கொரோனா பரவல் எதிரொலி... புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் அறிமுகம் ஒத்தி வைப்பு!

கொரோனா பரவல் காரணமாக, புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் அறிமுகம் ஒத்தி வைப்பு!

இந்திய கார் சந்தையில் பிரிமீயம் ரக 5 சீட்டர் மாடலாக ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு பிஎஸ்-4 விதிகள் அமலுக்கு வந்தபோது, இதன் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், வடிவமைப்பில் சில கூடுதல் அம்ங்களுடன் மாற்றம் செய்யப்பட்டு பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக வர இருக்கிறது.

கடந்த மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்ட இந்த புதிய டிகுவான் எஸ்யூவி, வரும் மே மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் திட்டமிட்டு இருந்தது.

ஆனால், தற்போது கொரோனா பரவல் காரணமாக எழுந்துள்ள சூழலை கருத்தில்கொண்டு, இந்த எஸ்யூவியின் அறிமுகத்தை அந்நிறுவனம் தள்ளி வைத்துள்ளது.

அதாவது, ஏற்கனவே திட்டமிடப்பட்டதைவிட ஒரு மாதம் டிகுவான் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாகவும், ஜூனில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் கார்தேக்கோ தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான்

புதிய க்ரில் அமைப்பு, மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், மறுவடிவமைப்பு பெற்ற பம்பர் ஆகியவற்றுடன் முகப்பு மெருகேறி இருக்கிறது. பக்கவாட்டில் முக்கிய அம்சமாக, 18 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பின்புறத்தில் L வடிவிலான எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், கொட்டை எழுத்துக்களில் ஆங்கிலத்தில் டிகுவான் பெயர் பதிக்கப்பட்டு இருப்பது உள்ளிட்டவற்றுடன் புதிய பொலிவு பெற்றிருக்கிறது.

உட்புறத்தில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் பனோரமிக் சன்ரூஃப், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், 8 வே அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் அறிமுகம்

புதிய டிகுவான் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 4மோஷன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி ரூ.30 லட்சத்திற்குள் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஹூண்டாய் டூஸான், ஜீப் காம்பஸ் மற்றும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
According to report, Volkswagen has postponed the Tiguan facelift India launch to June, 2021.
Story first published: Friday, April 30, 2021, 17:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X