முதன்முறையாக மறைப்பின்றி இந்திய சாலையில் உலாவந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன்!! ஸ்பை வீடியோ வெளியீடு!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. டைகுன் என்ற பெயரில் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி கார் இந்தியா 2.0 தத்துவத்தின் அடிப்படையில் கொண்டுவரப்படுகிறது.

முதன்முறையாக மறைப்பின்றி இந்திய சாலையில் உலாவந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன்!! ஸ்பை வீடியோ வெளியீடு!

2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்த கார் இந்திய சாலையில் பலமுறை சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதை பார்த்திருக்கிறோம்.

முதன்முறையாக மறைப்பின்றி இந்திய சாலையில் உலாவந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன்!! ஸ்பை வீடியோ வெளியீடு!

ஆனால் முதன்முறையாக தற்போது எந்தவொரு மறைப்பும் இல்லாமல் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார் பொது சாலையில் காட்சி தந்துள்ளது. ஃபேட் பைக்கர் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் இந்த எஸ்யூவி கார் சாலையில் இயக்கத்தின்போது எப்படி இருக்கும் என்பதை பார்க்க முடிகிறது.

மேலும், இந்த சோதனை ஓட்டத்தில் டைகுனின் விலை குறைவான மற்றும் விலை அதிகமான என இரு விதமான வேரியண்ட்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இவை இரண்டிற்கும் இடையே என்னென்ன வித்தியாசங்கள் உள்ளன என்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

முதன்முறையாக மறைப்பின்றி இந்திய சாலையில் உலாவந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன்!! ஸ்பை வீடியோ வெளியீடு!

டாப் வேரியண்ட்டில் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகள், எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லைட்களுக்கு மேலே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அதுவே விலை குறைவான வேரியண்ட்டில் எல்இடி டிஆர்எல்கள் இரட்டை-பேட் ஹலோஜன் ஹெட்லேம்ப்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ளன.

முதன்முறையாக மறைப்பின்றி இந்திய சாலையில் உலாவந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன்!! ஸ்பை வீடியோ வெளியீடு!

விலை குறைவான வேரியண்ட்டில் ஃபாக் விளக்குகள் இல்லை. அதேபோல் அலாய் சக்கரங்களும் வித்தியாசமான டிசைனில் உள்ளன. மேலும் மேற்கூரை தண்டவாளங்களும் இரண்டிலும் வேறுப்படுகின்றன.

முதன்முறையாக மறைப்பின்றி இந்திய சாலையில் உலாவந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன்!! ஸ்பை வீடியோ வெளியீடு!

இரண்டிலும் முன்பக்கத்தில் தடிமனான க்ரோம் ஒன்று பம்பரின் மீது செல்கிறது. இந்த க்ரோம் அப்படியே இரு முனைகளிலும் உள்ள ஃபாக் விளக்குகளை சுற்றி வளைத்துள்ளது. காரின் முன்பக்க தோற்றம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கே உண்டான எளிமையான லைன்களுடன் உள்ளன.

முதன்முறையாக மறைப்பின்றி இந்திய சாலையில் உலாவந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன்!! ஸ்பை வீடியோ வெளியீடு!

இவற்றினால் ஸ்கோடா குஷாக்கை காட்டிலும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் சாலை ஆக்கிரமிப்பு உண்மையில் சிறப்பானதாக உள்ளது. டைகுனில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ற இரு விதமான பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட உள்ளன.

முதன்முறையாக மறைப்பின்றி இந்திய சாலையில் உலாவந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன்!! ஸ்பை வீடியோ வெளியீடு!

டீசல் என்ஜின் வழங்கப்பட போவதில்லை. ஸ்கோடா குஷாக்கிலும் வழங்கப்பட உள்ள இந்த பெட்ரோல் என்ஜின்களுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் என்ற இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளாக கொடுக்கப்பட உள்ளன.

முதன்முறையாக மறைப்பின்றி இந்திய சாலையில் உலாவந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன்!! ஸ்பை வீடியோ வெளியீடு!

டைகுன் நடுத்தர-அளவு எஸ்யூவி காரின் அறிமுகத்தை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது வரையில் அறிவிக்கவில்லை. விற்பனையில் இந்த காருக்கு ஸ்கோடா குஷாக் மட்டுமின்றி ஹூண்டாய் க்ரெட்டா, எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் மற்றும் டாடா ஹெரியர் உள்ளிட்டவையும் போட்டியாக விளங்கவுள்ளன.

Most Read Articles

English summary
Volkswagen Taigun compact spotted on Indian roads without camouflag.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X