இறுதிக்கட்ட சோதனையில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் & ஸ்கோடா குஷாக்!! எது முதலில் அறிமுகமாகும்?

ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் கார்கள் பொது சாலையில் ஒன்றாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பான ஸ்பை படங்களை இனி பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் -ஸ்கோடா நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் தான் டைகுன் மற்றும் குஷாக் ஆகும். இவை இரண்டும் கிட்டத்தட்ட இந்திய அறிமுகத்தை நெருங்கிவிட்டன.

இதில் முதலாவதாக ஸ்கோடா குஷாக் வருகிற ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகஸ்ட்டில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இவை இரண்டும் இந்தியாவின் பல்வேறு சாலைகளில் சோதனைகளில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தற்போது இந்தியன் ஆட்டோஸ் ப்ளாக் செய்திதளத்தின் மூலமாக கிடைத்துள்ள ஸ்பை வீடியோவில் இந்த இரு காம்பெக்ட் எஸ்யூவி கார்களும் ஒன்றாக சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளதை பார்க்கலாம்.

இந்த சோதனையில் கிட்டத்தட்ட ஐந்து கார் மாதிரிகள் ஈடுப்படுத்தப்ப்பட்டுள்ளன. இதில் சில குஷாக், டைகுன் கார்கள் மறைப்பால் மறைக்கப்பட்டும், சில கார்கள் மறைப்பால் மறைக்கப்படாமலும் உள்ளன. இதனால் இது இவற்றின் இறுதிக்கட்ட சோதனை ஓட்டமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

எனவே இந்த சோதனை மாதிரிகளை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இயக்கி பார்த்திருக்கலாம். இதில் மறைப்பால் மறைக்கப்பட்ட டைகுன் கார்களின் அலாய் சக்கரங்களை வைத்து பார்க்கும்போது அவை விலை குறைவான வேரியண்ட்களாக இருக்கலாம்.

டைகுன் காரை பற்றிய விபரங்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுவிட்டாலும், இந்த காரின் விலை குறைவான வேரியண்ட்களை பற்றிய விபரங்களை வெளியிடவில்லை. இதனால் தான் இவை மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா குஷாக்கை பொறுத்தவரையில், ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் இந்தியா 2.0 திட்டத்தின் முதல் காராக எம்க்யுபி-ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவரவுள்ளது. தோற்றத்தில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இந்திய சந்தையில் விற்பனையில் சக்கை போடு போட்டுவரும் கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டாவை காட்டிலும் சிறியவை ஆகும்.

ஆனால் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் நன்கு நீளமானதாகவே உள்ளது. இதனால் அந்த தென்கொரிய எஸ்யூவி கார்களை போன்று இவற்றின் கேபினும் நன்கு விசாலமானதாக இருக்கும். என்ஜின் தேர்வுகளை இந்த ஃபோக்ஸ்வேகன் & ஸ்கோடா கார்கள் கூட்டணி கொள்கையினால் ஒரே மாதிரியாகவே பெற்றுவரவுள்ளன.

இவற்றில் இரு பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக கொடுக்கப்பட உள்ளன. இதில் ஒன்றான ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎஸ் மற்றும் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. மற்றொரு பெட்ரோல் என்ஜின் தேர்வாக 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Volkswagen Taigun, Skoda Kushaq Spied Together Undergoing Final Tests.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X