ஃபோக்ஸ்வேகன் டைகுன் பற்றி வெளியான புதிய தகவலால் உற்சாகம்! ரேட்டை கரெக்டா ஃபிக்ஸ் பண்ணீட்டா சேல்ஸ் பிச்சுக்கும்

ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் பற்றி தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் பற்றி வெளியான புதிய தகவலால் உற்சாகம்! ரேட்டை கரெக்டா ஃபிக்ஸ் பண்ணீட்டா சேல்ஸ் பிச்சுக்கும்

இந்திய சந்தையில் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட் மிக வேகமாக பிரபலமடைந்து வருகிறது. மிக கடுமையான போட்டி நிறைந்த இந்த செக்மெண்ட்டில் ஸ்கோடா குஷாக் சமீபத்தில் நுழைந்தது. இந்த வரிசையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் இந்த செக்மெண்ட்டில் புதிய எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி விட்டது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் பற்றி வெளியான புதிய தகவலால் உற்சாகம்! ரேட்டை கரெக்டா ஃபிக்ஸ் பண்ணீட்டா சேல்ஸ் பிச்சுக்கும்

டைகுன் எஸ்யூவியை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். டைகுன் எஸ்யூவி கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பதை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. இதன்படி செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் பற்றி வெளியான புதிய தகவலால் உற்சாகம்! ரேட்டை கரெக்டா ஃபிக்ஸ் பண்ணீட்டா சேல்ஸ் பிச்சுக்கும்

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்காக காத்திருப்பவர்கள் மத்தியில் இந்த தகவல் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் பற்றி வெளியான புதிய தகவலால் உற்சாகம்! ரேட்டை கரெக்டா ஃபிக்ஸ் பண்ணீட்டா சேல்ஸ் பிச்சுக்கும்

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரை நாங்கள் சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது இந்த கார் எங்களை பல்வேறு அம்சங்களில் வெகுவாக கவர்ந்தது. இதேபோல் இந்திய வாடிக்கையாளர்களையும் இந்த கார் கவரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் அதற்கு விலை நிர்ணயம் மிகவும் சரியாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் பற்றி வெளியான புதிய தகவலால் உற்சாகம்! ரேட்டை கரெக்டா ஃபிக்ஸ் பண்ணீட்டா சேல்ஸ் பிச்சுக்கும்

டைகுன் எஸ்யூவி காருக்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்று கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பம் இருக்கும்பட்சத்தில், உடனடியாக ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். செப்டம்பர் மூன்றாவது வாரம் என்பது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, டைகுன் விற்பனைக்கு வரும் தேதியை ஃபோக்ஸ்வேகன் இன்னும் கூறவில்லை.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் பற்றி வெளியான புதிய தகவலால் உற்சாகம்! ரேட்டை கரெக்டா ஃபிக்ஸ் பண்ணீட்டா சேல்ஸ் பிச்சுக்கும்

சமூக வலை தளத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் டைகுன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை மட்டுமே ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் பற்றி வெளியான புதிய தகவலால் உற்சாகம்! ரேட்டை கரெக்டா ஃபிக்ஸ் பண்ணீட்டா சேல்ஸ் பிச்சுக்கும்

ஆனால் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் அச்சுறுத்தல் தற்போது இந்தியாவில் இருந்து கொண்டுள்ளது. மூன்றாவது அலையில் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு அரசுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி விட்டன. ஒருவேளை செப்டம்பர் மாதம் மூன்றாவது அலையின் தாக்கம் ஏற்பட்டால், ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளி போகுமா? என்பது தெரியவில்லை.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் பற்றி வெளியான புதிய தகவலால் உற்சாகம்! ரேட்டை கரெக்டா ஃபிக்ஸ் பண்ணீட்டா சேல்ஸ் பிச்சுக்கும்

ஆனால் கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கார்களின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சாலையில் பயணம் செய்யும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் பற்றி வெளியான புதிய தகவலால் உற்சாகம்! ரேட்டை கரெக்டா ஃபிக்ஸ் பண்ணீட்டா சேல்ஸ் பிச்சுக்கும்

அதேபோல் டைகுன் எஸ்யூவி காரில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏராளமான சலுகைகளையும் வழங்கியுள்ளது. இதில், சன்ரூஃப், ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் ஸ்க்ரீன் மற்றும் மல்டி-ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் பற்றி வெளியான புதிய தகவலால் உற்சாகம்! ரேட்டை கரெக்டா ஃபிக்ஸ் பண்ணீட்டா சேல்ஸ் பிச்சுக்கும்

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன் இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களுடன் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி போட்டியிடும். இதில், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்களின் விற்பனை ஏற்கனவே மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் பற்றி வெளியான புதிய தகவலால் உற்சாகம்! ரேட்டை கரெக்டா ஃபிக்ஸ் பண்ணீட்டா சேல்ஸ் பிச்சுக்கும்

புதிதாக விற்பனைக்கு வந்துள்ள ஸ்கோடா குஷாக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வரிசையில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு விலை நிர்ணயம் மிகவும் சரியாக இருக்க வேண்டும்.

Most Read Articles

English summary
Volkswagen taigun official india launch timeline
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X