முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! அறிமுகம் இந்த வருடத்திலா?

ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! அறிமுகம் இந்த வருடத்திலா?

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தற்சமயம் இந்திய சந்தைக்கான புதிய எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. இந்தியா 2.0 திட்டத்தில் கொண்டுவரப்படும் இந்த எஸ்யூவி காருக்கு டைகுன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! அறிமுகம் இந்த வருடத்திலா?

முதன்முதலாக கடந்த ஆண்டு துவக்கத்தில் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த எஸ்யூவி காரின் அறிமுகம் குறித்த விபரங்கள் எதுவும் அதன்பின் பெரிய அளவில் வெளியானதுபோல் தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது டைகுன் முதன்முறையாக சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! அறிமுகம் இந்த வருடத்திலா?

காடிவாடி செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள இதுதொடர்பான ஸ்பை படங்களில் சோதனை டைகுன் காரின் தோற்றம் கிட்டத்தட்ட ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரை ஒத்து காணப்படுகிறது. இரண்டிற்கும் இடையே மிக பெரிய மாற்றம் எதுவென்று பார்த்தால், டெயில்லைட் தான்.

முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! அறிமுகம் இந்த வருடத்திலா?

மறைக்கப்பட்டிருப்பினும் இந்த சோதனை காரின் டெயில்லைட், ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடலை பெரிதும் ஒத்து காணப்படுகிறது. இதுதவிர்த்து பின்பக்கம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளை டைகுனும் குஷாக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே கொண்டுள்ளன.

முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! அறிமுகம் இந்த வருடத்திலா?

சோதனை டைகுன் கார் முழுவதும் மறைக்கப்பட்டிருப்பதால் அதன் வெளிப்புற தோற்றத்தை பற்றி கருத்து தெரிவிப்பது தற்போதைக்கு சரியாக இருக்காது. மேற்கூரை தண்டவாளங்கள் மற்றும் சுறா துடுப்பு போன்ற ஆண்டெனாவை இந்த சோதனை கார் கொண்டுள்ளதால் ஃபோக்ஸ்வேகன் டைகுன் பார்ப்பதற்கு முரட்டுத்தனமான தோற்றத்தில் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! அறிமுகம் இந்த வருடத்திலா?

டைகுனும் குஷாக்கும் ஃபோக்ஸ்வேகன் -ஸ்கோடா கூட்டணியின் எம்க்யூபி ஏ0 ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ப்ளாட்ஃபாரத்தினால் இந்த இரு எஸ்யூவி கார்களை 90 சதவீதத்திற்கும் மேல் இந்தியாவிலேயே தயாரித்துள்ளதாக இவை கூறியுள்ளன.

முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! அறிமுகம் இந்த வருடத்திலா?

கூட்டணி கொள்கைகளினால் ஸ்கோடா குஷாக்கில் வழங்கப்படவுள்ள அதே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (110 பிஎஸ்) மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் (150 பிஎஸ்) என்ஜின்கள்தான் தேர்வுகளாக ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! அறிமுகம் இந்த வருடத்திலா?

இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், 1.0 லிட்டர் என்ஜினிற்கு கூடுதல் தேர்வாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனும், 1.5 லிட்டர் என்ஜினிற்கு 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ட்ரான்ஸ்மிஷனும் வழங்கப்படவுள்ளது. இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் 2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Volkswagen Taigun Spied Testing In India For The First Time
Story first published: Friday, January 29, 2021, 12:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X