டைகுன் எஸ்யூவி காரின் இந்திய வருகை மீண்டும் உறுதிசெய்த ஃபோக்ஸ்வேகன்!! டீசர் வீடியோ வெளியீடு

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் டீசர் வீடியோவை மீண்டும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

டைகுன் எஸ்யூவி காரின் இந்திய வருகை மீண்டும் உறுதிசெய்த ஃபோக்ஸ்வேகன்!! டீசர் வீடியோ வெளியீடு

புதிய டைகுன் காரின் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ள இந்த டீசர் வீடியோவில் காரின் முன்பக்கம் மட்டுமே தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் காட்சி தருகிறது.

டைகுன் எஸ்யூவி காரின் இந்திய வருகை மீண்டும் உறுதிசெய்த ஃபோக்ஸ்வேகன்!! டீசர் வீடியோ வெளியீடு

ஃபோக்ஸ்வேகனின் இந்த புதிய எஸ்யூவி கார் ஏற்கனவே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. இந்திய சந்தைக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள டைகுன் எஸ்யூவி எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தை சார்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது.

டைகுன் எஸ்யூவி காரின் இந்திய வருகை மீண்டும் உறுதிசெய்த ஃபோக்ஸ்வேகன்!! டீசர் வீடியோ வெளியீடு

எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரம் ஃபோக்ஸ்வேகன் - ஸ்கோடா நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதே ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில்தான் இந்த இரு நிறுவனங்களில் இருந்து எதிர்காலத்தில் பெரும்பான்மையான தயாரிப்புகள் வெளிவரவுள்ளன.

டைகுன் எஸ்யூவி காரின் இந்திய வருகை மீண்டும் உறுதிசெய்த ஃபோக்ஸ்வேகன்!! டீசர் வீடியோ வெளியீடு

ஐரோப்பாவில் விற்பனையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் டி-கிராஸ் காரை பெரிய அளவில் ஒத்து காணப்படும் டைகுன் அதனை காட்டிலும் 100மிமீ நீளமானது மற்றும் உட்புற கேபினை சற்று கூடுதல் விசாலமானதாக பெற்றுள்ளது.

டைகுன் எஸ்யூவி காரின் இந்திய வருகை மீண்டும் உறுதிசெய்த ஃபோக்ஸ்வேகன்!! டீசர் வீடியோ வெளியீடு

இது இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும் என தயாரிப்பு நிறுவனம் நம்புகிறது. குறிப்பாக டி-க்ராஸ் மற்றும் டிகுவான் கார்களை போன்று புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் நகர்புற சாலைகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

டைகுன் எஸ்யூவி காரின் இந்திய வருகை மீண்டும் உறுதிசெய்த ஃபோக்ஸ்வேகன்!! டீசர் வீடியோ வெளியீடு

சுற்றிலும் எல்இடி தரத்தில் விளக்குகளை பெற்றுள்ள இந்த எஸ்யூவி கார் பின்பக்கத்தில் சிங்கிள்-பாரில் எல்இடி ப்ரேக் லேம்ப் மற்றும் பம்பரில் ஃபாக்ஸ் டிஃப்யூஸர் உடன் பெட்டகம் வடிவிலான தோற்றத்தை பெற்றுள்ளது. உட்புறம் கருப்பு மற்றும் க்ரே என்ற இரட்டை நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டைகுன் எஸ்யூவி காரின் இந்திய வருகை மீண்டும் உறுதிசெய்த ஃபோக்ஸ்வேகன்!! டீசர் வீடியோ வெளியீடு

டைகுனின் கேபினில் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், விரைவு-சார்ஜிங் யுஎஸ்பி ஸ்லாட்கள் மற்றும் அப்ளிகேஷன் சார்ந்த இணைப்பு வசதி உள்ளிட்டவற்றை சிறப்பம்சங்களாக எதிர்பார்க்கலாம்.

டைகுன் எஸ்யூவி காரின் இந்திய வருகை மீண்டும் உறுதிசெய்த ஃபோக்ஸ்வேகன்!! டீசர் வீடியோ வெளியீடு

இரண்டாவது இருக்கை வரிசை பிரத்யேகமான ஏசி துளைகளுடன் கால்களை நன்றாக மடக்கி நீட்டும் வகையில் நன்கு விசாலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் டைகுனில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது.

டைகுன் எஸ்யூவி காரின் இந்திய வருகை மீண்டும் உறுதிசெய்த ஃபோக்ஸ்வேகன்!! டீசர் வீடியோ வெளியீடு

அதிகப்பட்சமாக 113 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக கொடுக்கப்படவுள்ளன.

டைகுன் எஸ்யூவி காரின் இந்திய வருகை மீண்டும் உறுதிசெய்த ஃபோக்ஸ்வேகன்!! டீசர் வீடியோ வெளியீடு

ஆனால் இந்த எஸ்யூவி காரில் எந்தவொரு அனைத்து-சக்கர-ட்ரைவ் வேரியண்ட்டும் வழங்கப்பட போவதில்லை. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுனை 93 சதவீதம் இந்தியாவிலேயே தயாரிக்க திட்ட மிட்டுள்ளது. இதன் காரணமாக இதன் எக்ஸ்ஷோரூம் விலை மற்ற கார்களுக்கு போட்டியாக நிர்ணயிக்கப்படுவது உறுதி.

Most Read Articles

English summary
Volkswagen Taigun Teased Again On Social Media
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X