ஃபோக்ஸ்வேகன் போலோவில் புதிய டிஎஸ்ஐ வேரியண்ட்!! ரூ.7.41 லட்சத்தில் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் பயணிகள் இந்தியா நிறுவனம் போலோ காரில் புதிய கம்ஃபர்ட்லைன் டிஎஸ்ஐ வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய போலோ காரை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

ஃபோக்ஸ்வேகன் போலோவில் புதிய டிஎஸ்ஐ வேரியண்ட்!! ரூ.7.41 லட்சத்தில் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் போலோவில் கம்ஃபர்ட் லைன் வேரியண்ட்டின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.41 லட்சமாகவும், மெட்டாலிக் நிறத்தில் இந்த வேரியண்ட்டின் விலை ரூ.7.51 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோவில் புதிய டிஎஸ்ஐ வேரியண்ட்!! ரூ.7.41 லட்சத்தில் அறிமுகம்!

போலோவில் தற்போதும் கம்ஃபர்ட்லைன் உள்ளது. ஆனால் அதில் எம்பிஐ என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. புதியதாக கம்ஃபர்ட்லைனில் கொண்டுவரப்பட்டுள்ள 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் ஏற்கனவே போலோ ஹைலைன் ப்ளஸ் ட்ரிம்-மில் வழங்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோவில் புதிய டிஎஸ்ஐ வேரியண்ட்!! ரூ.7.41 லட்சத்தில் அறிமுகம்!

இந்த 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டிஎஸ்ஐ என்ஜின் அதிகப்பட்சமாக 109 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோவில் புதிய டிஎஸ்ஐ வேரியண்ட்!! ரூ.7.41 லட்சத்தில் அறிமுகம்!

ஆனால் ஹைலைன் ப்ளஸ் வேரியண்ட்டில் இந்த டிஎஸ்ஐ என்ஜின் கூடுதலாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு உடனும் கிடைக்கிறது. இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கம்ஃபர்ட்லைனில் கொடுக்கப்படவில்லை.

ஃபோக்ஸ்வேகன் போலோவில் புதிய டிஎஸ்ஐ வேரியண்ட்!! ரூ.7.41 லட்சத்தில் அறிமுகம்!

புதிய டிஎஸ்ஐ என்ஜினை தவிர்த்து வழக்கமான கம்ஃபர்ட்லைன் எம்பிஐ வேரியண்ட்டிற்கும், கம்ஃபர்ட்லைன் டிஎஸ்ஐ வேரியண்ட்டிற்கும் இடையே தோற்றத்தில் எந்த வித்தியாசமும் இல்லை.

ஃபோக்ஸ்வேகன் போலோவில் புதிய டிஎஸ்ஐ வேரியண்ட்!! ரூ.7.41 லட்சத்தில் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் போலோவின் டாப் ஹைலைன் ப்ளஸ் வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில் கம்ஃபர்ட்லைன் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் குறைவாகும். இந்த புதிய வேரியண்ட்டின் அறிமுகத்திற்கு முன்னதாக சமீபத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் போலோவின் விலைகளையும் திருத்தியமைத்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோவில் புதிய டிஎஸ்ஐ வேரியண்ட்!! ரூ.7.41 லட்சத்தில் அறிமுகம்!

திருத்தப்பட்டுள்ளது என்பதை சொல்வதை காட்டிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். போலோவின் எக்ஸ்ஷோரூம் விலைகள் வேரியண்ட்களை பொறுத்து உயர்த்தப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோவில் புதிய டிஎஸ்ஐ வேரியண்ட்!! ரூ.7.41 லட்சத்தில் அறிமுகம்!

அதாவது விலை குறைவான ட்ரெண்ட்லைன் எம்பிஐ மற்றும் கம்ஃபர்ட்லைன் எம்பிஐ வேரியண்ட்களின் விலைகள் தலா ரூ.15,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு அடுத்த ஹைலைன் ப்ளஸ்-இன் விலை ரூ.14,800 உயர்த்தப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோவில் புதிய டிஎஸ்ஐ வேரியண்ட்!! ரூ.7.41 லட்சத்தில் அறிமுகம்!

டாப் ஜிடி லைனின் விலை ரூ.7,200 அதிகரிக்கப்பட்டுள்ளது. போலோவின் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் எம்பிஐ என்ஜின் அதிகப்பட்சமாக 6200 ஆர்பிஎம்-இல் 73 பிஎச்பி மற்றும் 3800 ஆர்பிஎம்-இல் 95 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Most Read Articles

English summary
Volkswagen Polo Comfortline TSI variant launched at Rs 7.41 lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X