Just In
- 8 hrs ago
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- 11 hrs ago
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
- 12 hrs ago
100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!
- 13 hrs ago
மாஸ்க் அணியவில்லை என்றால், என்ன இப்படி தூக்குறாங்க!! போலீஸாரிடம் சிக்கிய தம்பதியினர்...
Don't Miss!
- News
போலி செய்தி பரப்பினால்.. அது யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம்.. மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த ஆண்டு 4 புதிய எஸ்யூவி மாடல்களை களமிறக்குகிறது ஃபோக்ஸ்வேகன்!
இந்த ஆண்டு 4 புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த 4 புதிய எஸ்யூவி மாடல்களின் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய கார் சந்தையில் கார் வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இறங்கி இருக்கிறது. அதன்படி, இந்தியர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு ரகங்களில் 4 புதிய எஸ்யூவி மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் இந்த புதிய மாடல்களை இந்த ஆண்டு வரிசை கட்ட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், டைகுன், டிகுவான், டி ராக் மற்றும் டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஆகிய 4 மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

01. ஃபோக்ஸ்வேகன் டிகுவான்
புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் 5 சீட்டர் மாடல் இந்தியாவில் மீண்டும் வர இருக்கிறது. இது கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடலாக வர இருக்கிறது. இந்த மாடலானது இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், புதிய க்ரில் அமைப்பு, புதிய அலாய் வீல்கள், மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெறும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 190 எச்பி பவரை வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படும். ஹூண்டாய் டூஸான் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய மாடல்களுக்கு விலை மற்றும் சிறப்பம்சங்கள் அடிப்படையில் போட்டியாக இருக்கும்.

02. ஃபோக்ஸ்வேகன் டைகுன்
இந்தியர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கும் மாடல் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வங்கப்படும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

03. ஃபோக்ஸ்வேகன் டி ராக்
ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியும் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் மாடலாக இருக்கும். கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட டி ராக் யூனிட்டுகள் விற்று தீர்ந்தத நிலையில், இரண்டாவது லாட் ஒதுக்கீடு செய்யப்பட்டு வர இருக்கிறது. இந்த கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். அனைத்து வசதிகளும் அடங்கி டாப் வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும். ரூ.21.35 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

04. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் 7 சீட்டர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த எஸ்யூவியில் டிசைன் மற்றும் இன்டீரியரில் சில மாற்றங்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 190 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் எதிர்பார்க்கப்படுகிறது.

சரவெடிக்கு தயராகும் ஃபோக்ஸ்வேகன்
வரும் பண்டிகை காலத்திற்கு முன்பாக இந்த 4 எஸ்யூவிகளுடன் இந்திய சந்தையில் விற்பனை வளர்ச்சியை பதிவு செய்வதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இதில், டைகுன் எஸ்யூவி மாடலானது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதுடன், ஃபோக்ஸ்வேகன் விற்பனை வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.