சூப்பர்ல... இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த காரை இனி லீசுக்கு எடுக்கலாம்... மாத வாடகை எவ்ளோனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்ல... புத்தம் புதிய Volkswagen Taigun காரை இனி லீசுக்கு எடுக்கலாம்... மாத வாடகை எவ்ளோனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், மாத சந்தா திட்டத்தை, டைகுன் (Volkswagen Taigun) காருக்கும் விரிவுபடுத்துவதாக இன்று (அக்டோபர் 12) அறிவித்தது. எனவே இனி ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரையும், வாடிக்கையாளர்கள் மாத சந்தா திட்டத்தில் பெற்று பயன்படுத்த முடியும். இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சூப்பர்ல... புத்தம் புதிய Volkswagen Taigun காரை இனி லீசுக்கு எடுக்கலாம்... மாத வாடகை எவ்ளோனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் உள்ள தனது அனைத்து தயாரிப்புகளையும் மாத சந்தா திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த வரிசையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரும் தற்போது மாத சந்தா திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

சூப்பர்ல... புத்தம் புதிய Volkswagen Taigun காரை இனி லீசுக்கு எடுக்கலாம்... மாத வாடகை எவ்ளோனு தெரியுமா?

முன்னதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது பிரபலமான மாடல்களான போலோ, வெண்டோ மற்றும் டி-ராக் ஆகிய கார்களுக்கும் மாத சந்தா திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. மாத சந்தா திட்டத்தில் கிடைக்கும் ஃபோக்ஸ்வேகன் கார்களின் பட்டியலில் தற்போது டைகுன் காரும் இணைக்கப்பட்டுள்ளது.

சூப்பர்ல... புத்தம் புதிய Volkswagen Taigun காரை இனி லீசுக்கு எடுக்கலாம்... மாத வாடகை எவ்ளோனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் டைனமிக் லைன் மற்றும் ஜிடி ப்ளஸ் வேரியண்ட்கள், மாத சந்தா திட்டத்தின் கீழ் கிடைக்கும். இதற்கான மாத சந்தா 28 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. 24, 36 மற்றும் 48 மாதங்கள் என்ற கால அளவில், ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரை வாடிக்கையாளர்கள் மாத சந்தா திட்டத்தின் கீழ் பெற்று கொள்ளலாம்.

சூப்பர்ல... புத்தம் புதிய Volkswagen Taigun காரை இனி லீசுக்கு எடுக்கலாம்... மாத வாடகை எவ்ளோனு தெரியுமா?

வாடிக்கையாளர்கள் தங்களது தேவைகளை பொறுத்து தேர்வு செய்து கொள்வதற்காக பல்வேறு கால அளவுகள் வழங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் செலுத்தும் மாத சந்தாவில், குறிப்பிட்ட இடைவெளிகளில் செய்யப்படும் பராமரிப்பு மற்றும் காப்பீடு போன்ற விஷயங்கள் அடங்கி விடும். உங்கள் குத்ததை காலம் முடிவடைந்த பிறகு நீங்கள் காரை ஒப்படைத்து விடலாம்.

சூப்பர்ல... புத்தம் புதிய Volkswagen Taigun காரை இனி லீசுக்கு எடுக்கலாம்... மாத வாடகை எவ்ளோனு தெரியுமா?

அல்லது அப்கிரேட் செய்து கொள்ளலாம். இதுவும் உங்கள் தேவையை பொறுத்து முடிவு செய்து கொள்ள முடியும். மாத சந்தா திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் பெறும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில், வெள்ளை நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருக்கும். டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம், மும்பை, புனே, அகமதாபாத், பெங்களூர், சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

சூப்பர்ல... புத்தம் புதிய Volkswagen Taigun காரை இனி லீசுக்கு எடுக்கலாம்... மாத வாடகை எவ்ளோனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் உள்ளிட்ட கார்களுடன் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போட்டியிட்டு வருகிறது. இது மிகவும் சவால் நிறைந்த செக்மெண்ட் ஆகும்.

சூப்பர்ல... புத்தம் புதிய Volkswagen Taigun காரை இனி லீசுக்கு எடுக்கலாம்... மாத வாடகை எவ்ளோனு தெரியுமா?

பல்வேறு நிறுவனங்கள் இந்த செக்மெண்ட்டில் தொடர்ச்சியாக புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. ஸ்கோடா குஷாக் கூட இந்த செக்மெண்ட்டிற்கு புதிய கார்தான். இந்த செக்மெண்ட்டில் தற்போது புதிதாக காலடி எடுத்து வைத்துள்ள கார் எம்ஜி அஸ்டர். இந்த காருடனும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போட்டியிடும்.

சூப்பர்ல... புத்தம் புதிய Volkswagen Taigun காரை இனி லீசுக்கு எடுக்கலாம்... மாத வாடகை எவ்ளோனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரை போலவே எம்ஜி அஸ்டர் காரும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எம்ஜி அஸ்டர் காரில், ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் நிரம்பியுள்ளன. இதுதான் எம்ஜி அஸ்டர் காரின் முக்கியமான ஹைலைட். போட்டி அதிகரித்து கொண்டே வரும் நிலையில், வாடிக்கையாளர்களை கவர மாத சந்தா திட்டத்தை ஃபோக்ஸ்வேகன் கையில் எடுத்துள்ளது.

சூப்பர்ல... புத்தம் புதிய Volkswagen Taigun காரை இனி லீசுக்கு எடுக்கலாம்... மாத வாடகை எவ்ளோனு தெரியுமா?

கார்களை சொந்தமாக வாங்குவதற்கு பதிலாக மாத சந்தா திட்டத்தின் கீழ் வாங்கும் டிரெண்ட் தற்போது இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் மாத சந்தா திட்டத்தின் கீழ் தங்களது தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலம் மட்டும் காரை பயன்படுத்தி விட்டு மீண்டும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமே ஒப்படைத்து விடலாம்.

சூப்பர்ல... புத்தம் புதிய Volkswagen Taigun காரை இனி லீசுக்கு எடுக்கலாம்... மாத வாடகை எவ்ளோனு தெரியுமா?

அல்லது குத்ததை காலத்தை நீட்டித்து கொள்ளலாம். மேலும் அதே நிறுவனத்தின் வேறு ஏதேனும் ஒரு காரை வாங்கி கொள்ளவும் முடியும். அடிக்கடி காரை மாற்றுபவர்களுக்கு இந்த திட்டம் உகந்ததாக இருக்கும். ஆனால் காரில் மாடிஃபிகேஷன்கள் எதையும் செய்ய முடியாது என்பது போன்ற குறைகளும் இந்த திட்டத்தில் இருக்கவே செய்கின்றன.

Most Read Articles

English summary
Volkswagen taigun creta rival now available for subscription here are all the details
Story first published: Tuesday, October 12, 2021, 19:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X