வெளிநாட்டு தயாரிப்புனு தப்பா நினைச்சுடாதீங்க... இந்தியாவில் தயாரானது! ஒரு நபர் பயணிக்கும் ஹைப்பர் இ-கார்!

மும்பையைச் சேர்ந்த வசிராணி ஆட்டோமோட்டிவ் (Vazirani Automotive) நிறுவனம் உருவாக்கிய எகோன்க் (Ekonk) எலெக்ட்ரிக் கார் முதல் முறையாக அதன் தரிசனத்தை வழங்கி இருக்கின்றது. இந்த காரை தயாரிப்பு நிறுவனம் மிகவு இலகு எடைக் கொண்ட மற்றும் சூப்பர் திறன் கொண்ட வாகனமாக உருவாக்கி இருக்கின்றது. இதுகுறித்த அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வெளிநாட்டு தயாரிப்புனு தப்பா நினைச்சுடாதீங்க... இந்தியாவில் தயாரானது! ஒரு நபர் பயணிக்கும் ஹைப்பர் இ-கார்!

வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் தோற்றத்தில் ஓர் எலெக்ட்ரிக் காரை இந்திய நிறுவனம் ஒன்று உருவாக்கி இருக்கின்றது. வசிராணி ஆட்டோமோட்டிவ் (Vazirani Automotive) எனும் இந்திய நிறுவனமே தற்போது நாம் படத்தில் பார்த்துக் கொண்டடிருக்கும் மின்சார காரை உருவாக்கிய நிறுவனம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் காருக்கு எகோன்க் (Ekonk) எனும் பெயரிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தயாரிப்புனு தப்பா நினைச்சுடாதீங்க... இந்தியாவில் தயாரானது! ஒரு நபர் பயணிக்கும் ஹைப்பர் இ-கார்!

இது ஓர் ஒற்றை இருக்கை வசதிக் கொண்ட ஹைப்பர் ரக எலெக்ட்ரிக் காராகும். இது நிறுவனத்தின் இரண்டாம் கார் மாடல் ஆகும். நிறுவனம் ஏற்கனவே ஷல் (Shul) கார் மாடலை இந்த உலகிற்கு காட்சிப்படுத்திவிட்டது. 2018ம் ஆண்டு குட்உட் நிகழ்வின்போது இக்கார் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

வெளிநாட்டு தயாரிப்புனு தப்பா நினைச்சுடாதீங்க... இந்தியாவில் தயாரானது! ஒரு நபர் பயணிக்கும் ஹைப்பர் இ-கார்!

இந்திய வேதங்களில் எகோன்க் என்பது தெய்வீக ஒளியின் தொடக்கம் என்பதற்கான பொருள் ஆகும். நிறுவனத்தின் நல்ல தொடக்கத்தை இதனுடன் ஒப்பிடும் வகையில் புதிய காருக்கு இப்பெயர் வைக்கப்பட்டிருப்பதாக நிறுவனத்தின் நிறுவனர் சங்கி வசிராணி (Chunky Vazirani) கூறியுள்ளார்.

வெளிநாட்டு தயாரிப்புனு தப்பா நினைச்சுடாதீங்க... இந்தியாவில் தயாரானது! ஒரு நபர் பயணிக்கும் ஹைப்பர் இ-கார்!

சங்கி வசிராணி முன்னாள் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஜாகுவார் சொகுசு கார் உற்பத்தி நிறுவனத்தின் ஊழியர் ஆவார். இவர் மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர். அடுத்த தலைமுறை மின்சார வாகனம் மற்றும் தொழில்நுட்பங்களை இந்தியாவில் உருவாக்கும் பொருட்டு வசிராணி ஆட்டமோட்டிவ் நிறுவனத்தை அவர் உருவாக்கியிருக்கின்றார்.

வெளிநாட்டு தயாரிப்புனு தப்பா நினைச்சுடாதீங்க... இந்தியாவில் தயாரானது! ஒரு நபர் பயணிக்கும் ஹைப்பர் இ-கார்!

இதனடிப்படையிலேயே ஷல் மற்றும் புதிய எகோன்க் உருவாக்கப்பட்டிருக்கின்றது. எகோன்க் எலெக்ட்ரிக் காற்றை கிழித்துச் செல்லும் வகையில் பிரத்யேகமான வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றது. எந்தவகையிலும், இதன் வேகம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய மிக சிறந்த உருவம் இக்காருக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையிலேயே பின் வீல்கள் மூடப்பட்டிருக்கின்றன.

வெளிநாட்டு தயாரிப்புனு தப்பா நினைச்சுடாதீங்க... இந்தியாவில் தயாரானது! ஒரு நபர் பயணிக்கும் ஹைப்பர் இ-கார்!

எகோன்க் உடல் பேனல்கள் கார்பன்-ஃபைபரால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த காரின் ஒட்டுமொத்த எடை 738 கிலோவாகும். ஆகையால், இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் குறைவான எடைக் கொண்ட ஹைப்பர் எலெக்ட்ரிக் காராக இது காட்சியளிக்கின்றது. இதன் திறன் வெளிப்பாடு 722 பிஎச்பி ஆகும்.

வெளிநாட்டு தயாரிப்புனு தப்பா நினைச்சுடாதீங்க... இந்தியாவில் தயாரானது! ஒரு நபர் பயணிக்கும் ஹைப்பர் இ-கார்!

அண்மையில் நாட்ராக்ஸ் ஆலையில் (NATRAX facility) வைத்து எகோன்கின் திறன் வெளிப்பாடு பற்றிய சோதனையோட்டம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, எலெக்ட்ரிக் வாகனம் வெறும் 2.54 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தில் சீறி பாய்ந்து சென்றிருக்கின்றது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 309 கிமீ என்றும் கண்டறியப்பட்டிருக்கின்றது.

வெளிநாட்டு தயாரிப்புனு தப்பா நினைச்சுடாதீங்க... இந்தியாவில் தயாரானது! ஒரு நபர் பயணிக்கும் ஹைப்பர் இ-கார்!

இதுபோன்று இன்னும் பல சிறப்புகளுடன் எகோன்க் உருவாக்கப்பட்டிருக்கின்றது. பேட்டரி குளிர்விப்பதற்காக நிறுவனம் பெஸ்போக் கூலிங் தீர்வை பயன்படுத்தியிருக்கின்றது. விலங்குகள் மற்றும் மனிதர்கள் தங்கள் உடல் உஷ்னத்தை கட்டுப்படுத்த சுவாசத்தை பயன்படுத்துவதைப் போல் இத்தீர்வு செயல்படும்.

வெளிநாட்டு தயாரிப்புனு தப்பா நினைச்சுடாதீங்க... இந்தியாவில் தயாரானது! ஒரு நபர் பயணிக்கும் ஹைப்பர் இ-கார்!

இன்னும் இதுமாதிரியான பல்வேறு சிறப்புகளை இக்கார் கொண்டிருப்பாதக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நிறுவனம் பல்வேறு முக்கிய தகவல்களை இன்னும் வெளியிடாத வண்ணம் இருக்கின்றது. மிக விரைவில் அனைத்து தகவல்களையும் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டு தயாரிப்புனு தப்பா நினைச்சுடாதீங்க... இந்தியாவில் தயாரானது! ஒரு நபர் பயணிக்கும் ஹைப்பர் இ-கார்!

தங்களின் நிறுவனம் மிகவும் அதிக வேக, குறைந்த எடைக் கொண்ட மற்றும் குறைந்த விலை மின்சாரம் வாகனங்களை உருவாக்க முக்கியத்துவம் செலுத்துவதாக வசிராணி தெரிவித்திருக்கின்றது. ஷல் கான்செப்ட் மாடல் 2018ம் ஆண்டு முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது. மிக விரைவில் இதனை உற்பத்திக்கு முன்னேற்ற இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

வெளிநாட்டு தயாரிப்புனு தப்பா நினைச்சுடாதீங்க... இந்தியாவில் தயாரானது! ஒரு நபர் பயணிக்கும் ஹைப்பர் இ-கார்!

இதற்கான பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆகையால், இன்னும் சில மாதங்களில் ஷல் சூப்பர் கார் இந்திய சாலையில் அதன் தரிசனைத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பின்னரே எகோன்க்-இன் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது.

Most Read Articles

English summary
Vazirani automotive unveiled ekonk electric hypercar
Story first published: Monday, October 25, 2021, 14:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X