ஜிடி வெர்சனிலும் அறிமுகமாகும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட உள்ள டைகுன் எஸ்யூவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்கள் குறித்த விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ஜிடி வெர்சனிலும் அறிமுகமாகும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

ஜெர்மனை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தைகான முற்றிலும் புதிய டைகுன் நடுத்தர-அளவு எஸ்யூவி காரை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இந்த எஸ்யூவி காரின் அறிமுகம் இந்தியாவில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய டைகுன் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

ஜிடி வெர்சனிலும் அறிமுகமாகும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்த சோதனையில் உட்படுத்தப்பட்டிருப்பது ஃபோக்ஸ்வேகன் டைகுனின் ஜிடி வேரியண்ட்டாகும். இது தொடர்பான ஸ்பை படங்கள் டீம் பிஎச்பி செய்திதளத்தின் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

ஜிடி வெர்சனிலும் அறிமுகமாகும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்த ஸ்பை படங்களில் சோதனை காரின் பின்பக்கத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. பின்பக்க கதவில் ஜிடி முத்திரை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி வெர்சனிலும் அறிமுகமாக உள்ளது உறுதியாகிறது.

ஜிடி வெர்சனிலும் அறிமுகமாகும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

மேலும், இந்த காரில் கருப்பு நிற ஸ்மோக்டு எஃபெக்ட் உடன் இருக்கும் எல்இடி டெயில்லைட்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளதையும் இந்த படங்கள் வெளிக்காட்டுகின்றன. சற்று தடிமனான க்ரோம் பார் ஒன்று பின்பக்கத்தில் சறுக்கு தட்டிற்கு மேலே பொருத்தப்பட்டுள்ளது.

ஜிடி வெர்சனிலும் அறிமுகமாகும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்த டைகுன் ஜிடி காரில் மேற்கூரையில் பொருட்களை கட்டி வைப்பதற்கான தண்டவாளங்களும் காரின் வெள்ளை நிறத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா கருப்பு நிறத்தில் உள்ளது.

ஜிடி வெர்சனிலும் அறிமுகமாகும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

ஒட்டுமொத்தத்தில், பின்பக்கமாக இருந்து பார்ப்பதில் இந்த ஜிடி வெர்சன் கிட்டத்தட்ட சமீபத்தில் வெளியிடப்பட்ட டைகுன் காரையே ஒத்து காணப்படுகிறது. இருப்பினும் இவை இரண்டிற்கும் இடையே அலாய் சக்கரங்களின் டிசைன் மாறுப்படலாம்.

ஜிடி வெர்சனிலும் அறிமுகமாகும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

ஸ்கோடா நிறுவனத்துடனான கூட்டணியில் இந்தியா 2.0 திட்டத்தில் வெளிவரும் முதல் ஃபோக்ஸ்வேகன் காரான டைகுன் எஸ்யூவி, இந்திய வாடிக்கையாளர்களுக்கென வடிவமைக்கப்பட்ட எம்க்யுபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட உள்ளது.

ஜிடி வெர்சனிலும் அறிமுகமாகும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்த ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி கார் கிட்டத்தட்ட 4.2 மீட்டரில் நீளத்தை கொண்டுள்ளது. பிரிவிலேயே சிறந்த நிலையில் 2,651மிமீ நீளத்தில் வீல்பேஸை பெற்றுள்ள டைகுனிற்கு இந்தியாவில் விற்பனையில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் போன்ற கார்கள் (இரண்டும் 2,610மிமீ-இல் வீல்பேஸை கொண்டவை) போட்டியாக விளங்க உள்ளன.

ஜிடி வெர்சனிலும் அறிமுகமாகும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இவை மட்டுமின்றி ஸ்கோடா குஷாக் உடனும் விற்பனையில் போட்டியிட உள்ள டைகுனில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போசார்ஜ்டு பெட்ரோல் (114 பிஎச்பி/ 250 என்எம்) மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் (147 பிஎச்பி/ 250 என்எம்) என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன.

ஜிடி வெர்சனிலும் அறிமுகமாகும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

ஆனால் இந்த காரின் ஜிடி வெர்சனில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டிஎஸ்ஐ என்ஜின் மட்டுமே கொடுக்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின்கள் இரண்டும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளில் வழங்கப்பட உள்ளன.

Most Read Articles

English summary
Volkswagen Taigun compact SUV spied testing in India ahead of launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X