கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு நெருக்கடி... ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கான முன்பதிவு தொடக்கம்!

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு நெருக்கடி... ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கான முன்பதிவு தொடக்கம்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சமீபத்தில் டைகுன் காரை வெளியிட்டது. இது புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஆகும். இந்த சூழலில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் நேற்று (ஆகஸ்ட் 9) முதல் ஏற்கப்பட்டு வருகின்றன. முன்பதிவுகள் தொடங்கப்பட்டிருக்கும் தகவலை ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார் இந்தியா இயக்குனர் ஆஷிஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு நெருக்கடி... ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கான முன்பதிவு தொடக்கம்!

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் இந்த காரின் ஆரம்ப விலை 10 லட்ச ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 17 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகவும் சவால் நிறைந்த செக்மெண்ட்டில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் விரைவில் நுழையவுள்ளது.

கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு நெருக்கடி... ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கான முன்பதிவு தொடக்கம்!

இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் மற்றும் ஸ்கோடா குஷாக் உள்ளிட்ட கார்களுடன் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போட்டியிடவுள்ளது. மொத்தம் 5 வண்ண தேர்வுகளில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கிடைக்கும். வைல்டு செர்ரி ரெட், கேண்டி ஒயிட், கார்பன் ஸ்டீல் க்ரே, கர்குமா யெல்லோ, ரெஃப்லெக்ஸ் சில்வர் ஆகிய 5 வண்ண தேர்வுகள் வழங்கப்டவுள்ளன.

கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு நெருக்கடி... ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கான முன்பதிவு தொடக்கம்!

அதே சமயம் இன்டீரியரில் சிகப்பு நிற தையல் வேலைப்பாடுகளுடன் ட்யூயல் டோன் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி வழங்கப்படவுள்ளது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரில், 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் என மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன. இதில், 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு நெருக்கடி... ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கான முன்பதிவு தொடக்கம்!

அதே சமயம் 1.5 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த இரண்டு இன்ஜின்கள் உடனும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படவுள்ளது. அதே சமயம் 1.0 லிட்டர் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படவுள்ளது.

கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு நெருக்கடி... ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கான முன்பதிவு தொடக்கம்!

1.5 லிட்டர் இன்ஜின் உடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ட்யூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படவுள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் பேடில் ஷிஃப்டர்கள் வசதியையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கவுள்ளது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரை சமீபத்தில் நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு நெருக்கடி... ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கான முன்பதிவு தொடக்கம்!

அப்போது இந்த புதிய எஸ்யூவி பல்வேறு அம்சங்களில் எங்களை கவர்ந்தது. இந்த எஸ்யூவி காரில் ஏராளமான வசதிகளையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கியுள்ளது. இதில், 10.2 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் முக்கியமானது. மேலும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வசதிகள் உடன் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் கொடுக்கப்படவுள்ளது.

கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு நெருக்கடி... ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கான முன்பதிவு தொடக்கம்!

அத்துடன் வயர்லெஸ் சார்ஜர், கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், கூல்டு க்ளவ்பாக்ஸ், ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், மல்டிஃபங்ஷன் லெதர் ஸ்டியரிங் வீல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் டைகுன் எஸ்யூவி காரில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்குகிறது.

கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு நெருக்கடி... ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கான முன்பதிவு தொடக்கம்!

பாதுகாப்பை பொறுத்தவரை, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்படவுள்ளன. மேலும் எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லேம்ப்கள் ஆகியவற்றையும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி பெற்றுள்ளது.

கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு நெருக்கடி... ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கான முன்பதிவு தொடக்கம்!

இதுதவிர ஆம்பியண்ட் லைட்டிங், முன் பகுதி இருக்கைகளில் வென்டிலேட்டட் வசதி, எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரில் வழங்கப்படவுள்ளன. எனவே அனைத்து அம்சங்களிலும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற காராக ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு நெருக்கடி... ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கான முன்பதிவு தொடக்கம்!

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார், MQB A0 IN பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரிலும் இதே பிளாட்பார்ம்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. செலவுகளை குறைப்பதற்காக இந்தியாவிற்கு என பிரத்யேகமாக இந்த புதிய பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு நெருக்கடி... ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கான முன்பதிவு தொடக்கம்!

தற்போதைய நிலையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் எஸ்யூவி காருக்கு என்ன விலையை நிர்ணயம் செய்ய போகிறது? என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயம் சரியாக இருந்தால், ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி நிச்சயமாக இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles

English summary
Volkswagen taigun suv bookings open here are all the details
Story first published: Tuesday, August 10, 2021, 11:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X