எக்கசக்க அம்சங்கள், புதுப்பித்தல்கள் உடன் 2021 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் வெளியீடு! முழு விபரம்!

பல்வேறு புதுப்பித்தல்களுடன் 2021 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

எக்கசக்க அம்சங்கள், புதுப்பித்தல்கள் உடன் 2021 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் வெளியீடு! முழு விபரம்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், அதன் 2021 போலோ ஜிடிஐ காரை வெளியீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் ஆறாம் தலைமுறை போலோவின் புதுப்பிக்கபட்ட மாடலை வெளியீடு செய்திருந்தது.

எக்கசக்க அம்சங்கள், புதுப்பித்தல்கள் உடன் 2021 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் வெளியீடு! முழு விபரம்!

இந்த நிலையில் தற்போது புதிய தொழில்நுட்பங்களுடன், எட்டாம் தலைமுறை கோல்ஃபை லேசாக தழுவியும் புதிய போலோ ஜிடிஐ காரை நிறுவனம் தற்போது அப்டேட் செய்திருக்கின்றது. ஆகாயைல், எக்கசக்க சிறப்பு வசதிகளுடன் தற்போது வெளியீடு பெற்றிருக்கும் போலோ ஜிடிஐ காட்சியளிக்கின்றது.

எக்கசக்க அம்சங்கள், புதுப்பித்தல்கள் உடன் 2021 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் வெளியீடு! முழு விபரம்!

வெளிப்புற தோற்றம்:

போலோ ஜிடிஐ காரின் வெளிப்புற தோற்றத்தை கவர்ச்சியானதாக மாற்ற வேண்டும் என்பதற்காக அதன் தோற்றத்தில் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, முகப்பு மின் விளக்கு, சிவப்பு நிற அலங்காரத்துடன் கூடிய தேன்கூடு வடிவிலான கிரில், 17 இன்ச் இரு நிற அலாய் வீல்கள், எதிர்வினை நிறத்தில் மேற்கூரை என பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

எக்கசக்க அம்சங்கள், புதுப்பித்தல்கள் உடன் 2021 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் வெளியீடு! முழு விபரம்!

தொடர்ந்து, சற்று அகலமான டெயில்கேட்டுகல் புதுப்பித்தலின் அடிப்படையில் போலோ ஜிடிஐ காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

எக்கசக்க அம்சங்கள், புதுப்பித்தல்கள் உடன் 2021 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் வெளியீடு! முழு விபரம்!

போலோ ஜிடிஐ காரின் உட்பகுதி

வெளிப்புற தோற்றத்தை போலவே உட்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த மாற்றத்தால் டிஜிட்டல் காக்பிட்டாக அது மாறியிருக்கின்றது. 9.2 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பீட்ஸ் சவுண்ட் சிஸ்டம், குரல் கட்டளை வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை புதிய போலோ ஜிடிஐ காரில் இடம் பெற்றிருக்கின்றன.

எக்கசக்க அம்சங்கள், புதுப்பித்தல்கள் உடன் 2021 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் வெளியீடு! முழு விபரம்!

எஞ்ஜின்

முன்பக்க வீல் இயக்கம் கொண்ட ஜிடிஐ காரில் 204 எச்பி திறனை வெளியேற்றக் கூடிய டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2.0 லிட்டர் மோட்டாராகும். 7 ஸ்பீடு ட்யூவல் கிளட்ச் கியர்பாக்ஸுடன் இணைந்து இயங்கும். 320 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.

எக்கசக்க அம்சங்கள், புதுப்பித்தல்கள் உடன் 2021 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் வெளியீடு! முழு விபரம்!

இக்காரில் ஈகோ, வழக்கமானது மற்றும் ஸ்போர்ட் எனும் மூன்று விதமான ரைடிங் மோட்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், பெஸ்போக் செயல்திறன் சார்ந்த ஓர் சேஸிஸை பெற்றிருக்கின்றது. ஆகையால், வழக்கமான போலோவைக் காட்டிலும் இது 15மிமீ அதிக நீளத்தில் இருக்கின்றது.

எக்கசக்க அம்சங்கள், புதுப்பித்தல்கள் உடன் 2021 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் வெளியீடு! முழு விபரம்!

இந்தியாவில் விற்கப்பட்ட முந்தைய தலைமுறை போலோ ஜிடிஐ முழுக்க முழுக்க குறைந்த எண்ணிக்கையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைச் செய்யப்பட்டவை ஆகும். இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இரு புதிய எஸ்யூவி கார்களை தயார் படுத்தியிருக்கின்றது. டிகுவான், டைகுன் ஆகிய கார்களை மிக விரைவில் நிறுவனம் களமிறக்க இருக்கிறது.

Most Read Articles

English summary
Volkswagen Revealed Facelifted 2021 Polo GTI. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X