பழைய வாகன அழிப்புக் கொள்கை... உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள்!

மத்திய பட்ஜெட்டில் பழைய வாகனங்களுக்கான அழிப்புக் கொள்கை நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான விரிவானத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது பட்ஜெட் உரையின்போது தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பழைய வாகன அழிப்புக் கொள்கை குறித்து உள்ள சில முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பழைய வாகன அழிப்புக் கெள்கை... உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள்!

மாசு பிரச்னை

பழைய வாகன அழிப்புக் கொள்கையில் 15 ஆண்டுகளை கடந்த பஸ், டிரக் மற்றும் சரக்கு வாகனங்களையும், 20 ஆண்டுகள் ஆன கார், பைக் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு வாகனங்களையும் பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்தும் வகையில் இந்த கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

பழைய வாகன அழிப்புக் கெள்கை... உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள்!

ஆயுட்காலம்

இதன்படி, 15 ஆண்டுகள் கடந்த வர்த்தக வாகனங்கள் மற்றும் 20 ஆண்டுகள் கடந்த வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்த உரிமையாளர் விரும்பினால், அதற்கு ஆர்சி புதுப்பிப்பதற்காக தகுதிச் சோதனைக்கு உட்படுத்துவது அவசியம். இந்த தகுதி சோதனையானது அங்கீகரிக்கப்பட்ட தானியங்கி சோதனை மையங்களில் நடத்தப்படும்.

பழைய வாகன அழிப்புக் கெள்கை... உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள்!

தேர்ச்சி அவசியம்

இந்த சோதனையில் மாசு உமிழ்வு, பாதுகாப்பு தரம் ஆகியவை ஆய்வு செய்யப்படும். அதில் தேர்ச்சி பெற்றால், தொடர்ந்து பயன்படுத்துவதற்கு பதிவுச் சான்று புதுப்பித்து தரப்படும். ஆனால், சோதனையில் தகுதி பெற்றாலும், தகுதிச் சோதனை செய்வதற்கான கட்டணத்தை வாகன உரிமையாளர் செலுத்த வேண்டும்.

பழைய வாகன அழிப்புக் கெள்கை... உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள்!

சோதனைக்கான கட்டணம்

ஒரு தகுதிச் சோதனைக்காக ரூ.40,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த தகுதிச் சான்று 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அதிகபட்சமாக மூன்று முறை வரையில் தகுதிச் சோதனை செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால், முழுமையான விபரங்கள் இதுவரை இல்லை.

பழைய வாகன அழிப்புக் கெள்கை... உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள்!

பசுமை வரி

மேலும், 8 ஆண்டுகள் கடந்த வர்த்தக வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் பதிவுச் சான்றை புதுப்பிக்கும்போது கூடுதலாக பசுமை வரியை செலுத்த வேண்டும். , மாசு உமிழ்வு அதிகம் கொண்ட நகரங்களில் சாலை வரியின் அடிப்படையில் அதிக அளவு பசுமை வரியும், மாசு உமிழ்வு குறைவான நகரங்களில் குறைவாகவும் நிர்ணயிக்கப்படும். இது 10 முதல் 25 சதவீதம் வரை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

பழைய வாகன அழிப்புக் கெள்கை... உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள்!

பதிவு ரத்து

தவிரவும், 15 ஆண்டுகளை கடந்த வர்த்தக வாகனங்கள் மற்றும் 20 ஆண்டுகளை கடந்த தனிநபர் பயன்பாட்டு வாகனங்களை தகுதிச் சோதனைக்கு உட்படுத்தாமல் பயன்படுத்தினால், அவரை பதிவு இல்லாத வாகனங்களாக கருதப்படும் என்றும் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த புதிய திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

பழைய வாகன அழிப்புக் கெள்கை... உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள்!

அப்புறப்படுத்துவது அவசியம்

இதனிடையே, மத்திய அரசு வட்டாரத் தகவல்களின்படி, நாட்டில் உள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 5 சதவீதம் (51 லட்சம் வாகனங்கள்) அழிக்கப்பட வேண்டிய பட்டியலில் இருப்பதாகவும், இந்த வாகனங்கள்தான் மாசு உமிழ்வை வெளிப்படுத்துவதில் 70 சதவீத பங்களிப்பை பெற்றிருப்பதாகவும், எனவே, இவற்றை பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்துததல் அவசியம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.

பழைய வாகன அழிப்புக் கெள்கை... உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள்!

முரண்பாடுகள்

இதனிடையே, இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில் பல்வேறு முரண்பாடுகளும், தடங்கல்களும் உள்ளன. எனவே, சரியான வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வாகன நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. மேலும், பழைய வாகனங்களை அழிப்பதற்கு கொடுக்கும் வாகன உரிமையாளர்கள் புதிய வாகனங்களை வாங்கும்போது சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பதும் அவசியம் என்றும் பரிந்துரை செய்துள்ளன.

பழைய வாகன அழிப்புக் கெள்கை... உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள்!

சிறப்புச் சலுகைகள்

இல்லையென்றால், இந்த திட்டம் எதிர்பார்த்த அளவு பலன் தராது. வாகன உரிமையாளர்கள் தாமாக முன்வந்து கொடுப்பதற்கான எளிய வழிமுறைகள் மற்றும் சிறப்புச் சலுகைகளை அரசு அறிவிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

பழைய வாகன அழிப்புக் கெள்கை... உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள்!

வர்த்தக வாகனத் துறைக்கு அதிக பலன்

இந்த திட்டம் மூலமாக வர்த்தக வாகன விற்பனை சந்தை வளர்ச்சி பெறும். ஆனால், கார் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு வாகன சந்தையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் சில வாகன நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. எது எப்படியோ, விபத்து அபாயத்துடன், அதிக மாசு உமிழ்வை ஏற்படுத்தும் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்துவது நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயமாகவே கருத முடியும்.

Most Read Articles

English summary
Vehicle Scrappage Policy Fitness Rules and Regulations Explained in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X