Just In
- 5 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 6 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 7 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 8 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- News
ஒட்டுமொத்த நாடும் தேடும் 'அந்த' ஒற்றை நபர்... பிரிட்டனில் பரபரப்பு... காரணம் இதுதான்
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கேமிரா கண்ணில் சிக்கிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் கார்!! மீண்டும் வருகிறதா?
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் கார் தற்போது சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் டிகுவானை கார் மாடலை இந்தியாவில் மீண்டும் அறிமுகம் அறிமுகப்படுத்தும் பணியில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஈடுப்பட்டு வருவதை அறிய முடிகிறது.

டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் கார் கவனிக்கத்தக்க டிசைன் அப்டேட்களை பெற்றுள்ளதை ஓவர் ட்ரைவ் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள ஸ்பை படங்களின் மூலம் அறிய முடிகிறது. ஏனெனில் சோதனை ஓட்டத்தில் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படவில்லை.

இதனால் காரின் முன்பக்கத்தில் இரட்டை L-வடிவ எல்இடி டிஆர்எல் விளக்குகள் மற்றும் ரீடிசைனில் முன்பக்க பம்பர் உள்ளிட்டவை ட்வின்-பேட் எல்இடி ஹெட்லேம்ப்கள் உடன் வழங்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது.

பின்பக்கத்தில் இந்த எஸ்யூவி கார் புதிய டெயில்லேம்ப் யூனிட்கள் மற்றும் க்ரோம் உள்ளீடுகளுடன் பம்பரை கொண்டுள்ளது. இதன் உட்புற கேபினில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர் இல்லா சார்ஜிங் மற்றும் புதிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் ஹெட்-யூனிட் முதலியவற்றை எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் காரில் 2.0 லிட்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் விற்பனையில் இருக்கும் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் இருந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகப்பட்சமாக 187 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

இதனுடன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் காரில் விலை குறைவான வேரியண்டிற்காக 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய வேரியண்ட் முன்சக்கரத்தின் மூலம் இயங்கும் விதத்தில் வழங்கப்படலாம்.