...

உத்தர பிரதேச மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இவர்களுக்கு தாராளமா கடன் கொடுங்க... உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி...

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற வழக்கமான எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் ரிக்ஸாக்கள் உள்பட மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் தற்போது தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு தாராளமா கடன் கொடுங்க... உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி...

உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் ஆகியவற்றில் இருந்து விலக்கு வழங்குவது குறித்த திட்டத்தை முன்மொழிந்தார்.

இவர்களுக்கு தாராளமா கடன் கொடுங்க... உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி...

எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்காக அவர் இந்த திட்டத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ''சிறப்பான எதிர்காலத்திற்காக, உத்தர பிரதேச மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவர்களுக்கு தாராளமா கடன் கொடுங்க... உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி...

உத்தர பிரதேச மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை அமைப்பதற்கு பல்வேறு சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இது தொடர்பான திட்டங்களை நாங்கள் பெற்றுள்ளோம். சாத்தியமுள்ள அனைத்து உதவிகளையும் நாங்கள், நிறுவனங்களுக்கு செய்து கொடுப்போம்.

இவர்களுக்கு தாராளமா கடன் கொடுங்க... உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி...

உத்தர பிரதேச மாநிலத்தில் தொழில்துறை முதலீட்டையும் இது ஊக்குவிக்கும்'' என்றார். மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக டீசல் டெம்போக்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் ரிக்ஸாக்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு தாராளமா கடன் கொடுங்க... உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி...

இதற்காக மத்திய அல்லது மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் டீசல் ரிக்ஸாக்களின் ஓட்டுனர்களுக்கு கடன் வழங்குவது மிகவும் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் எலெக்ட்ரிக் ரிக்ஸாக்களை வாங்கி அவர்கள் சுய தொழில் புரிய முடியும் எனவும் உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு தாராளமா கடன் கொடுங்க... உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி...

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு மாநில முதல்வர்களும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர். இதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கி வருகிறது.

இவர்களுக்கு தாராளமா கடன் கொடுங்க... உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி...

இதன் ஒரு பகுதியாக வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு சில சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியையும், காற்று மாசுபாடு பிரச்னையையும் குறைக்கலாம்.

Most Read Articles

English summary
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath Ask To Encourage Electric Vehicles In The State. Read in Tamil
Story first published: Saturday, January 30, 2021, 18:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X