ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்காக காத்திருப்பவர்களுக்கு சந்தோஷமான செய்தி... என்னனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரின் உற்பத்தி புனேவிற்கு அருகே உள்ள தொழிற்சாலையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த காருக்காக காத்திருப்பவர்கள் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்காக காத்திருப்பவர்களுக்கு சந்தோஷமான செய்தி... என்னனு தெரியுமா?

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அருகே உள்ள தொழிற்சாலையில் டைகுன் மிட்-சைஸ் எஸ்யூவி காரின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. மேலும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப்கள் மற்றும் ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் ஆன்லைன் பிளாட்பார்மிலும் இந்த மிட்-சைஸ் எஸ்யூவிக்கான முன்பதிவு நடந்து வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்காக காத்திருப்பவர்களுக்கு சந்தோஷமான செய்தி... என்னனு தெரியுமா?

இந்த 5 சீட்டர் கார், மிகவும் சவால் நிறைந்த செக்மெண்ட்டில் நுழையவுள்ளது. கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஸ்கோடா குஷாக் உள்ளிட்ட கார்கள், ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவிக்கு முக்கியமான போட்டியாளர்களாக இருக்கும். MQB A0 IN பிளாட்பார்ம் அடிப்படையில், ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்காக காத்திருப்பவர்களுக்கு சந்தோஷமான செய்தி... என்னனு தெரியுமா?

சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஸ்கோடா குஷாக் எஸ்யூவியிலும் இதே பிளாட்பார்ம்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார், முதன் முதலில் கடந்த 2020ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில், கிட்டத்தட்ட தயாரிப்பிற்கு உகந்த நிலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்காக காத்திருப்பவர்களுக்கு சந்தோஷமான செய்தி... என்னனு தெரியுமா?

தற்போது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி விட்டது. வரும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் எஸ்யூவி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப தற்போது உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்காக காத்திருப்பவர்களுக்கு சந்தோஷமான செய்தி... என்னனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் எஸ்யூவி காருக்கான விலையை மிக சவாலாக நிர்ணயம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போட்டியாளர்களை எதிர்கொள்வதற்கும், வாடிக்கையாளர்களை கவர்வதற்கும் உதவியாக இருக்கும். ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரில், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி பகல் நேர விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்காக காத்திருப்பவர்களுக்கு சந்தோஷமான செய்தி... என்னனு தெரியுமா?

அத்துடன் எல்இடி பனி விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் C வடிவ எல்இடி டெயில்லைட்கள், 17 இன்ச் அலாய் வீல்கள், க்ரே வண்ணத்தில் ரூஃப் ரெயில்கள் ஆகியவற்றையும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி பெற்றுள்ளது. செயல்திறனை பொறுத்தவரை ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரில், 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்காக காத்திருப்பவர்களுக்கு சந்தோஷமான செய்தி... என்னனு தெரியுமா?

இதில், 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இதுதவிர 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர், டிஎஸ்ஐ டர்போசார்ஜடு பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார் பெற்றுள்ளது. இதே இன்ஜின் தேர்வுகள்தான் ஸ்கோடா குஷாக் காரிலும் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்காக காத்திருப்பவர்களுக்கு சந்தோஷமான செய்தி... என்னனு தெரியுமா?

இதில், 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு ஆகவும், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனலாகவும் வழங்கப்படும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்காக காத்திருப்பவர்களுக்கு சந்தோஷமான செய்தி... என்னனு தெரியுமா?

அதே சமயம் டாப் வேரியண்ட்களில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி தேர்விலும் கிடைக்கும். ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து விட்டோம். அப்போது இந்த கார் செயல்திறனில் எங்களை வெகுவாக கவர்ந்தது. அதே நேரத்தில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்காக காத்திருப்பவர்களுக்கு சந்தோஷமான செய்தி... என்னனு தெரியுமா?

இதுதவிர முன் பகுதியில் வெண்டிலேட்டட் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது. விலை நிர்ணயம் சரியாக இருந்தால், ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி இந்திய சந்தையில் பெரும் வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்காக காத்திருப்பவர்களுக்கு சந்தோஷமான செய்தி... என்னனு தெரியுமா?

ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற வலுவான போட்டியாளர்கள் நிறைந்த செக்மெண்ட்டில் நுழைய இருப்பதால், இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் டைகுன் எஸ்யூவி காரின் விலையை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு உள்ளது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Most Read Articles
English summary
Volkswagen taigun suv production begins here are all the details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X