வால்வோவின் என்ஜின் உடன் புதிய ஈச்சர் பேருந்துகள் அறிமுகம்!! விலை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில்!

வால்வோ மற்றும் ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனங்களின் கூட்டணி நிறுவனமான VE கமர்ஷியல் வாகனங்கள் (VECV) அதன் நடுத்தர பிரீமியம் வாகனங்கள் பிரிவில் தொலைத்தூர பயணங்களுக்கான இரு புதிய பேருந்துகளை இன்று (அக்டோபர் 12) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஈச்சர் பேருந்துகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

வால்வோவின் என்ஜின் உடன் புதிய ஈச்சர் பேருந்துகள் அறிமுகம்!! விலை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில்!

பயணிகள் அமர்வது மட்டுமின்றி படுத்துறங்கும் வசதியுடனும் இந்த புதிய ஈச்சர் பேருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 2020 ஆகஸ்ட்டில் VECV, வால்வோவின் பேருந்து பிரிவை வாங்கிய பிறகு அறிமுகப்படுத்தப்படும் முதல் தயாரிப்புகள் இவைகளாகும்.

வால்வோவின் என்ஜின் உடன் புதிய ஈச்சர் பேருந்துகள் அறிமுகம்!! விலை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில்!

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பேருந்துகள் கர்நாடகா மாநிலம் ஹோசாகோட்டேவில் உள்ள வால்வோ பேருந்துகள் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு, இனி தயாரிக்கப்பட உள்ளன. இவை இரண்டும், முன் என்ஜின் ஈச்சர் 6016 R LPO 12.4m என்ற சேசிஸின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.

வால்வோவின் என்ஜின் உடன் புதிய ஈச்சர் பேருந்துகள் அறிமுகம்!! விலை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில்!

இவற்றின் விலைகள் ரூ.40 லட்சத்திற்கும் ரூ.1 கோடி வரையில் நிர்ணயிக்கப்பட உள்ளன. ஏனெனில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒவ்வொரு விதமான பயன்பாட்டிற்காக பேருந்துகளை வாங்குவர். நம் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் கார்கள் எல்லாம் ரூ.1 கோடி என்ற அளவில் தான் இருக்கும்.

வால்வோவின் என்ஜின் உடன் புதிய ஈச்சர் பேருந்துகள் அறிமுகம்!! விலை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில்!

இந்த புதிய பேருந்துகளை அறிமுகம் செய்து பேசிய ஆகாஷ் பாஸி, அனைத்து மார்க்கெட் பிரிவுகளிலும் நடுத்தர பிரீமியம் தரத்தில் இருந்து முற்றிலும் பிரீமியம் தரம் வரையில் பேருந்துகளை வழங்கும் எங்களது செயல்பாட்டில் இது முதல் மைல்கல்லாகும். முழுமையாக தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட இவை இரயில், விமானங்களில் ஸ்லீப்பிங் பயணத்தின்போது கிடைக்கும் உணர்வை பூர்த்தி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

வால்வோவின் என்ஜின் உடன் புதிய ஈச்சர் பேருந்துகள் அறிமுகம்!! விலை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில்!

இந்த புதிய ஈச்சர் பேருந்துகள் ஒவ்வொன்றிலும் 43 பயணிகள் அமரலாம். இவற்றில் வால்வோ க்ரூப்பின் உலகளாவிய பவர்ட்ரெயின் குடும்பத்தை சேர்ந்த 5.1 லிட்டர் VEDX5 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 210 எச்பி மற்றும் 1200- 1600 ஆர்பிஎம்-இல் 825 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

வால்வோவின் என்ஜின் உடன் புதிய ஈச்சர் பேருந்துகள் அறிமுகம்!! விலை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில்!

இந்த இரு பேருந்துகளில் ஸ்லீப்பர் வெர்சனில் 30 பேர் படுத்துறங்குவதற்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பொருட்களை வைப்பதற்கும் இடவசதி உள்ளது. பயணிகள் படுத்து தூங்குவதற்கு பேருந்தின் முழு உயரமும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

வால்வோவின் என்ஜின் உடன் புதிய ஈச்சர் பேருந்துகள் அறிமுகம்!! விலை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில்!

இதில் இருக்கை வெர்சனில் பின்னோக்கி தள்ளக்கூடிய இருக்கைகள், கேபினை சுற்றிலும் எல்இடி விளக்குகள், யுஎஸ்பி துளைகள், படிப்பு விளக்குகள், ஸ்பீக்கர்கள், ஏசி விரும்பிகள் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய பேருந்துகளின் சில யூனிட்கள் பெங்களூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

வால்வோவின் என்ஜின் உடன் புதிய ஈச்சர் பேருந்துகள் அறிமுகம்!! விலை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில்!

கொரோனா வைரஸ் பரவலினால் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் இருந்து வெகுவாக குறைந்துள்ளது. அதிலும் தொலைத்தூர பயணங்களாக, மாநிலம் விட்டு மாநிலம் செல்ல பேருந்து பயணத்தை தேர்வு செய்வோரின் குறைவே ஆகும். ஆனால் இவர்கள் மீண்டும் பேருந்துகளை நோக்கி வருவார்கள் என VECV நிறுவன முதன்மை அதிகாரிகள் நம்பிக்கையாக உள்ளனர்.

வால்வோவின் என்ஜின் உடன் புதிய ஈச்சர் பேருந்துகள் அறிமுகம்!! விலை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில்!

தீபாவளி உள்ளிட்ட முக்கிய நாட்கள் நெருங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி பனிக்காலம் துவங்கியதும், டிசம்பர் மாதங்களில் இருந்து சுற்றுலா செல்வது அதிகரிக்க துவங்கும். அந்த சமயங்களில் தான் பேருந்துகள் விற்பனை சூடுப்பிடிக்கும். இதையெல்லாம் மனதில் வைத்துதான் தற்போது இந்த இரு புதிய பேருந்துகள் ஈச்சர் பிராண்டில் இருந்து களமிறக்கப்பட்டுள்ளன.

வால்வோவின் என்ஜின் உடன் புதிய ஈச்சர் பேருந்துகள் அறிமுகம்!! விலை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில்!

இந்த புதிய அறிமுகங்கள் குறித்து ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான வினோத் அகர்வால் பேசுகையில், கோவிட் அச்சங்கள் நீங்கி, தடுப்பூசியின் வேகமான வேகத்துடன், இண்டர்சிட்டி பேருந்து பயணங்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய சந்தையில் புதியதாக பேருந்து வாங்குவதல் மிகவும் குறைந்துவிட்டது. இதனால் தற்போது பேருந்துகளுக்கு பெரிய அளவில் தேவைக்கு இருக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

வால்வோவின் என்ஜின் உடன் புதிய ஈச்சர் பேருந்துகள் அறிமுகம்!! விலை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில்!

ஈச்சர் பிராண்டில் இருந்து தற்போதைக்கு கமர்ஷியல் வாகனங்கள் மட்டுமே வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் ஆனால் உலகளவில் பிரபலமான வால்வோ பிராண்டில் பயணிகள் கார்களும் விற்பனை செய்யப்படுகின்றன. வால்வோ நிறுவனம் அடுத்ததாக இந்திய சந்தையில் அதன் எக்ஸ்சி60 எஸ்யூவி மாடலின் ஹைப்ரீட் வெர்சனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
VECV Launches New Range Of Coach And Sleeper Buses In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X