அசத்தலான புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி வெளியீடு... க்ரெட்டா, செல்டோஸ் போட்டியாளர்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு போட்டியாக வர இருக்கும் புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலின் பல முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு போட்டியாக வர இருக்கும் புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலின் பல முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். ஃபோக்ஸ்வேகன் குழுமம் இந்த ஆண்டு 4 புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் களமிறக்க உள்ளது. இந்த பட்டியலில் அதிக ஆவலை ஏற்படுத்திய டைகுன் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடலை இன்று இந்தியாவில் முறைப்படி வெளியிட்டுள்ளது ஃபோக்ஸ்வேகன். புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதாவது, ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் உள்ளிட்ட மாடல்கள் உள்ள அதிக சந்தைப் போட்டி நிறைந்த மார்க்கெட்டில் களமிறக்கப்பட உள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற இந்தியாவுக்கான பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்த மாடல் இப்போது தயாரிப்பு நிலைக்கு உகந்ததாக வெளியிடப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் பிற எஸ்யூவி மாடல்களின் டிசைன் தாத்பரியங்களுடன் சில மாற்றங்களுடன் தனித்துவம் பெற்றுள்ளது. இந்த கார் 4.2 மீட்டர் நீளமும், 2.6 மீட்டர் வீல்பேஸ் நீளம் கொண்டதாக இருக்கிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ஹனிகோம்ப் க்ரில் அமைப்பு, 17 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், சுறாத் துடுப்பு வடிவிலான ஆன்டெனா, எல்இடி டெயில் லைட்டுகள் முக்கிய அம்சங்களாக உள்ளன. டெயில் கேட்டில் TAIGUN என்ற பெயர் பதிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகிய அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன. புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் இரண்டு டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. முதலாவது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இரண்டாவது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்படும். புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் இதுவரை வெளியிடப்பவில்லை. வரும் மே மாதத்தில் இந்த எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் இந்த எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் குழுமம் இந்த ஆண்டு 4 புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் களமிறக்க உள்ளது. இந்த பட்டியலில் அதிக ஆவலை ஏற்படுத்திய டைகுன் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடலை இன்று இந்தியாவில் முறைப்படி வெளியிட்டுள்ளது ஃபோக்ஸ்வேகன்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதாவது, ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் உள்ளிட்ட மாடல்கள் உள்ள அதிக சந்தைப் போட்டி நிறைந்த மார்க்கெட்டில் களமிறக்கப்பட உள்ளது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன்

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற இந்தியாவுக்கான பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்த மாடல் இப்போது தயாரிப்பு நிலைக்கு உகந்ததாக வெளியிடப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் பிற எஸ்யூவி மாடல்களின் டிசைன் தாத்பரியங்களுடன் சில மாற்றங்களுடன் தனித்துவம் பெற்றுள்ளது. இந்த கார் 4.2 மீட்டர் நீளமும், 2.6 மீட்டர் வீல்பேஸ் நீளம் கொண்டதாக இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ஹனிகோம்ப் க்ரில் அமைப்பு, 17 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், சுறாத் துடுப்பு வடிவிலான ஆன்டெனா, எல்இடி டெயில் லைட்டுகள் முக்கிய அம்சங்களாக உள்ளன. டெயில் கேட்டில் TAIGUN என்ற பெயர் பதிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகிய அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன.

அசத்தலான புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி வெளியீடு

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் இரண்டு டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. முதலாவது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

இரண்டாவது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்படும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் இதுவரை வெளியிடப்பவில்லை. வரும் மே மாதத்தில் இந்த எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் இந்த எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Volkswagen has revealed Taigun SUV production version in India and expected to launch mid of this year.
Story first published: Wednesday, March 31, 2021, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X