கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை முகாம்... ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு

சிறப்பு சேமிப்புச் சலுகைகளுடன் ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு பருவமழை காலத்திற்கான சிறப்பு பரிசோதனை முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை முகாம்... ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு

நாட்டின் சில பகுதிகளில் பருவமழை காலம் துவங்கி இருப்பதையடுத்து, கார்களுக்கு கூடுதல் பாரமரிப்பு தேவைப்படுகிறது. இதனால், கார் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம்கள் மூலமாக பராமரிப்பு சேவையை வழங்குகின்றன.

கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை முகாம்... ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு

அந்த வகையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பருவமழை காலத்திற்கான சிறப்பு பரிசோதனை முகாமை அறிவித்துள்ளது. ஜூன் 1 முதல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர்களில் இந்த பருவமழை கால பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை முகாம்... ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு

இந்த முகாமில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்களின் கார்களுக்கு பருவமழை காலத்தில் சிறப்பு கவனம் தேவைப்படும் 10 விதமான பரிசோதனைகள் கட்டணமில்லாமல் செய்யப்படும்.

கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை முகாம்... ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு

குறிப்பாக, டயர், பேட்டரி உள்ளிட்டவற்றிருக்கும் சிறப்பு பரிசோதனைகள் செய்யப்படும். அதேபோன்று, பூஞ்சைகளை அழிக்கும் நடைமுறைகள் மற்றும் கிருமிநீக்க நடைமுறையும் கார்களுக்கு மேற்கொள்ளப்படும்.

கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை முகாம்... ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு

இதன்மூலமாக, வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் உறுதி செய்யப்படும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், லாக்டவுன் காரணமாக, கார்கள் பல நாட்கள் நிறுத்தி வைக்கும் சூழல் இருப்பதால், இந்த பரிசோதனை முகாம் கூடுதல் மதிப்பை தரும் வகையிலும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அமையும்.

கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை முகாம்... ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு

இதுதவிர்த்து, கூடுதல் வாரண்டி, சர்வீஸ் திட்டங்களுக்கான நீட்டிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளையும் ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக, இந்த திட்டங்கள் காலாவதியாகும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு கூடுதல் பயன் தரும்.

கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை முகாம்... ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு

இதுகுறித்து ஃபோக்ஸ்வேகன் இந்தியா இயக்குனர் ஆசிஷ் குப்தா கூறுகையில்,"வாடிக்கையாளர்களஇன் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மிக முக்கியமானதாக பார்க்கிறோம். லாக்டவுன் அமலில் இருப்பதால் பெரும்பாலான வாகனங்களுக்கு தற்போது பரிசோதனை செய்வது அவசியமாகிறது.

கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை முகாம்... ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு

இதனால், எந்த பிரச்னையும் இல்லாமல் கார்களை இயக்குவற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும். எங்களது சிறந்த பரிசோதனைகள் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பையும், பாதுக்காப்பையும் மேம்படுத்தும்," என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த கூடுதல் விபரங்களை அருகாமையிலுள்ள ஃபோக்ஸ்வேகன் கார் சர்வீஸ் மையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Volkswagen India has announced monsoon car care services for all its customers across the country.The Wolfsburg based manufacturer has already initiated the monsoon car care campaign in all Volkswagen authorised service centres across India. The campaign was initiated on June 01, 2021.
Story first published: Monday, June 7, 2021, 12:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X