ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ மேட் எடிசன்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம்

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ கார்களின் லிமிடெட் மேட் எடிசன்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ மேட் எடிசன்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம்

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் ராபிட் செடான் காரின் புதிய மேட் எடிசனை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டுவந்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஸ்கோடாவின் கூட்டணி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் அதன் செடான் மற்றும் ஹேட்ச்பேக் கார்களான வெண்டோ & போலோவில் மேட் எடிசன்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ மேட் எடிசன்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம்

ஆனால் ஃபோக்ஸ்வேகனின் இந்த ஸ்பெஷல் எடிசன் கார்கள் லிமிடெட் எடிசன்களாகும். அதாவது இவை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேட் எடிசன்களை போலோ ஜிடி மற்றும் வெண்டோ ஹைலைன் ஆட்டோமேட்டிக் & ஹைலைன்+ ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களின் அடிப்படையில் வாங்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ மேட் எடிசன்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம்

இதில் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி மேட் காரின் விலை ரூ.9.99 லட்சமாகவும், வெண்டோ ஹைலைன் ஆட்டோமேட்டிக் மேட்-இன் விலை ரூ.11.94 லட்சமாகவும், வெண்டோ ஹைலைன்+ ஆட்டோமேட்டிக் மேட்-இன் விலை ரூ.13.34 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ மேட் எடிசன்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம்

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ கார்களின் இந்த லிமிடெட் எடிசன்கள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஃபோக்ஸ்வேகன் டீலர்ஷிப் மையங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். தற்போதைய அறிமுகத்தை தொடர்ந்து இந்த ஸ்பெஷல் எடிசன் ஃபோக்ஸ்வேகன் கார்களின் டெலிவிரிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ மேட் எடிசன்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம்

ஸ்கோடா ராபிட் மேட் எடிசனை போன்று, புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ கார்களின் இந்த ஸ்பெஷல் எடிசன்களும் கார்பன் இரும்பு க்ரே மேட்-டில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த மேட் எடிசன் கார்களும் அடர் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன. இதன்படி காரின் மேற்கூரை, பெட்ரோல் நிரப்பும் பகுதி, முன்பக்க & பின்பக்க பம்பர்களும் கார்பன் இரும்பு க்ரே நிறத்தை மேட் ஃபினிஷிங்கில் பெற்றுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ மேட் எடிசன்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம்

அதேநேரம் பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் கதவு கைப்பிடிகள் உள்ளிட்டவை பளபளப்பான கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி மேட் மற்றும் வெண்டோ மேட் கார்களில் ஒரே மாதிரியான 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ மேட் எடிசன்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம்

அதிகப்பட்சமாக 110 பிஎஸ் மற்றும் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் இணைக்கப்படுகிறது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இவை கிடைக்காது. போலோ & வெண்டோ கார்களில் ஃபோக்ஸ்வேகனின் 4எவர் கார் தொகுப்பு நிலையானதாக வழங்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ மேட் எடிசன்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம்

இந்த தொகுப்பில் 4-வருட உத்தரவாதம், 4-வருடத்திற்கு பயணத்தின்போது தேவைப்படும் சாலையோர உதவிகள் மற்றும் 3 இலவச சேவைகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த லிமிடெட் எடிசன் கார்களை அறிமுகம் செய்து பேசிய ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார்கள் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் அஷிஷ் குப்தா, போலோ & வெண்டோ எங்கள் வர்க்க முன்னணி தயாரிப்புகள்.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ மேட் எடிசன்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம்

அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அவை அவற்றின் பிரிவுகளில் புதிய அளவுக்கோல்களை அமைத்து வருகின்றன. இன்று, மற்ற கார்களில் இருந்து தனித்து நிற்க விரும்பும் எங்கள் தனித்துவமான வாடிக்கையாளர்களுக்காக இந்த இரு கார் லைன்களின் வரையறுக்கப்பட்ட மேட் பதிப்பு மாதிரிகளை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ மேட் எடிசன்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம்

எங்கள் வாடிக்கையாளர்கள் இந்த கார்களை மிகச்சிறந்த நேர்த்தியுடன் ஓட்டுவதை அனுபவிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இது சிறந்த தரமானவை. ஜெர்மன் பொறியியல் மற்றும் டிஎஸ்ஐ என்ஜின் மூலமாக வேடிக்கையான பயண அனுபவத்தை இவை நிச்சயமாக வழங்கும் என்றார்.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ மேட் எடிசன்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம்

இவற்றிற்கு முன் ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் இருந்து கடைசியாக டைகுன் நடுத்தர-அளவு எஸ்யூவி கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்திருந்தது. டைனமிக் லைன் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் லைன் என்ற இரு விதமான ட்ரிம் நிலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டைகுனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.49 லட்சத்தில் இருந்து ரூ.17.50 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Volkswagen India launches the limited Matt Edition of Polo and Vento.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X