இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் ஃபோர்ஸ் மாடடோர் வேன்!! இந்தியா முழுக்க ட்ரிப் அடிக்கலாம்!

இந்தியா முழுவதும் சுற்று பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் பழைய ஃபோர்ஸ் மாடடோர் வேன் ஒன்று அழகான தோற்றத்திற்கு மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை வாகனத்தை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் ஃபோர்ஸ் மாடடோர் வேன்!! இந்தியா முழுக்க ட்ரிப் அடிக்கலாம்!

மஹாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வாகன விற்பனையில் நீண்ட வருட அனுபவம் உள்ளது. தற்சமயம் இந்திய கமர்ஷியல் பிரிவில் இந்த நிறுவனத்தின் ட்ராவலர் மாடல் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் ஃபோர்ஸ் மாடடோர் வேன்!! இந்தியா முழுக்க ட்ரிப் அடிக்கலாம்!

ட்ராவலருக்கு முன்னர் மாடடோர் வேன்கள் ஃபோர்ஸின் அடையாளமாக விளங்கின. கமர்ஷியல் பயன்பாட்டிற்காக மட்டுமின்றி தனி பயன்பாட்டிற்காகவும் ஃபோர்ஸ் மடாடோர் வேன்கள் வாங்கப்பட்டன. வெங்கட் பிரபு இயக்கிய ‘சரோஜா' படத்தில் கூட பார்த்திருப்பீர்கள்.

இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் ஃபோர்ஸ் மாடடோர் வேன்!! இந்தியா முழுக்க ட்ரிப் அடிக்கலாம்!

தற்சமயம் விற்பனையில் இல்லாவிடினும், பலரிடம் பழமையான வாகனமாக தற்போதும் ஃபோர்ஸ் மாடடோர் வேன்கள் பயன்பாட்டில் உள்ளன. அதில் ஒன்றினை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். இந்த குறிப்பிட்ட மாதிரியை மட்டும் பிரத்யேகமாக பார்ப்பதற்கு காரணம், அழகான தோற்றத்திற்கு இந்த வேன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது.

Image Couresy: Dajish P

டாஜிஷ் பி என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இந்த மாடிஃபை வாகனம் தொடர்பான வீடியோவில் வாகனத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தையும் உரிமையாளர் விரிவாக விளக்கி கூறியுள்ளார்.

இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் ஃபோர்ஸ் மாடடோர் வேன்!! இந்தியா முழுக்க ட்ரிப் அடிக்கலாம்!

ஃபோர்ஸ் மாடடோர் போன்ற பழமையான வாகனங்களை வெகுவாக விரும்பக்கூடியவராக உள்ள இவரிடம் ஹிந்துஸ்தான் அம்பாசடார் காரும் உள்ளது. அதுமட்டுமின்றி தற்சமயம் பழமையான கிளாசிக் கார்களுள் ஒன்றாக விளங்கும் காண்டெஸா கார் ஒன்றையும் வாங்க திட்டுள்ளதாக இவர் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் ஃபோர்ஸ் மாடடோர் வேன்!! இந்தியா முழுக்க ட்ரிப் அடிக்கலாம்!

ஆந்திர பிரதேசத்தில் இருந்து இந்த மாடடோர் வேனை வாங்கியதாக கூறும் இதன் உரிமையாளர், வாங்கும்போது வாகனம் பல இடங்களில் அடிவாங்கி மிகவும் பரிதாபமான நிலையில் இருந்ததாக கூறுகிறார். இந்த வேனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் யுடியூப்பர் ஒருவரை பார்த்து தான் இவருக்கு ஏற்பட்டுள்ளது.

இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் ஃபோர்ஸ் மாடடோர் வேன்!! இந்தியா முழுக்க ட்ரிப் அடிக்கலாம்!

முன்னர் நீல நிறத்தில் இருந்த இந்த வாகனத்தின் வெளிப்புறம் ஆரஞ்ச் மற்றும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த இரட்டை நிற பெயிண்ட்டை பார்க்கும்போது முன்னர் விற்பனையில் இருந்த ஃபோக்ஸ்வேகன் பேருந்து ஞாபகத்திற்கு வருகிறது.

இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் ஃபோர்ஸ் மாடடோர் வேன்!! இந்தியா முழுக்க ட்ரிப் அடிக்கலாம்!

இந்த வேனில் முன்பு இருந்த ஹெட்லைட்கள் சற்று பிரகாசம் குறைவானவைகளாக இருந்தன. இதனால் கூடுதலாக துணை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் டெயில் லைட்கள், மஹிந்திரா ஜீடோ வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் ஃபோர்ஸ் மாடடோர் வேன்!! இந்தியா முழுக்க ட்ரிப் அடிக்கலாம்!

புதிய பெயிண்ட்டையும், டொக்குகள் சரிபார்க்கப்பட்டதையும் தவிர்த்து இந்த வாகனத்தின் வெளிபுறத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. முன் கதவுகளில் முன்பு இருந்த பக்கவாட்டாக நகர்த்தக்கூடிய ஜன்னல் கண்ணாடிகள் மாற்றப்பட்டுள்ளன.

இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் ஃபோர்ஸ் மாடடோர் வேன்!! இந்தியா முழுக்க ட்ரிப் அடிக்கலாம்!

உட்புறத்தில் இருக்கைகளை ஃபோர்ஸ் ட்ராவலரில் இருந்து எடுத்துள்ளனர். ஏசி இல்லாததால், கேபினில் ஆங்காங்கே சில மின்விசிறிகளை பார்க்க முடிகிறது. அதேபோல் கூடுதல் காற்றிற்காக மேற்கூரையை இரு இடங்களில் வட்ட வடிவில் வெட்டியுள்ளனர். இந்த மாடடோர் வேனில் மாடிஃபிகேஷன் மாற்றங்கள் இன்னும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Old Force Matador van beautifully modified for all-India road trips.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X