ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்... இதுல என்ன ஸ்பெஷல் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

ஃபோக்ஸ்வேகன் அதன் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றான போலோ-வில் புதிய தானியங்கி கியர்பாக்ஸ் வேரியண்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வேரியண்ட் குறித்த கூடுதல் தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்... இதுல என்ன ஸ்பெஷல் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் போலோ-வும் ஒன்று. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் மாடல் என்றும் இதைக் கூறலாம். இந்த நிலையிலேயே இக்கார் மாடலில் புதிதாக தானியங்கி கியர்பாக்ஸ் வேரியண்டை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்... இதுல என்ன ஸ்பெஷல் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

போலோ கம்ஃபோர்ட்லைன் டிஎஸ்ஐ (Polo Comfortline TSI) எனும் பெயரில் இந்த வேரியண்ட் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்டிற்கு ரூ. 8.51 லட்சம் என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்... இதுல என்ன ஸ்பெஷல் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

இது ஓர் உயர்நிலை தேர்வு என்பதால் இந்த உச்சபட்ச விலை இவ்வேரியண்டிற்கு நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அதேசமயம், இதை கூடுதல் விலைக் கொண்ட வேரியண்ட் ஒன்று போலோவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அது ரூ. 9.45 லட்சம் என்ற விலையில் விற்பனையில் கிடைக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரும் விலைதான் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்... இதுல என்ன ஸ்பெஷல் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

இந்த நிலையிலேயே இதைவிட ரூ. 1 லட்சம் குறைவான விலையில் புதிய தானியங்கி கியர்பாக்ஸ் வேரியண்ட் இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ளது. இதில், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், தானியங்கி கால நிலை மாற்றம் செய்யும் கருவி, 17.7 செமீ அளவிலான பிளாபுங்க்ட் மியூசிக் சிஸ்டம் உள்ளிட்டவை கூடுதலாக புதிய தானியங்கி வேரியண்டில் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்... இதுல என்ன ஸ்பெஷல் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

இதை தவிர வேறு எந்த மாற்றங்களும் புதிய வேரியண்டில் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், வழக்கமான வேரியண்டுகளில் என்னென்ன அம்சங்கள் கிடைக்கின்றதோ, அதே வசதிகள்தான் புதிய வேரியண்டிலும் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்... இதுல என்ன ஸ்பெஷல் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

அதேசமயம், முன்னதாகக் கூறியதைப் போல சில குறிப்பிட்ட அம்சங்கள் மட்டும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. புதிய வேரியண்டில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 109 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்... இதுல என்ன ஸ்பெஷல் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

புதிய தேர்வை ஃபிளாஷ் ரெட், சூரிய மறைவு சிவப்பு, மிட்டாய் வெள்ளை, ரெஃப்ளக்ஸ் வெள்ளி, கார்பன் ஸ்டீல் ஆகிய நிறத் தேர்வுகளில் வழங்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. புதிய வேரியண்டின் அறிமுகம்குறித்து ஃபோக்ஸ்வாகன் நிறுவத்தின் இந்தியாவிற்கான இயக்குனர் ஆஷிஷ் குப்தா கூறியதாவது, "இந்தியாவில் உள்ள எங்கள் விவேகமான வாடிக்கையாளர்களுக்காக போலோ குடும்பத்தில் புதிய வேரியண்ட் டிஎஸ்ஐ ஏடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்... இதுல என்ன ஸ்பெஷல் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

"இதை அறிமுகம் செய்வதில் கூடுதல் மகிழ்ச்சியடைவதாக கூறிய அவர், போலோ தொடர்ந்து ஒரு வலுவான போட்டியாளராக உள்ளது. புதிய வேரியண்டின் அறிமுகத்தின் மூலம் புதிய வாடிக்கையாளர்களைக் கவர முடியும்" என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Most Read Articles

English summary
Volkswagen Introduces All New Polo Comfortline TSI With Automatic Transmission. Read In Tamil.
Story first published: Thursday, June 3, 2021, 14:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X