மஹிந்திராவின் புதிய பொலிரோ நியோ!! எந்தெந்த வேரியண்ட்டில், என்னென்ன வசதிகள்? முழு விபரம்

மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மஹிந்திரா பொலிரோ நியோ கார் சந்தையில் ரூ.8.48 லட்சம் என்கிற ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வேரியண்ட்கள் என்னென்ன? அவற்றில் வழங்கப்பட்டுள்ள வசதிகள் என்னென்ன? என்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திராவின் புதிய பொலிரோ நியோ!! எந்தெந்த வேரியண்ட்டில், என்னென்ன வசதிகள்? முழு விபரம்

புதிய பொலிரோ நியோ, இதற்கு முன் இந்தியாவில் விற்பனையில் இருந்த மஹிந்திரா டியூவி300 மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருப்பது இந்நேரம் உங்களில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும்.

மஹிந்திராவின் புதிய பொலிரோ நியோ!! எந்தெந்த வேரியண்ட்டில், என்னென்ன வசதிகள்? முழு விபரம்

ராக்கி பழுப்பு, மெஜெஸ்டிக் சில்வர், நெடுஞ்சாலை சிவப்பு, முத்தின் வெள்ளை, வைரத்தின் வெள்ளை மற்றும் நபோலி கருப்பு என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொலிரோ நியோ என்4, என்8 மற்றும் என்10 என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் புதிய பொலிரோ நியோ!! எந்தெந்த வேரியண்ட்டில், என்னென்ன வசதிகள்? முழு விபரம்

இவற்றில் என்4 என்பது பொலிரோ நியோவின் ஆரம்ப நிலை வேரியண்ட்டாகும். அதாவது இந்த புதிய மாடலின் ரூ.8.48 லட்சம் என்ற ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் என்4 மாடல் தான் விற்பனைக்கு கிடைக்கும். இருப்பினும் இந்த வேரியண்ட்டிலேயே ஏகப்பட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மஹிந்திராவின் புதிய பொலிரோ நியோ!! எந்தெந்த வேரியண்ட்டில், என்னென்ன வசதிகள்? முழு விபரம்

இந்த வசதிகளில் பக்கவாட்டு பிளாஸ்டிக் க்ளாடிங், 3.5 இன்ச் ஓட்டுனர் தகவல் திரையுடன் இரட்டை-பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ள்ஸ்ட்டர், வினைல் இருக்கை உள்ளமைவு, நகர்த்தக்கூடிய மூன்றாம் இருக்கை வரிசை, ஈக்கோ மோட் உடன் ஏசி, பவர் ஸ்டேரிங் சக்கரம், பவர் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் மைய லாக்கிங் உள்ளிட்டவை அடங்குகின்றன.

மஹிந்திராவின் புதிய பொலிரோ நியோ!! எந்தெந்த வேரியண்ட்டில், என்னென்ன வசதிகள்? முழு விபரம்

மேலும் இவற்றுடன் ஆரம்ப நிலை என்4 வேரியண்ட்டில் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் (மைல்ட்-ஹைப்ரீட்) தொழிற்நுட்பம், 12 வோல்ட் சார்ஜிங் பாயிண்ட், சீட் பெல்ட் அணியாததை எச்சரிக்கும் அமைப்பு, அதிவேக எச்சரிப்பான், இரு முன்பக்க காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், கார்னரிங் ப்ரேக் கண்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் உதவி உள்ளிட்டவற்றையும் பெறலாம்.

மஹிந்திராவின் புதிய பொலிரோ நியோ!! எந்தெந்த வேரியண்ட்டில், என்னென்ன வசதிகள்? முழு விபரம்

பொலிரோ என்4 காரில் முன் & பின்பக்க பம்பர்கள் மற்றும் உதிரி சக்கர மூடி உள்ளிட்டவை காரின் நிறத்திலேயே வழங்கப்படுமாம். என்4-க்கு அடுத்த என்8 வேரியண்ட்டில் சக்கரங்களுக்கு மேலே வளைவுகள் மற்றும் இரட்டை நிறத்தில் பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு இறக்கை கண்ணாடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மஹிந்திராவின் புதிய பொலிரோ நியோ!! எந்தெந்த வேரியண்ட்டில், என்னென்ன வசதிகள்? முழு விபரம்

இவற்றுடன் சக்கர மூடிகள், ஸ்பாய்லர், காரில் ஏறுவதற்கு வசதியாக பக்கவாட்டு படிக்கட்டுகள், பியானோ கருப்பு நிறத்தில் மைய கன்சோல், ஏசி துளைகளில் வண்ண நிறங்கள், கண்ணைக்கூசாத பின்பக்கத்தை காட்டும் உட்புற ஓட்டுனர் கண்ணாடி, ஸ்டேரிங் சக்கர கார்னிஷ் முதலியவையும் பொலிரோ நியோ என்8 காரில் வழங்கப்படவுள்ளன.

மஹிந்திராவின் புதிய பொலிரோ நியோ!! எந்தெந்த வேரியண்ட்டில், என்னென்ன வசதிகள்? முழு விபரம்

இவை போதாது என்போர்க்காக, இரண்டாவது இருக்கை வரிசையையும் மடக்கக்கூடியதாக பெற்றுள்ள என்8 வேரியண்ட்டில் ப்ளூடூத், யுஎஸ்பி & ஆக்ஸ்-இன் இணைப்புடன் 2-டின் மியுசிக் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள் & 2 டிவிட்டர்ஸ், ப்ளூலென்ஸ் செயலி, வாய்ஸ் குறுந்தகவல் அமைப்பு, ஸ்டேரிங்கில் கூடுதல் கண்ட்ரோல்கள், காரில் நுழைவதற்கு ரிமோட் சாவி, பின்பக்க கண்ணாடியிலும் வைபர் & டீஃபாக்கர், ஓட்டுனர் தகவல் அமைப்பு மற்றும் துணியால் அலங்கரிக்கப்பட்ட இருக்கைகள் போன்றவையும் சிறப்பம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

மஹிந்திராவின் புதிய பொலிரோ நியோ!! எந்தெந்த வேரியண்ட்டில், என்னென்ன வசதிகள்? முழு விபரம்

தற்போதைக்கு டாப் வேரியண்ட்டாக விளங்கும் என்10-இல் க்ரோம் உள்ளீடுகளுடன் க்ரில், வளைவான ஹெட்லேம்ப்கள், உயரத்தை சரிச்செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, முன் & பின் இருக்கை வரிசைகளில் கைகளுக்கான தலையணை, 7 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், மின்சாரம் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பக்கவாட்டு இறக்கை கண்ணாடிகள், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஹேங்கர் உள்ளிட்டவற்றை பெறலாம்.

மஹிந்திராவின் புதிய பொலிரோ நியோ!! எந்தெந்த வேரியண்ட்டில், என்னென்ன வசதிகள்? முழு விபரம்

தற்போதைக்கு டாப் வேரியண்ட் என்று ஏன் கூறினேன் என்றால், விரைவில் பொலிரோ நியோவில் அதன் டாப் வேரியண்ட்டாக என்10(O)-ஐ அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதன் அறிமுகம் இன்னும் சில நாட்களில் இருக்கலாம்.

மஹிந்திராவின் புதிய பொலிரோ நியோ!! எந்தெந்த வேரியண்ட்டில், என்னென்ன வசதிகள்? முழு விபரம்

ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டினால் காரின் வெளிப்புறம் மற்றும் உட்புற தோற்றத்தில் தான் கவனிக்கத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர்த்து என்ஜின் அமைப்பில் இல்லை. ஏனெனில் டியூவி300 மாடலில் வழங்கிய அதே 1.5 லிட்டர், எம்ஹாவ்க் டீசல் என்ஜின் தான் பொலிரோ நியோவிலும் தொடரப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் புதிய பொலிரோ நியோ!! எந்தெந்த வேரியண்ட்டில், என்னென்ன வசதிகள்? முழு விபரம்

போட்டி மிகுந்ததாக உள்ள இந்திய காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவில் பொலிரோவை போன்று நிலைநிறுத்தப்பட்டுள்ள புதிய பொலிரோ நியோவிற்கும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்பட சொந்த நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 மாடலும் விற்பனையில் போட்டியாக விளங்கவுள்ளது.

மஹிந்திராவின் புதிய பொலிரோ நியோ!! எந்தெந்த வேரியண்ட்டில், என்னென்ன வசதிகள்? முழு விபரம்

ஆனால் உண்மையில் இவை எல்லாவற்றையும் விட டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் தான் புதிய மஹிந்திரா பொலிரோ நியோவிற்கு முக்கிய போட்டியாக விளங்கும் என கருதப்படுகிறது. ஏனெனில் பொலிரோவை போன்று டாடா மோட்டார்ஸும் நெக்ஸானின் புதிய டார்க் எடிசனை சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தி இருந்தது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Variant-wise features of the new Mahindra Bolero Neo. Full Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X