டைகுனின் புதிய டீசர் வீடியோவை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!! அறிமுகம் விரைவில்

விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள டைகுன் எஸ்யூவி காரின் புதிய டீசர் வீடியோவை ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் மூலம் இந்த நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

டைகுனின் புதிய டீசர் வீடியோவை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!! அறிமுகம் விரைவில்

இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் வெளிவரும் டைகுன் இந்திய சந்தையில் ஜெர்மன் ஆட்டோமொபைல் பிராண்டான ஃபோக்ஸ்வேகனின் முக்கியமான மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டைகுனின் புதிய டீசர் வீடியோவை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!! அறிமுகம் விரைவில்

மிக சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ஸ்கோடா குஷாக்கின் அதே எம்க்யுபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தான் இந்த எஸ்யூவி காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ப்ளாட்ஃபாரம் உலகளவில் வரவேற்பை பெற்றுவரும் எம்க்யூபி ப்ளாட்ஃபாரத்தின் மலிவான வெர்சனாகும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவில், இரட்டை-ஸ்லாட் க்ரோம் கார்னிஷ்டு ரேடியேட்டர் க்ரில், இரட்டை-லென்ஸ் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், செங்குத்தான எல்இடி டிஆர்எல்கள் மற்றும் பளிச்சிடும் பெயிண்ட்டில் சறுக்கு தட்டு உள்ளிட்டவற்றை கொண்ட டைகுனின் முன்பக்கத்தை பார்க்க முடிகிறது.

டைகுனின் புதிய டீசர் வீடியோவை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!! அறிமுகம் விரைவில்

ஒரே ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்படுவதால் குஷாக் உடன் பெரும்பான்மையான பாகங்களை டைகுன் பகிர்ந்து கொள்ளவுள்ளது. இதன்படி, 17 இன்ச்சில் டைமண்ட்-கட், இரட்டை-நிற அலாய் சக்கரங்களை டைகுனில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

டைகுனின் புதிய டீசர் வீடியோவை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!! அறிமுகம் விரைவில்

அதேபோல் எல்இடி டெயில்லைட்கள், சுறா துடுப்பு வடிவில் ஆண்டெனா, பின் பம்பரில் க்ரோம் ஸ்ட்ரிப்-ஐயும் எதிர்பார்க்கிறோம். இந்த டீசர் வீடியோ காரின் வெளிப்புறத்தை தான் முக்கியமானதாக காட்டுகிறது. ஆனால் அதேநேரம் கேபினையும் சிறிது பார்க்க முடிகிறது.

டைகுனின் புதிய டீசர் வீடியோவை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!! அறிமுகம் விரைவில்

உட்புறத்தில் டைகுன் மைய கன்சோலில் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பொத்தான், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உடன் 10-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் சன்ரூஃப், வயர் இல்லா சார்ஜிங் தொழிற்நுட்பத்தை பெற்று வரவுள்ளது.

டைகுனின் புதிய டீசர் வீடியோவை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!! அறிமுகம் விரைவில்

பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆறு காற்றுப்பைகள், இபிடி உடன் ஏபிஎஸ், இஎஸ்சி டைகுனில் வழங்கப்பட உள்ளது. இவற்றுடன் குஷாக்கின் அதே 1.5 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின்களுடன் தான் டைகுன் விற்பனைக்கு வரவுள்ளது. இதனால் ஃபோக்ஸ்வேகன் டைகுனும் பெட்ரோல் காராகவே வெளிவரவுள்ளது.

டைகுனின் புதிய டீசர் வீடியோவை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!! அறிமுகம் விரைவில்

இந்த பெட்ரோல் என்ஜின்கள் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளும் இந்த ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி காரில் வேறுப்படாது என்றே கூறப்படுகிறது. டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக ஃபோக்ஸ்வேகன் டைகுனில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளன.

Most Read Articles
English summary
Volkswagen India teases Taigun SUV in a production-ready guise. Launch imminent.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X