நாளை மறுதினம் பொது பார்வைக்கு வருகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன்... செய்தியை கேட்டு லைட்டா ஜெர்க்கான க்ரெட்டா

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு போட்டியாக வர இருக்கும் புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி பொது பார்வைக்கு கொண்டு வரப்படுவது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

நாளை மறுதினம் பொது பார்வைக்கு வருகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன்... செய்தியை கேட்டு லைட்டா ஜெர்க்கான க்ரெட்டா!

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் ஆகிய கார்கள் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. ரெனோ டஸ்ட்டர், மாருதி எஸ் க்ராஸ் போன்ற கார்களுக்கு சுமாரான வரவேற்பு மட்டுமே இருந்து வருகிறது.

நாளை மறுதினம் பொது பார்வைக்கு வருகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன்... செய்தியை கேட்டு லைட்டா ஜெர்க்கான க்ரெட்டா!

இந்த நிலையில், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு சரியான போட்டியை தரும் அம்சங்களுடன் புதிய எஸ்யூவி மாடலை ஃபோக்ஸ்வேகன் களமிறக்க உள்ளது. டைகுன் என்ற பெயரில் கான்செப்ட் மாடலாக பார்வைக்கு கொண்டு வரப்பட்ட இந்த மாடல் தற்போது தயாரிப்பு நிலைக்கு ஏற்ற அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் பொது பார்வைக்கு வருகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன்... செய்தியை கேட்டு லைட்டா ஜெர்க்கான க்ரெட்டா!

இந்த நிலையில், புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் தயாரிப்பு நிலை மாடலானது வரும் 24ந் தேதி இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. அன்றைய தினம் கோவாவில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிக்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அழைப்பு ஒன்றை அனுப்பி இருக்கிறது. இந்த அழைப்பு டைகுன் எஸ்யூவி பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் நிகழ்வாகவே ஆட்டோமொபைல் துறையினரால் கருதப்படுகிறது.

நாளை மறுதினம் பொது பார்வைக்கு வருகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன்... செய்தியை கேட்டு லைட்டா ஜெர்க்கான க்ரெட்டா!

அண்மையில் இந்தியாவில் வெளியிடப்பட்ட புதிய ஸ்கோடா குஷாக் கார் உருவாக்கப்பட்ட அதே கட்டமைப்புக் கொள்கையில்தான் புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி ஏ0 ஐஎன் கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் பொது பார்வைக்கு வருகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன்... செய்தியை கேட்டு லைட்டா ஜெர்க்கான க்ரெட்டா!

ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட உள்ள அதே பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள்தான் புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியிலும் இடம்பெறும். டைகுன் எஸ்யூவியில் 113 பிச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் வரும்.

நாளை மறுதினம் பொது பார்வைக்கு வருகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன்... செய்தியை கேட்டு லைட்டா ஜெர்க்கான க்ரெட்டா!

அதேபோன்று, 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் கொடுக்கப்படும். இந்த எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கொண்டு வரப்படும்.

நாளை மறுதினம் பொது பார்வைக்கு வருகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன்... செய்தியை கேட்டு லைட்டா ஜெர்க்கான க்ரெட்டா!

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. நாளை மறுதினம் கோவாவில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி பற்றிய விபரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Volkswagen is expected to unveil of its Taigun compact SUV in India on March 24, 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X