விலை குறைவான மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இப்படிதான் இருக்கும்!! சக்கரங்கள் மட்டும்தான் வேறயா? - வீடியோ

மஹிந்திரவின் சமீபத்திய வெற்றிக்கரமான மாடல்களுள் எக்ஸ்யூவி700 எஸ்யூவியும் ஒன்றாகும். குறைக்கடத்திகளின் பற்றாக்குறையினால் எக்ஸ்யூவி700 கார்களை தேவைக்கு ஏற்ப அதிகமாக தயாரிக்க முடியாமல் தத்தளித்துவரும் மஹிந்திரா, ஒரு வருடம் வரையில் அதிகரித்துவரும் எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவை குறைக்க பலக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

விலை குறைவான மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இப்படிதான் இருக்கும்!! சக்கரங்கள் மட்டும்தான் வேறயா? - வீடியோ

இதன்படி, சில தொழிற்நுட்ப வசதிகள் இல்லாத எக்ஸ்யூவி700 கார்களை விற்பனைக்கு கொண்டுவர மஹிந்திரா தயாராகி வருகிறது. ஏனெனில் அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்பு போன்ற சில பாகங்களுக்காக அதிக குறைக்கடத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு குறை-தொழிற்நுட்பங்கள் கொண்ட வேரியண்ட்களினால் இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி காரை குறைவான விலையில் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

விலை குறைவான மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இப்படிதான் இருக்கும்!! சக்கரங்கள் மட்டும்தான் வேறயா? - வீடியோ

தற்சமயம் எக்ஸ்யூவி700 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.49 லட்சங்களில் இருந்து ஆரம்பிக்கின்றன. நாம் படங்களில் பார்க்கும் பெரும்பான்மையான எக்ஸ்யூவி700 கார்கள் டாப் வேரியண்ட்களாகும். ஏனெனில் புதியதாக அறிமுகப்படுத்தும் கார்களை சற்று பிரீமியம் தர தோற்றத்தில் விளம்பரப்படுத்தவே எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் விரும்பும். இதனால் எக்ஸ்யூவி700 காரின் பேஸ் வேரியண்ட்டை பலர் இப்போதுவரையில் பார்க்காமல் கூட இருக்கலாம்.

அத்தகையவர்களுக்காகவே, ரூ.12.49 லட்சங்கள் என்ற விலையில் கிடைக்கும் எக்ஸ்யூவி700-இன் ஆரம்ப நிலை எம்.எக்ஸ் வேரியண்ட்டை பற்றிய இந்த வீடியோ மோட்டார் பிளானட் அபிசியல் என்கிற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் நமக்கு தெரியவந்துள்ள விஷயங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விலை குறைவான மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இப்படிதான் இருக்கும்!! சக்கரங்கள் மட்டும்தான் வேறயா? - வீடியோ

எக்ஸ்யூவி700 எம்.எக்ஸ் வேரியண்ட் 5-இருக்கை தேர்வில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. குறைவான விலையினை நிர்ணயிக்க வேண்டி, இவ்வாறு 5 இருக்கைகள் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படும் எம்.எக்ஸ் வேரியண்ட்டிற்கு கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட எஸ்யூவி கார்கள் போட்டியாக விளங்குகின்றன.

விலை குறைவான மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இப்படிதான் இருக்கும்!! சக்கரங்கள் மட்டும்தான் வேறயா? - வீடியோ

இந்த வீடியோவின் துவக்கத்தில், காருக்கான சாவியை ஒருவர் காட்டுகிறார். இந்த சாவியில், மைய லாக்கிங் மற்றும் பூட் பகுதியை திறப்பதற்கான கண்ட்ரோல்கள் உள்ளன. சாவியின் மூலம் காரின் கதவு பூட்டுகளை தளர்த்தியவுடன் முன்பக்க ஹெட்லேம்ப்கள் ஒளிர்கின்றன. இது ஆரம்ப நிலை வேரியண்ட் என்பதால், எல்இடி டிஆர்எல்கள் & ஃபாக் விளக்குகளுக்கு பதிலாக ஹலோஜன் ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விலை குறைவான மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இப்படிதான் இருக்கும்!! சக்கரங்கள் மட்டும்தான் வேறயா? - வீடியோ

காரின் 17-இன்ச் இரும்பு சக்கரங்களில் 235/65 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் காரின் உடல் நிறத்தில் இல்லாமல். பளபளப்பான கருப்பு நிறத்தில் உள்ளன. எலக்ட்ரிக் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய இந்த கண்ணாடிகளில் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

விலை குறைவான மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இப்படிதான் இருக்கும்!! சக்கரங்கள் மட்டும்தான் வேறயா? - வீடியோ

விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும், பறித்து இழுக்கக்கூடிய கைப்பிடிகளை கதவுகளில் மஹிந்திரா வழங்கியுள்ளது. பின்பக்கத்தில் எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் வேரியண்ட் குறித்த எந்த முத்திரையும் வீடியோவில் உள்ள இந்த காரில் இல்லை. இந்த வேரியண்ட்டில் பார்க்கிங் சென்சார்களை பெற முடியும். ஆனால் ரியர் பார்க்கிங் கேமிரா எதுவும் இல்லை.

விலை குறைவான மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இப்படிதான் இருக்கும்!! சக்கரங்கள் மட்டும்தான் வேறயா? - வீடியோ

மூன்றாவது இருக்கை வரிசை இல்லாததால், பின்பக்கத்தில் பெரிய அளவில் பொருட்களை வைக்கும் பகுதி வழங்கப்பட்டுள்ளது. வாஷர் உடன் பின்பக்க கண்ணாடிக்கு எந்த வைபரும் வழங்கப்படவில்லை. ஆனால் நிறுத்து விளக்கு உள்ளது. உட்புறத்தில், ஆடியோ கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம் வழங்கப்பட்டிருப்பது, உண்மையில் நல்ல விஷயமாகும். டேஸ்போர்டில் ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடிய சிறிய அளவிலான தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

விலை குறைவான மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இப்படிதான் இருக்கும்!! சக்கரங்கள் மட்டும்தான் வேறயா? - வீடியோ

இதனுடன், அனலாக் டயல்களுடன் ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வழங்கக்கூடிய திரை, மேனுவல் ஏசி, பவர் ஜன்னல் கண்ணாடிகள், எல்இடி கேபின் விளக்கு, அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள், யுஎஸ்பி சார்ஜிங் துளை, உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, டைப்-சி சார்ஜிங் துளை, பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி துளைகள், பாட்டில் ஹோல்டர்கள் மற்றும் மேனுவல் பார்க்கிங் ப்ரேக் போன்றவையும் இந்த எக்ஸ்யூவி700 எம்.எக்ஸ் வேரியண்ட்டில் உள்ளன.

விலை குறைவான மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இப்படிதான் இருக்கும்!! சக்கரங்கள் மட்டும்தான் வேறயா? - வீடியோ

மேலுள்ள வீடியோவில் காட்சித்தரும் எக்ஸ்யூவி700 எம்.எக்ஸ் வேரியண்ட்டில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.49 லட்சம் கிடையாது, ரூ.12.99 லட்சமாகும். ஏனெனில் ரூ.12.49 லட்சங்கள் என்பது பெட்ரோல் என்ஜின் உடனான எம்.எக்ஸ் வேரியண்ட்டின் விலையாகும். ஆரம்ப நிலை வேரியண்ட்களில் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 155 பிஎஸ் மற்றும் 360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே கொடுக்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV700 Base Variant in a walkaround video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X