இத்தனை அம்சங்கள் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் காரிலா!! இந்த வீடியோவை பாருங்க...

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்பான டிவிசி வீடியோ ஒன்று புதியதாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இத்தனை அம்சங்கள் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் காரிலா!! இந்த வீடியோவை பாருங்க...

2021 போலோ காரை ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சமீபத்தில் சர்வதேச சந்தைகளில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்சமயம் ஐந்தாம் தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனையில் உள்ளது.

இத்தனை அம்சங்கள் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் காரிலா!! இந்த வீடியோவை பாருங்க...

போலோ ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவிற்கு கொண்டுவரப்படாது என்றே தெரிகிறது. ஏனெனில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நேரடியாக 7ஆம் தலைமுறை போலோவை இன்னும் சில வருடங்களில் கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது புதியதாக வெளியிடப்பட்டுள்ள போலோ ஃபேஸ்லிஃப்ட் காரின் டிவிசி வீடியோவை தான் மேலே பார்க்கிறீர்கள். ஆறாம் தலைமுறை போலோ ஃபேஸ்லிஃப்ட் கார் போலோ, லைஃப், ஸ்டைல் மற்றும் ஆர்-லைன் என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இத்தனை அம்சங்கள் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் காரிலா!! இந்த வீடியோவை பாருங்க...

இவை வழக்கமான நிறங்களுடன் அஸ்காட் க்ரே, கிங்ஸ் சிவப்பு, வைப்ரண்ட் வொய்லட் மற்றும் ரவுச்ச்ராவ் என்ற நான்கு புதிய நிறங்களிலும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பக்கத்தில் எல்இடி ஸ்ட்ரிப் உடன் எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்தனை அம்சங்கள் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் காரிலா!! இந்த வீடியோவை பாருங்க...

இவற்றுடன் திருத்தியமைக்கப்பட்ட பம்பர், பூட்லிட் மற்றும் 16 இன்ச் சக்கரங்களையும் இதன் வெளிப்பக்கத்தில் பார்க்கலாம். பின்பக்கத்தில் கதவின் வடிவம் சற்று மாற்றப்பட்டுள்ளது. காரின் வீல்பேஸின் அளவு மாற்றப்படவில்லை.

இத்தனை அம்சங்கள் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் காரிலா!! இந்த வீடியோவை பாருங்க...

ஆனால் புதிய பம்பர்களினால் காரின் நீளம் சற்று அதிகரித்துள்ளது. உட்புறத்தில் போலோ ஃபேஸ்லிஃப்ட் கார் புதிய 8 இன்ச் டிஜிட்டல் காக்பிட்டை பெற்றுள்ளது. இதனுடன் இந்த காரின் விலைமிக்க வேரியண்ட்களில் வாடிக்கையாளர்கள் பெரிய 10.25 இன்ச் திரையையும் பெற முடியும்.

இத்தனை அம்சங்கள் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் காரிலா!! இந்த வீடியோவை பாருங்க...

இவற்றுடன் இதன் கேபின் பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், தொடு அடிப்படையிலான க்ளைமேட் கண்ட்ரோல், வயர் இல்லா சார்ஜிங், சாவியில்லா நுழைவு, பயணிகளின் பாதுகாப்பிற்கு அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஒரே பாதையில் காரை இயங்க வைக்கும் வசதி, வாகனத்தை ஸ்டார்ட் செய்வதற்கு பொத்தான் மற்றும் செண்ட்ரல் ஏர் பேக் உள்ளிட்டவற்றையும் கொண்டுள்ளது.

இத்தனை அம்சங்கள் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் காரிலா!! இந்த வீடியோவை பாருங்க...

முந்தைய போலோ காரில் இருந்து அப்படியே என்ஜின் தேர்வுகள் போலோ ஃபேஸ்லிஃப்ட் காரிலும் தொடரப்பட்டுள்ளன. இந்த வகையில் 80 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர், 3-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 95 எச்பி & 100 எச்பி என இரு விதமான தேர்வுகளில் கிடைக்கும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின்களை போலோ ஃபேஸ்லிஃப்ட் காரும் பெற்றுள்ளது.

Most Read Articles

English summary
New Volkswagen Polo Facelift Detailed In Official TVC Video.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X