ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ கார்களில் டர்போ என்ஜின்!! மேனுவல் தேர்வில் இந்தியாவில் அறிமுகம்!

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஃபோக்ஸ்வேகன் அதன் முக்கிய இந்திய கார் மாடல்களான போலோ மற்றும் வெண்டோவின் புதிய டர்போ எடிசன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ கார்களில் டர்போ என்ஜின்!! மேனுவல் தேர்வில் இந்தியாவில் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வெண்டோ கார்களின் இந்த ஸ்பெஷல் எடிசன் அவற்றின் கம்ஃபர்ட்லைன் வேரியண்ட்டில் கிடைக்கும். இவற்றில் இயக்க ஆற்றலை வழங்க 1.0 லிட்டர், 3-சிலிண்டர், டர்போசார்ஜ்டு ஸ்ட்ராடிஃபைடு இன்ஜெக்‌ஷன் (டிஎஸ்ஐ) என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ கார்களில் டர்போ என்ஜின்!! மேனுவல் தேர்வில் இந்தியாவில் அறிமுகம்!

இந்த இரு ஸ்பெஷல் எடிசன் காரிலும் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த டிஎஸ்ஐ என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 108 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறனை பெற முடியும். புதிய ஸ்பெஷல் எடிசன் போலோ & வெண்டோவின் அனைத்து நிறத்தேர்விலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ கார்களில் டர்போ என்ஜின்!! மேனுவல் தேர்வில் இந்தியாவில் அறிமுகம்!

போலோ டர்போ எடிசனின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.99 லட்சமாகவும், வெண்டோவின் விலை ரூ.8.69 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டர்போ கார்கள் என்பதை வெளிக்காட்டும் விதத்தில் இவற்றின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் கவனிக்கத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ கார்களில் டர்போ என்ஜின்!! மேனுவல் தேர்வில் இந்தியாவில் அறிமுகம்!

இதன்படி இந்த டர்போ கார்களின் ஸ்பாய்லர், பின்பக்கத்தை பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகள், ஃபெண்டர் முத்திரை மற்றும் ஸ்போர்டியான இருக்கை கவர்கள் உள்ளிட்டவை பளபளப்பான கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ கார்களில் டர்போ என்ஜின்!! மேனுவல் தேர்வில் இந்தியாவில் அறிமுகம்!

உட்புற கேபினில் பயண அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக காலநிலைக்கு ஏற்ப செயல்படும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் வசதி இரு காரிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்த மற்ற மெக்கானிக்கல் பாகங்களில் அப்கிரேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளது போல் தெரியவில்லை.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ கார்களில் டர்போ என்ஜின்!! மேனுவல் தேர்வில் இந்தியாவில் அறிமுகம்!

போலோ & வெண்டோ கார்களின் புதிய டர்போ எடிசன்களை வாடிக்கையாளர்கள் ஃபோக்ஸ்வேகனின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலோ அல்லது அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்திலோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ கார்களில் டர்போ என்ஜின்!! மேனுவல் தேர்வில் இந்தியாவில் அறிமுகம்!

பாதுகாப்பான ஜெர்மன் தயாரிப்புகளை வழங்குவதோடு, போலோ & வெண்டோ கார்களில் தொடர்ச்சியாக மேம்பாடுகளை கொண்டுவருவதை ஃபோக்ஸ்வேகன் நோக்கமாக கொண்டுள்ளதாக ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார்கள் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் அஷிஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

Most Read Articles

English summary
Volkswagen India launches the Turbo edition of the Polo & Vento
Story first published: Tuesday, February 16, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X