ஃபோக்ஸ்வேகனின் அடுத்த ஐடி எலக்ட்ரிக் கார் அறிமுகத்திற்கு தயார்!! ஜிடிஎக்ஸ் வெர்சனில் வருகிறது...

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் எதிர்கால எலக்ட்ரிக் வாகனங்களை ஒவ்வொன்றாக வெளிக்காட்டி வருகிறது. இந்த வகையில் ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 ஜிடிஎக்ஸ் வாகனத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகனின் அடுத்த ஐடி எலக்ட்ரிக் கார் அறிமுகத்திற்கு தயார்!! ஜிடிஎக்ஸ் வெர்சனில் வருகிறது...

சில தினங்களுக்கு முன்பு ஐடி.6 எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் டீசர் படங்களை அதன் சீன அறிமுகத்திற்கு முன்னதாக ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டு இருந்தது.

ஃபோக்ஸ்வேகனின் அடுத்த ஐடி எலக்ட்ரிக் கார் அறிமுகத்திற்கு தயார்!! ஜிடிஎக்ஸ் வெர்சனில் வருகிறது...

ஐடி.4 ஜிடிஎக்ஸ் காரின் தற்போதைய டீசர் குறித்த ஃபோக்ஸ்வேகனின் டுவிட்டர் பதிவில் "அடுத்த ஐடி காருக்கு தயாரா?" என்ற வாக்கியத்துடன் குறும் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகனின் அடுத்த ஐடி எலக்ட்ரிக் கார் அறிமுகத்திற்கு தயார்!! ஜிடிஎக்ஸ் வெர்சனில் வருகிறது...

இருப்பினும் இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய விபரங்கள் தற்போதுவரையில் வெளியிடப்படவில்லை. முன்னதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஐடி.4 ஜிடிஎக்ஸ் கார் இந்த 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்படும் என கடந்த மார்ச் மாதத்தில் தெரிவித்து இருந்தது.

ஃபோக்ஸ்வேகனின் அடுத்த ஐடி எலக்ட்ரிக் கார் அறிமுகத்திற்கு தயார்!! ஜிடிஎக்ஸ் வெர்சனில் வருகிறது...

இரட்டை-மோட்டார் உடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 ஜிடிஎக்ஸ் எலக்ட்ரிக் கார் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.2 வினாடிகளில் எட்டிவிடும் வகையில் எலக்ட்ரிக் மோட்டாரை பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகனின் அடுத்த ஐடி எலக்ட்ரிக் கார் அறிமுகத்திற்கு தயார்!! ஜிடிஎக்ஸ் வெர்சனில் வருகிறது...

ஐடி.4 இதே வேகத்தை எட்ட 8.5 வினாடிகளை எடுத்து கொள்வது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஐடி.4 ஜிடிஎக்ஸ் காரில் அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டத்தையும் எதிர்பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகனின் அடுத்த ஐடி எலக்ட்ரிக் கார் அறிமுகத்திற்கு தயார்!! ஜிடிஎக்ஸ் வெர்சனில் வருகிறது...

இந்த எலக்ட்ரிக் காரில் பொருத்தப்படவுள்ள இரு எலக்ட்ரிக் மோட்டார்கள், அதிகப்பட்சமாக 300- 310 பிஎஸ் மற்றும் 460 என்எம் டார்க் திறனை ஒன்றாக சேர்ந்து வெளிப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு பொருத்தப்படலாம்.

ஃபோக்ஸ்வேகனின் அடுத்த ஐடி எலக்ட்ரிக் கார் அறிமுகத்திற்கு தயார்!! ஜிடிஎக்ஸ் வெர்சனில் வருகிறது...

2025க்குள் 20 புதிய முழு எலக்ட்ரிக் வாகனங்களை உலகளவில் அறிமுகப்படுத்த ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 11 பில்லியனுக்கும் அதிகமான யூரோக்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகனின் அடுத்த ஐடி எலக்ட்ரிக் கார் அறிமுகத்திற்கு தயார்!! ஜிடிஎக்ஸ் வெர்சனில் வருகிறது...

பசுமை போக்குவரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஃபோக்ஸ்வேகன் கடந்த 2020ஆம் ஆண்டில் நிர்ணயித்ததை விட சற்று அதிகமாக தனது கார்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை ஐரோப்பிய கண்டத்தில் வெளியிட்டுள்ளதாக இந்த ஆண்டு துவக்கத்தில் தெரிவித்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.

ஃபோக்ஸ்வேகனின் அடுத்த ஐடி எலக்ட்ரிக் கார் அறிமுகத்திற்கு தயார்!! ஜிடிஎக்ஸ் வெர்சனில் வருகிறது...

2020ல் மொத்தம் 212,000 எலக்ட்ரிக் வாகனங்களை இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்துள்ளது. இதில் 134,000 யூனிட்கள் முழு-எலக்ட்ரிக் வாகனங்களாகும். கூபே தோற்றத்தை கொண்ட ஐடி.5 எலக்ட்ரிக் காரை வடிவமைக்கும் பணியிலும் ஃபோக்ஸ்வேகன் ஈடுப்பட்டு வருகிறது.

Most Read Articles

English summary
Volkswagen teases upcoming performance-focused ID.4 GTX electric car.
Story first published: Thursday, April 15, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X