வாகன பதிவு கடுமையாக சரிவு... ஆட்டோமொபைல் துறையை அச்சுறுத்தும் கொரோனா 2ம் அலை, செமி கண்டக்டர்கள் பற்றாக்குறை

இந்தியாவில் வாகன பதிவு மிக கடுமையாக சரிவடைந்துள்ள சூழலில், கொரோனா இரண்டாம் அலை மற்றும் செமி கண்டக்டர்கள் பற்றாக்குறை ஆகிய இரண்டு பிரச்னைகள், ஆட்டோமொபைல் துறையை அச்சுறுத்தி வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகன பதிவு கடுமையாக சரிவு... ஆட்டோமொபைல் துறையை அச்சுறுத்தும் கொரோனா 2ம் அலை, செமி கண்டக்டர்கள் பற்றாக்குறை

இந்தியாவில் நடப்பாண்டு மார்ச் மாதம் வாகனங்களின் பதிவு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் சரிவடைந்துள்ளது. ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA - Federation of Automobile Dealers Association) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் வாகனங்களின் பதிவு எண்ணிக்கை 28 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.

வாகன பதிவு கடுமையாக சரிவு... ஆட்டோமொபைல் துறையை அச்சுறுத்தும் கொரோனா 2ம் அலை, செமி கண்டக்டர்கள் பற்றாக்குறை

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையுடன், நடப்பாண்டு மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால், வாகனங்களின் பதிவு எண்ணிக்கை 28.64 சதவீதம் குறைந்துள்ளது. இதில், டிராக்டர்கள், பயணிகள் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்களின் விற்பனை அடங்கும்.

வாகன பதிவு கடுமையாக சரிவு... ஆட்டோமொபைல் துறையை அச்சுறுத்தும் கொரோனா 2ம் அலை, செமி கண்டக்டர்கள் பற்றாக்குறை

ஆனால் நடப்பாண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிட்டால், அதன்பின் வந்த மார்ச் மாதத்தில் வாகனங்களின் பதிவு எண்ணிக்கை 10.05 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்ட விற்பனை மந்த நிலையில் இருந்து ஆட்டோமொபைல் துறை மீண்டு வருவதை இது எடுத்துக்காட்டுகிறது.

வாகன பதிவு கடுமையாக சரிவு... ஆட்டோமொபைல் துறையை அச்சுறுத்தும் கொரோனா 2ம் அலை, செமி கண்டக்டர்கள் பற்றாக்குறை

விலாவரியாக பார்த்தால், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு மார்ச் மாதத்தில், டிராக்டர்கள் மற்றும் பயணிகள் வாகனங்களின் பதிவு எண்ணிக்கை முறையே 29.21 சதவீதமும், 28.39 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஆனால் மற்ற செக்மெண்ட்கள் இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

வாகன பதிவு கடுமையாக சரிவு... ஆட்டோமொபைல் துறையை அச்சுறுத்தும் கொரோனா 2ம் அலை, செமி கண்டக்டர்கள் பற்றாக்குறை

அதாவது கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் ஆகிய செக்மெண்ட்கள் இன்னும் தங்களது முழுமையான இயல்பு நிலைக்கு வரவில்லை. மார்ச் 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த செக்மெண்ட்களில் கடந்த மாதம் வாகனங்களின் பதிவு எண்ணிக்கை முறையே 35.26 சதவீதம், 50.72 சதவீதம், 42.20 சதவீதம் குறைந்துள்ளது.

வாகன பதிவு கடுமையாக சரிவு... ஆட்டோமொபைல் துறையை அச்சுறுத்தும் கொரோனா 2ம் அலை, செமி கண்டக்டர்கள் பற்றாக்குறை

ஆனால் நடப்பாண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, மார்ச் மாதத்தில் அனைத்து செக்மெண்ட்களிலும் வாகனங்களின் பதிவு உயர்ந்துள்ளது. இதன்படி இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் மற்றும் டிராக்டர் ஆகிய செக்மெண்ட்களின் பதிவு எண்ணிக்கை முறையே 9.54 சதவீதம், 14.15 சதவீதம், 14.15 சதவீதம், 10.11 சதவீதம், 12.60 சதவீதம் உயர்ந்துள்ளது.

வாகன பதிவு கடுமையாக சரிவு... ஆட்டோமொபைல் துறையை அச்சுறுத்தும் கொரோனா 2ம் அலை, செமி கண்டக்டர்கள் பற்றாக்குறை

அதே நேரத்தில் பயணிகள் வாகன செக்மெண்ட்டில் காத்திருப்பு காலம் காரணமாக 47 சதவீதத்திற்கும் மேற்பட்ட டீலர்கள், 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும், ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. செமி-கண்டக்டர்களுக்கு உலக அளவில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

வாகன பதிவு கடுமையாக சரிவு... ஆட்டோமொபைல் துறையை அச்சுறுத்தும் கொரோனா 2ம் அலை, செமி கண்டக்டர்கள் பற்றாக்குறை

இந்த பிரச்னை காரணமாக இந்தியாவில் கார்களுக்கான காத்திருப்பு காலம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் இந்தியாவில் தற்போது மீண்டும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த பிரச்னை காரணமாக ஆட்டோமொபைல் துறை மீண்டும் ஒரு முறை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வாகன பதிவு கடுமையாக சரிவு... ஆட்டோமொபைல் துறையை அச்சுறுத்தும் கொரோனா 2ம் அலை, செமி கண்டக்டர்கள் பற்றாக்குறை

கடந்தாண்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த பிரச்னையில் இருந்து ஆட்டோமொபைல் துறை தற்போதுதான் மீண்டு வந்து கொண்டுள்ளது. ஆனால் மீண்டும் ஒரு முறை மிக கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால், இந்த வளர்ச்சியில் கடுமையான தாக்கம் ஏற்படலாம்.

Most Read Articles
English summary
Vehicle Registrations In March 2021 Fall By Over 28 Percent: Read More To Find Out. Read in Tamil
Story first published: Thursday, April 8, 2021, 21:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X