உலகின் சிறந்த கார் விருதை வென்றது ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மின்சார கார்!

2021ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த கார் விருதை ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மின்சார கார் வென்றுள்ளது. கடும் போட்டிக்கு மத்தியில் பல்வேறு புள்ளிகள் அடிப்படையில் இறுதியில் ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 கார் வெற்றி பெற்றுள்ளது.

 உலகின் சிறந்த கார் விருதை வென்றது ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மின்சார கார்!

கடந்த சில மாதங்களாக 2021ம் ஆண்டின் உலகின் சிறந்த கார் விருதுக்கான பணிகள் நடந்தன. உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் பல புதிய கார் மாடல்கள் இந்த விருதை பெறுவதற்கு முட்டி மோதின.

 உலகின் சிறந்த கார் விருதை வென்றது ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மின்சார கார்!

இந்த நிலையில், கடுமையான போட்டிகளை கடந்து ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 எலெக்ட்ரிக் கார் 2021ம் ஆண்டின் உலகின் சிறந்த கார் விருதை பெற்றிருக்கிறது. மேலும், உலகின் சிறந்த கார் விருதை பெறும் ஐந்தாவது ஃபோக்ஸ்வேகன் கார் என்பதுடன், அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாகவும் பெருமை பெற்றுள்ளது.

 உலகின் சிறந்த கார் விருதை வென்றது ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மின்சார கார்!

புதிய ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 எலெக்ட்ரிக் கார் மாடலானது டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும். இந்த கார் டிசைன், தொழில்நுட்பம், சுற்றுச்சூழலுக்கு உகந்தது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் சிறப்பானதாக நடுவர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 உலகின் சிறந்த கார் விருதை வென்றது ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மின்சார கார்!

ஐடி.4 எலெக்ட்ரிக் காருக்கு உலகின் சிறந்த கார் விருது கிடைத்திருப்பது குறித்து ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் உயர் அதிகாரி தாமஸ் உல்பிரிச் கூறுகையில்,"உலகின் மிகவும் முக்கியமான காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற சிறந்த மாடலை திறம்பட உருவாக்கி இருக்கிறோம் என்று கருதுகிறோம்," என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 உலகின் சிறந்த கார் விருதை வென்றது ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மின்சார கார்!

புதிய ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 காரில் 77kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 520 கிமீ தூரம் வரை பயணிக்கும். 0 - 100 கிமீ வேகத்தை 8.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும். அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்ட இந்த காரை கரடுமுரடான சாலைகளிலும் எளிதாக பயன்படுத்த இயலும் என்று ஃபோக்ஸ்வேகன் கூறுகிறது.

 உலகின் சிறந்த கார் விருதை வென்றது ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மின்சார கார்!

மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், 3டி எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், 21 அங்குல சக்கரங்கள் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும். இந்த காரில் 543 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. இருக்கைகளை மடக்கினால் 1,575 லிட்டர் கொள்திறன் கொண்டதாக மாற்ற முடியும்.

 உலகின் சிறந்த கார் விருதை வென்றது ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மின்சார கார்!

இந்த காரில் இரண்டு மின்னணு திரைகள் டேஷ்போர்டில் இடம்பெற்றுள்ளது. ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் சாதனமாகவும் உள்ளன. சாதாரண பட்டன்கள் அதிகபட்சமாக தவிர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் உலக அளவில் 1.50 லட்சம் ஐடி.4 கார்களை டெலிவிரி கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. அந்த அளவுக்கு இந்த கார் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது.

 உலகின் சிறந்த கார் விருதை வென்றது ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மின்சார கார்!

உலகின் சிறந்த கார் விருது அமைப்பு

உலக அளவில் சிறந்த கார்களை அடையாளப்படுத்தவும், கவுரப்படுத்தும் விதமாக புதிய கார்களை சோதனை செய்து சிறந்த மாடல்களுக்கு விருது வழங்கி வருகிறது 'வேர்ல்டு கார் அவார்டு' அமைப்பு. ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை அறிமுகமாகும் புதிய கார்களை பரிசோதித்து இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுகிறது.

 உலகின் சிறந்த கார் விருதை வென்றது ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மின்சார கார்!

இந்த அமைப்பில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையின் நிபுணர்கள் நடுவர்களாக கலந்துகொண்டு புதிய கார் மாடல்களை தேர்வு செய்கின்றனர்.

 உலகின் சிறந்த கார் விருதை வென்றது ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மின்சார கார்!

புதிய கார்களை ஓட்டி பார்த்து சோதனை செய்யும்போது கிடைக்கும் அனுபவம், காரில் இடம்பெற்றிருக்கும் பாதுகாப்பு, வசதிகள், தொழில்நுட்ப வசதிகள், டிசைன் என பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், புள்ளிகளை வழங்கி சிறந்த கார்களை தேர்வு செய்கின்றனர். மேலும், உலகின் சிறந்த கார் மட்டுமின்றி, இதர பிரிவுகளிலும் சிறந்த கார்களுக்கான விருது வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
The Volkswagen ID.4 has been named of the World Car of the Year 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X