டைகுன் பொதுபார்வைக்கு வரும் தேதி விபரம் வெளியானது... மீடியாவுக்கு கடிவாளம் போட்டது ஃபோக்ஸ்வேகன்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. இன்று பொது பார்வைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மாத இறுதியில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

டைகுன் பொதுபார்வைக்கு வரும் தேதி விபரம் வெளியானது... மீடியாவுக்கு கடிவாளம் போட்டது ஃபோக்ஸ்வேகன்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டைகுன் பொதுபார்வைக்கு வரும் தேதி விபரம் வெளியானது... மீடியாவுக்கு கடிவாளம் போட்டது ஃபோக்ஸ்வேகன்!

இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் டைகுன் அடிப்படையிலான புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி அண்மையில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. எனவே, அடுத்து டைகுன் எஸ்யூவியும் வருவது உறுதியானது.

டைகுன் பொதுபார்வைக்கு வரும் தேதி விபரம் வெளியானது... மீடியாவுக்கு கடிவாளம் போட்டது ஃபோக்ஸ்வேகன்!

இந்த சூழலில், இன்று கோவாவில் பத்திரிக்கையாளர் நிகழ்ச்சிக்கு ஃபோக்ஸ்வேகன் ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பான அழைப்பு வந்த உடனே, அது டைகுன் வெளியீட்டு விழாவாகவே கருதப்பட்டது. அது உண்மை என்றும் தெரிய வந்துள்ளது.

டைகுன் பொதுபார்வைக்கு வரும் தேதி விபரம் வெளியானது... மீடியாவுக்கு கடிவாளம் போட்டது ஃபோக்ஸ்வேகன்!

இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதேநேரத்தில், வரும் 31ந் தேதி காலை 10 மணி வரை டைகுன் செய்தி மற்றும் படங்களை வெளியிடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் 31ந் தேதி காலையில்தான் புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி பொது பார்வைக்கு வர இருக்கிறது.

டைகுன் பொதுபார்வைக்கு வரும் தேதி விபரம் வெளியானது... மீடியாவுக்கு கடிவாளம் போட்டது ஃபோக்ஸ்வேகன்!

கடந்த ஆண்டு பிப்ரவரியில் நொய்டாவில் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட டைகுன் கான்செப்ட் எஸ்யூவி தயாரிப்பு நிலை மாடலாக வெளியிடப்பட உள்ளது. ஆனால், பெரிய அளவிலான வித்தியாசங்கள் இருக்காது என்றே தெரிகிறது.

டைகுன் பொதுபார்வைக்கு வரும் தேதி விபரம் வெளியானது... மீடியாவுக்கு கடிவாளம் போட்டது ஃபோக்ஸ்வேகன்!

இந்த புதிய எஸ்யூவி ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. கான்செப்ட் மாடலானது 2,651 மிமீ வீல்பேஸ் நீளம் மற்றும் 205 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டதாக இருந்தது. ஆனால், தயாரிப்பு நிலை மாடலின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் சற்று குறைக்கப்பட்டு வரும் என்று தெரிகிறது.

டைகுன் பொதுபார்வைக்கு வரும் தேதி விபரம் வெளியானது... மீடியாவுக்கு கடிவாளம் போட்டது ஃபோக்ஸ்வேகன்!

ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட உள்ள 113 பிஎச்பி பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 148 பிஎச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.

டைகுன் பொதுபார்வைக்கு வரும் தேதி விபரம் வெளியானது... மீடியாவுக்கு கடிவாளம் போட்டது ஃபோக்ஸ்வேகன்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரூ.10 லட்சம் முதல் ரூ.17 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ரெனோ டஸ்ட்டர், மாருதி எஸ் க்ராஸ் மற்றும் விரைவில் வரும் ஸ்கோடா குஷாக் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். மிட்சைஸ் எஸ்யூவி மாடல்களுக்கும் இது போட்டியை தரும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles

English summary
Volkswagen has announced that the new Taigun SUV to Be unveiled on March 31.
Story first published: Wednesday, March 24, 2021, 10:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X