2021 ஃபோக்ஸ்வேகேன் போலோ கார் உலக அளவில் அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முக்கிய அம்சங்கள் மற்றும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

2021 ஃபோக்ஸ்வேகேன் போலோ கார் உலக அளவில் அறிமுகம்!

உலகின் பல்வேறு நாடுகளில் சிறந்த ஹேட்ச்பேக் கார் மாடல் என்ற நன்மதிப்பை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் பெற்றிருக்கிறது. வடிவமைப்பு, வசதிகள், எஞ்சின், விலை என அனைத்திலும் சிறப்பானதாக இருந்து வருகிறது. இந்தியாவிலும் போலோ காருக்கு தனி வரவேற்பு இருந்து வருகிறது.

2021 ஃபோக்ஸ்வேகேன் போலோ கார் உலக அளவில் அறிமுகம்!

இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ஆறாவது தலைமுறை மாடல் விற்பனையில் உள்ளது. இந்த மாடலானது வடிவமைப்பு மற்றும் வசதிகளில் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது, இடைக்கால மாறுதல்கள் கொண்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலாக அங்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

2021 ஃபோக்ஸ்வேகேன் போலோ கார் உலக அளவில் அறிமுகம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் ஹெட்லைட்டுகளுக்கு இடையில் எல்இடி விளக்கு பட்டை சேர்க்கப்பட்டுள்ளது. புதிய பம்பர் அமைப்பு மற்றும் பின்புற கதவு டிசைனில் மாற்றம் தெரிகிறது. மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகளும் இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது. பம்பரில் செய்யப்பட்டுள்ள மாற்றம் காரணமாக, ஃபேஸ்லிஃப்ட் மாடல் சற்றே கூடுதல் நீளத்தை பெற்றிருக்கிறது.

2021 ஃபோக்ஸ்வேகேன் போலோ கார் உலக அளவில் அறிமுகம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்ப வசதியும் இடம்பெற்றிருக்கிறது. 9.2 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்ஷனலாக பெற முடியும்.

2021 ஃபோக்ஸ்வேகேன் போலோ கார் உலக அளவில் அறிமுகம்!

இந்த காரில் 8 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புதிய ஸ்டீயரிங் வீல், கோல்ஃப் காரில் வழங்கப்படும் க்ளைமேட் கன்ட்ரோல் டிஸ்ப்ளே இதிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.

2021 ஃபோக்ஸ்வேகேன் போலோ கார் உலக அளவில் அறிமுகம்!

இந்த காரில் லெவல்-2 நிலை கொண்ட தானியங்கி டிரைவிங் கட்டுப்பாட்டு வசதியும் இடம்பெற்றிருக்கிறது. டிராவல் அசிஸ்ட் என்ற பெயரில் இது குறிப்பிடப்படுகிறது. பஸாத் காரில் இந்த லெவல் 2 தானியங்கி டிரைவிங் தொழில்நுட்பம் முதலில் வழங்கப்பட்டது. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப்பிங் அசிஸ்ட் ஆகியவை இணைந்து லெவல்-2 தொழில்நுட்ப வசதியை வழங்கும்.

2021 ஃபோக்ஸ்வேகேன் போலோ கார் உலக அளவில் அறிமுகம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 80 எச்பி முதல் 110 எச்பி வரையிலான பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

2021 ஃபோக்ஸ்வேகேன் போலோ கார் உலக அளவில் அறிமுகம்!

தற்போது இந்தியாவில் ஐந்தாவது தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனையில் உள்ளது. இந்த கார் அவ்வப்போது சில கூடுதல் அம்சங்களுடன் தொடர்ந்து விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. எனினும், வெளிநாடுகளில் ஆறாவது தலைமுறை மாடல் விற்பனையில் உள்ளது. தற்போது இந்த மாடல்தான் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2021 ஃபோக்ஸ்வேகேன் போலோ கார் உலக அளவில் அறிமுகம்!

போலோ ஆறாம் தலைமுறை ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவுக்கு வருவது சந்தேகமாக உள்ளது. தற்போது எஸ்யூவி கார்களை களமிறக்குவதில் ஃபோக்ஸ்வேகன் கவனம் செலுத்தி வருவதால், ஏழாம் தலைமுறை போலோ கார்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Volkswagen has revealed sixth generation Polo facelift model for international market.
Story first published: Friday, April 23, 2021, 10:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X